மருத்துவ குணங்கள் நிறைந்த சுக்குத்தூள்! இந்த பிரச்சினை எல்லாம் விலகிவிடுமாம்

மருத்துவ குணங்கள் நிறைந்த சுக்குத்தூள்! இந்த பிரச்சினை எல்லாம் விலகிவிடுமாம்

சுக்கில் அளவு கடந்த ஆரோக்கிய குணங்கள் நிறைந்துள்ளது. இதனை தினமும் எடுத்து கொள்வதன் மூலமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பலம் பெறுகிறது.

அந்தவகையில் சுக்குத்தூளை எப்படி சேர்த்தால் என்ன மாதிரியான நோய்கள் விலகும் என்பதை பார்ப்போம்.

 • சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை அடியோடு நீங்கிவிடும்.
 • ஈர், பேன் ஒழிந்துவிடும். சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவந்தால், பல்வலி தீரும். ஈறுகள் நன்றாக பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகிவிடும்.
 • சிறிதாக சுக்குடன், சின்ன வெங்காயத்தையும் அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் உடனடியாக அழியும்.
 • சுக்குடன், கொத்தமல்லியை சிறிதாக இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
 • சுக்கு, ஐந்து மிளகு அதோடு ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் அடியோடு முறிந்து விடும்.
 • சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
 • சிறிது சுக்குடன்,ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
 • சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
 • சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
 • தயிர்சாதத்துடன், சிறிதுசுக்கை பொடியாக்கி சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.
 • சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் ஏதேனும் இருந்தால் குறைந்துகொண்டே வரும்.
 • சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் குற்றிருமல் குணமாகி விடும்.

மருத்துவ குணங்கள் நிறைந்த சுக்குத்தூள்! இந்த பிரச்சினை எல்லாம் விலகிவிடுமாம் Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart