- 1

மருத்துவ குணங்கள் நிறைந்த ஏலக்காய் கஷாயம்! இந்த நோய் எல்லாம் பறந்துவிடும்

23 0

மருத்துவ குணங்கள் நிறைந்த ஏலக்காய் கஷாயம்! இந்த நோய் எல்லாம் பறந்துவிடும்

ஏலக்காய் வாசனை பொருளாக பார்க்கப்படும் நிலையில், அதில் பல இயற்கை நன்மைகள் உள்ளன.

ஏலக்காயில் சுண்ணாம்பு சத்து,பொட்டாசியம்,இரும்புச்சத்து,பாஸ்பரஸ்,சோடியம், விட்டமின் A,B மற்றும் C அனைத்தும் நிறைந்துள்ளது.

இதனை டீ. காபி, கஷாயம் போன்ற அனைத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தினம் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று தின்றாலே பல நோய்கள் குணமாகும் என்று சொல்லப்படுகின்றது.

அதிலும் ஏலக்காய் கஷாயம் மூக்கடைப்பு, மன அழுத்தப் பிரச்சினை,தலைசுற்றல், மயக்கம் போன்ற பல நோய்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது.

அந்தவகையில் தற்போது ஏலக்காய் கஷாயம் எப்படி குடித்தால் என்ன மாதிரியான மருத்துப்பயன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

- 3
Photo Credit: Thinkstock

  • நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.
  • மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ஏலக்காய் டீ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.
  • நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.
  • வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.
  • விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.
  • வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

மருத்துவ குணங்கள் நிறைந்த ஏலக்காய் கஷாயம்! இந்த நோய் எல்லாம் பறந்துவிடும் Source link

Related Post

- 5

தட்டையான வயிற்றை பெறுவதற்கு சூப்பர் டிப்ஸ்

Posted by - நவம்பர் 29, 2020 0
தட்டையான வயிற்றை பெறுவதற்கு சூப்பர் டிப்ஸ் தொப்பையினை குறைப்பதற்கு பல முயற்சிகள் செய்யப்படுகின்ற போதிலும் அவற்றில் அதிகளவானவை கைகொடுப்பதில்லை. இதனால் தொப்பை ஏற்படுவதை முன்னரே தடுத்து அழகிய…
- 7

உடலை நோய்கள் தாக்காமல் இருக்க எந்த நேரத்தில் எந்த டீ குடிக்கணும் தெரியுமா?

Posted by - ஏப்ரல் 20, 2020 0
Wellness lekhaka-Saravanan kirubananthan | Updated: Monday, April 20, 2020, 11:44 [IST] இந்தியர்களுக்கு தேநீர் என்பது சுவையான பானம் மட்டுமல்ல. அது ஒரு உணர்வு.…
உடல் எடைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு முறை

உடல் எடைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு முறை

Posted by - ஜூலை 16, 2020 0
திங்கள் - முதல் நாள்: காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடிக்கவும். முதல் நாள் முழுவதும் திட உணவு எதுவும்…
- 18

தாங்க முடியாத குதிகால் வலியா? இதோ மருந்து

Posted by - நவம்பர் 23, 2020 0
தாங்க முடியாத குதிகால் வலியா? இதோ மருந்து குதிகால் சதை, கணுக்கால் பூட்டு, உள்ளங்கால் ஆகியவை உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகமாக உள்ள இடங்களாகும்.…
- 20

ரத்த அணுக்களின் உற்பத்திக்கு “முட்டைக்கோஸ்”

Posted by - நவம்பர் 29, 2020 0
ரத்த அணுக்களின் உற்பத்திக்கு “முட்டைக்கோஸ்” முட்டைகோஸ் குளிர்மண்டல பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சிறிய செடி வகையைச் சார்ந்தது. மேலும் வெளிப்பக்கத்தில் இருக்கும் இலைகள் பச்சை நிறத்திலும், உட்பக்கத்தில்…

உங்கள் கருத்தை இடுக...