மத்திய அமைச்சர்களின் ஆதரவு… ட்விட்டருக்கு மாற்றாகுமா KOO?

ட்விட்டருக்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘கூ’ என்ற ஆப்பை இனிமேல் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்த சில மத்திய அமைச்சர்கள் கூ-வில் கணக்கைத் தொடங்கினார்கள். அவர்களோடு பா.ஜ.க-வினரும் இணைந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்தது ‘கூ’ ஆப்.

உலக அளவில் பொழுதுபோக்கைத் தவிர்த்துப் பார்த்தால் சமூக வலைத்தளங்களில் பேஸ்புக்கை விடவும் மிக முக்கிய இடத்தில் இருப்பது ட்விட்டர் தளம். பேஸ்புக்கை விடவும் இதில் பதிவிடப்படும் கருத்துகள் மிகச் சுருக்கமாக அமைவதோடு வேகமாகவும் மக்களைச் சென்றடைகிறது. அப்படிப்பட்ட ட்விட்டருக்கு எதிராக அதன் போட்டி ஆப் ஒன்று ட்விட்டரிலேயே ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது. ட்விட்டருக்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஆப்பான ‘KOO’ தற்போது ட்ரெண்ட் ஆகக் காரணம் என்ன ?

இந்தியாவில் மட்டுமல்ல பல்வேறு நாடுகளில் ட்விட்டருக்கும் அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவின் முந்தைய அதிபர் ட்ரம்புக்கும், ட்விட்டருக்கும் இடையே இருந்த மோதல் போக்கை உலகம் அறியும். பேஸ்புக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ட்விட்டர் அரசுடன் சில விஷயங்களில் ஒத்துப்போவதில்லை. ஒரு நாட்டின் அரசுக்கு எதிராகப் பதிவிடப்படும் கருத்துகளை நீக்குவதில்லை என்பது ட்விட்டர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் முதன்மையான ஒன்றாக இருக்கிறது. தற்போது இந்திய அரசும் ட்விட்டர் நிர்வாகமும் மோதிக் கொண்டது அது போல ஒரு விவகாரத்தில்தான். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்த ஒன்றாக மாறியபோதும் மத்திய அரசு பின்வாங்க மறுக்கிறது.

அப்ரமேய ராதாகிருஷ்ணன் (Aprameya Radhakrishna) மற்றும் மயங்க் பிதாவட்கா (Mayank Bidawatka) என்பவர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த ‘கூ’ ஆப். அப்ரமேய ராதாகிருஷ்ணன் தற்போது ஆப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவியில் இருக்கிறார். கடந்த வருடம் இந்த ஆப் வெளியிடப்பட்டிருக்கிறது. ட்விட்டருக்கு போட்டியாகக் கிட்டத்தட்ட அதேபோல வடிவமைக்கப்பட்டிருக்கிறது ‘கூ’. கடந்த வருடம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஆப்களுக்கான போட்டியில் கலந்து கொண்ட ‘கூ’ அதில் வெற்றியும் பெற்றது. அதேபோல பிரதமர் மோடியும் இந்த ஆப்பை குறிப்பிட்டுப் பேசியதால் ‘கூ’ பலரது கவனத்தையும் ஈர்த்தது.

கடந்த சில நாள்களாக ட்விட்டருடனான மோதல் காரணமாக இதன் டவுன்லோட் அதிகரித்திருக்கிறது. மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ரவிசங்கர், மற்றும் எடியூரப்பா, அனில்கும்ப்ளே, ஜக்கி வாசுதேவ் எனப் பலர் ‘கூ’ வில் கணக்கு தொடங்கி விட்டதாக அறிவித்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி இந்தியர்கள் ட்விட்டருக்கு பதிலாக ‘கூ’ வில் இணையவும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி சில மத்திய அரசு துறையின் கணக்குகளும் ‘கூ’வில் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதிக அளவில் கவனம் பெற்றதால் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் மூன்று மில்லியன் பேரால் டவுன்லோட் செய்யப்பட்டிருக்கிறது. ஆப்பிளின் ஆப் ஸ்டோரிலும் டவுன்லோட் செய்யப்படும் ஆப் வரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேறியிருக்கிறது.

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart