தேவையானவை :
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 100 கிராம் (நறுக்கியது)
பட்டை – 2 கிராம்
பூண்டு – 25 கிராம்
இஞ்சி – 25 கிராம்
லவங்கம் – 2 கிராம்
ஏலக்காய் – 2
பச்சை மிளகாய் – 10 கிராம்
மட்டன் – 200 கிராம்
சோம்பு – 5 கிராம்
மிளகாய்த்தூள் – 10 கிராம்
தனியா – 15 கிராம்
தேங்காய் – அரை மூடி
கொத்தமல்லி – ஒரு கட்டு
எண்ணெய் – 50 மில்லி
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை விழுதாக்கிக் கொள்ளவும்
2. தேங்காய், பச்சைமிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளவும்,
3. மட்டனை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி, தயிரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
4. கடாயில் எண்ணெயைக் காய வைத்து, எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு ஆகியவற்றை போட்டுத் தாளிக்கவும்.
5. அடுத்து வெங்காய விழுதையும் வதக்கவும். தக்காளியை வதக்கி மசாலா பொருட்களை சேர்க்கவும். நன்றாக பிரை செய்ய வேண்டும்.
6. மட்டனை சேர்த்து அதனுடன் அரைத்த தேங்காய் கலவை விழுதைச் சேர்க்கவும். போதுமான உப்பு சேர்த்து குறைந்த தீயில் வேக விட வேண்டும்.
7. மட்டனை இறக்குவதற்கு முன் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, கறி மசாலா தூள் சிறிதளவு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
8. நறுக்கிய கொத்தமல்லி இலையைத் தூவி அலங்கரிக்கவும்.
9. சாதம், தோசைக்குத் தொட்டுக்கொள்ள இந்த குருமா சுவையாக இருக்கும். இதே முறைப்படி மட்டனுக்குப் பதிலாக சிக்கன், மீன், நண்டு இவற்றை பயன்படுத்தியும் குருமா செய்யலாம்.