மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் வீதிகளில் பொங்கல் பானைகளுடன் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் வீதிகளில் பொங்கல் பானைகளுடன் போராட்டம்

தமிழர்கள் நேற்று உலகெங்கும் பட்டிப்பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடிய அதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் வீதிகளில் பொங்கல் பானைகளை வைத்து நேற்று போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பேசுபொருளாக இருக்கும் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கால்நடை வளர்ப்போர் நீண்ட காலமாக எதிர்நோக்கும் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு கோரி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சித்தாண்டி சந்தியில் ஒன்றுகூடிய கால்நடை பண்ணையாளர்கள் வீதிகளில் பொங்கல் பானைகளை வைத்து போராட்டத்தினை நடத்தியுள்ளனர்.

வாழைச்சேனை-மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்தும் இதன்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தாங்கள் தமது கால்நடைகள் வளர்க்க முடியாத வகையில் தங்களது நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் தினந்தினம் கால்நடைகள் கொல்லப்படும் சம்பவங்களும் இடம்பெறுவதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஒன்றிணைந்த பண்ணையாளர்கள் எமது நிலம் எமக்கு வேண்டும் எனப் பல கோஷங்களுடன் கண்டன போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான பா.அரியநேத்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன், தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன் உட்பட்ட ஊர்மக்கள், மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பண்ணையாளர்கள் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

வாழைச்சேனை-மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கு வந்த பொலிஸார் போராட்டக்காரர்களை அகற்றி போக்குவரத்தினை வழமை நிலைமைக்குக் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் வீதிகளில் பொங்கல் பானைகளுடன் போராட்டம்
Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart