மஞ்சள்காமாலைக்கு இயற்கை தீர்வு வேண்டுமா? இதோ 10 எளிய மருத்துவங்கள்
உயிரை கொல்லக்கூடிய மிக ஆபத்தான நோய்களில் ஒன்று தான் மஞ்சள் காமாலை.
பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது. சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்வது அவசியம். இல்லாவிடின் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.
அந்தவகையில் மஞ்சள் காமாலை சில எளிய மருத்துவங்கள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- அவுரி இலைகளையரைத்து, கொட்டைபாக்களவு, வெள்ளாடடுப் பாலில், கொள்ள, மஞ்சள் காமாலை தீரும்.
- ஆமணக்கு,கீழாநெல்லி இலைகள் சம அளவரைத்து, எலுமிசசையளவு, காலையில் கொள்ள மஞ்சள் காமாலை தீரும்.
- கரிசாலையிலைகளையரைத்து.கொட்டைபாக்களவு.தினம் 2வேளை, 200மிலி. மோரில் கொள்ள மஞ்சள் காமாலை தீரும்.
- கீழாநெல்லி இலைகளையரைதது,எலுமிச்சையளவு,250மிலி மோரில் சாப்பிட, மஞ்சள் காமாலை, நீரிழிவு குணமாகும்.
- வில்வ இலைச்சூரணம் 1தேக்கரண்டி,மஞ்சள்கரிசாலைச்சாறு 1தேக்கரண்டி கலந்து காலையில் சாப்பிட மஞ்சள் காமாலை தீரும்.
- அன்னபேதிச்செந்தூரம்200மிகி,ஏலாதிசூரணம் 1கிராம் 5,10மிலி தேனில் தினம் 2 வேளை கொள்ள மஞ்சள் காமாலை தீரும்.
- நிலவேம்பு இலைகளை குடிநீர் செய்து பருகிவர மஞ்சள் காமாலை கட்டுப்படும்.
- சிற்றாமணக்கு கொழுந்திலைகளையரைத்து,மோரில் கொள்ள மஞ்சள் காமாலை குணமாகும்.
- கரும்புச்சாறு 200மிலி காலையில் பருகிவர மஞ்சள்காமாலை கட்டுப்படும்.
- பொன்னாவாரை இலையுடன் சமன் கீழாநெல்லியரைத்து, நெல்லிக் காயளவு, காலைமாலை மோரில் கொடுக்க மஞ்சள் காமாலை தீரும்.
…
மஞ்சள்காமாலைக்கு இயற்கை தீர்வு வேண்டுமா? இதோ 10 எளிய மருத்துவங்கள் Source link