போன வருஷம் இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய கார்கள் எது தெரியுமா?.. டாப்10 கார்களின் லிஸ்ட்!!

போன வருஷம் இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய கார்கள் எது தெரியுமா?.. டாப்10 கார்களின் லிஸ்ட்!!

போன வருஷம் இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய கார்கள் எது தெரியுமா?.. டாப்10 கார்களின் லிஸ்ட்!!

இரண்டாம் அலை பரவல் வாயிலாக கொரோனா வைரஸ் இந்தியாவில் தாண்டவமாட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றது. இந்த வரைஸ் தனது கோர முகத்தை முதன் முதலில் கடந்த ஆண்டு மார்ச் மாத்திலேயே காட்டியது. அப்போது, அம்மாதம் முழுக்க முழு ஊரடங்கு நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டது.

போன வருஷம் இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய கார்கள் எது தெரியுமா?.. டாப்10 கார்களின் லிஸ்ட்!!

இதனால், மார்ச் மாதம் ஒரு யூனிட் வாகனம் கூட விற்பனையாகாத மாதமாக மாறியது. ஆனால் அடுத்தடுத்து வந்த மாதங்களில் வாகன விற்பனைச் சற்று சூடிபிடிக்கத் தொடங்கியது. குறிப்பாக, பண்டிகை நாட்களில் வாகன விற்பனை அமோகம் என்று கூறுமளவிற்கு விற்பனை மிக சிறப்பாக நடைபெற்றது.

போன வருஷம் இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய கார்கள் எது தெரியுமா?.. டாப்10 கார்களின் லிஸ்ட்!!

அந்தவகையில், 2020 ஏப்ரல் தொடங்கி 2021 மார்ச் இறுதி வரை இந்திய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற கார் எது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். டாப் 10 கார்களின் பட்டியலை இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம் வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

போன வருஷம் இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய கார்கள் எது தெரியுமா?.. டாப்10 கார்களின் லிஸ்ட்!!

மாருதி சுசுகி ஸ்விஃப்ட்

கடந்த நிதியாண்டில் (2020 ஏப்ரல் தொடங்கி 2021 மார்ச்) அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காரே முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 1,72,671 யூனிட்டுகளை விற்பனைச் செய்து இவ்விடத்தை ஸ்விஃப்ட் பிடித்துள்ளது. கடந்த ஆண்டும் இக்காரே முதல் இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

போன வருஷம் இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய கார்கள் எது தெரியுமா?.. டாப்10 கார்களின் லிஸ்ட்!!

மாருதி சுசுகி பலினோ

நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பலினோ கார் பிடித்துள்ளது. இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் ரக காராகும். கடந்த நிதியாண்டில் 1,63,445 யூனிட்டுகள் வரை பலினோ விற்பனையாகியிருக்கின்றது.

போன வருஷம் இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய கார்கள் எது தெரியுமா?.. டாப்10 கார்களின் லிஸ்ட்!!

மாருதி வேகன் ஆர்

கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருப்பதும் மாருதி நிறுவனத்தின் தயாரிப்பே ஆகும். ஒட்டுமொத்தமாக 1,60,330 யூனிட் வரை வேகன் ஆர் விற்பனையாகியிருக்கின்றது. இந்த மாபெரும் விற்பனை எண்ணிக்கையை அடுத்தே இக்கார் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று என்ற மகுடத்தைச் சூடியது.

போன வருஷம் இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய கார்கள் எது தெரியுமா?.. டாப்10 கார்களின் லிஸ்ட்!!

மாருதி சுசுகி ஆல்டோ

நாட்டின் புகழ்வாய்ந்த ஹேட்ச்பேக் கார் மாடல்களில் ஆல்டோவும் ஒன்று. இந்த கார் கடந்த நிதியாண்டைக் காட்டிலும் சென்ற நிதியாண்டில் 17 சதவீதம் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றது. இருப்பினும், தனது கெத்தை விட்டுக் கொடுக்காத வண்ணம் டாப் 10 அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஆல்டோ நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.

போன வருஷம் இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய கார்கள் எது தெரியுமா?.. டாப்10 கார்களின் லிஸ்ட்!!

மாருதி சுசுகி டிசையர்

இந்த காரின் பெயரை பார்த்த உடன் உங்களுக்கு சிறிய சந்தேகம் வந்திருக்கலாம். தொடர்ச்சியா மாருதி காரே வந்துட்டு இருக்கே எதும் தப்பா லிஸ்டா அடிச்சுட்டாங்களா என கேட்க தோன்றலாம். ஆனால், அதுதான் இல்லை சென்ற நிதியாண்டின் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலில் முதல் ஐந்து இடத்தை மாருதி நிறுவனத்தின் தயாரிப்பே பிடித்திருக்கின்றது.

போன வருஷம் இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய கார்கள் எது தெரியுமா?.. டாப்10 கார்களின் லிஸ்ட்!!

இந்த சிறப்பு நிகழ்வைக் கொண்டாடும் விதமாக மாருதி நிறுவனம் அண்மையில் ஓர் விளம்பரத்தையே வெளியிட்டது. ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கும் மாருதி டிசையர் காரும், ஆல்டோவைப் போல கணிசமான விற்பனையைச் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றது. இக்கார் 28 சதவீதம் வரை வீழ்ச்சியைப் பெற்றிருக்கின்றது.

போன வருஷம் இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய கார்கள் எது தெரியுமா?.. டாப்10 கார்களின் லிஸ்ட்!!

இருப்பினும், சென்ற நிதியாண்டின் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் டிசையர் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது. 1,28,251 யூன்ட்டுகளை விற்பனைச் செய்தே இவ்விடத்தை டிசையர் பிடித்துள்ளது.

போன வருஷம் இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய கார்கள் எது தெரியுமா?.. டாப்10 கார்களின் லிஸ்ட்!!

ஹூண்டாய் க்ரெட்டா

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காரும் ஒன்று. இந்த மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஒட்டுமொத்தமாக கடந்த நிதியாண்டில் 1,20,035 யூனிட் வரை விற்பனையாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா பொதுமுடக்கத்தில் சிக்கியிருந்த காலத்திலும் நல்ல விற்பனை விகிதத்தை இக்கார் பெற்றிருந்தது.

போன வருஷம் இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய கார்கள் எது தெரியுமா?.. டாப்10 கார்களின் லிஸ்ட்!!

மாருதி ஈகோ

மாருதி ஈகோ கார் கடந்த 2020-2021 நிதியாண்டில் அதிகபட்சமாக 1,05,081 யூனிட் வரை விற்பனையைப் பெற்றிருக்கின்றது. இந்த உச்சபட்ச எண்ணிக்கையைத் தொடர்ந்து நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியில் இக்கார் 7ம் இடத்தைப் பிடித்தது.

போன வருஷம் இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய கார்கள் எது தெரியுமா?.. டாப்10 கார்களின் லிஸ்ட்!!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

இந்த பட்டியலில் எட்டாம் இடத்தை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் நிரப்பியுள்ளது. 1,00,611 யூனிட் விற்பனையைப் பெற்று இந்த இடத்தை கிராண்ட் ஐ10 பிடித்துள்ளது. பன்முக சிறப்பம்சங்கள், அதிக பிரீமியம் வசதிகளைக் கொண்ட காராக கிராண்ட் ஐ10 இருப்பதால் இவ்விடத்தை அது பிடித்திருக்கின்றது.

போன வருஷம் இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய கார்கள் எது தெரியுமா?.. டாப்10 கார்களின் லிஸ்ட்!!

மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா

மாருதி நிறுவனத்தின் சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ப்ரெஸ்ஸாவும் ஒன்று. இது செக்மெண்டில் அதிகம் விற்பனையாகும் காரும்கூட. ஹூண்டாய் வென்யூ காருக்கு டஃப் கொடுக்கும் வகையில் விற்பனையில் இது இருந்து வருகின்றது.

போன வருஷம் இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய கார்கள் எது தெரியுமா?.. டாப்10 கார்களின் லிஸ்ட்!!

சென்ற நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக இக்கார் 94,635 யூனிட் வரை விற்பனையாகியுள்ளது. இந்த விற்பனையை அடுத்தே இக்கார் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் 9ம் இடத்தைப் பிடித்தது. இக்காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை மாருதி கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவிலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

போன வருஷம் இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய கார்கள் எது தெரியுமா?.. டாப்10 கார்களின் லிஸ்ட்!!

ஹூண்டாய் வென்யூ

நாம் இப்பட்டியலில் பார்க்க இருக்கும் கடைசி கார் ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி ஆகும். இந்த கார் அதிகபட்சமாக கடந்த நிதியாண்டில் 92,972 யூனிட் வரை விற்பனையாகியிருக்கின்றது. இந்த விற்பனை எண்ணிக்கையை அடுத்தே இக்கார் பத்தாம் இடத்தைப் பிடித்தது.போன வருஷம் இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய கார்கள் எது தெரியுமா?.. டாப்10 கார்களின் லிஸ்ட்!! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password