பொங்கல் பண்டிகைக்கு வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர் உருவாக்குவது எப்படி? பொங்கல் டிப்ஸ்..
வாட்ஸ்அப் ஸ்டிக்கர் உருவாக்குவது எப்படி?
- முதலில் உங்களுடைய ஆண்ட்ராய்டு போனில் ஸ்டிக்கர் மேக்கர் (Sticker Maker) ஆப்ஸை பதிவிறக்கம் செய்யுங்கள்.
- Create a new stickerpack என்பதை கிளிக் செய்யவும்.
- நீங்கள் உருவாக்கும் ஸ்டிக்கர் பேக்கிற்கு உரிமம் அல்லது தனி அடையாளம் வேண்டுமென்றால் உங்கள் ஸ்டிக்கர் பேக்கிற்கான பெயர் மற்றும் உருவாக்கிய நபர் பெயரை குறிப்பிடுங்கள்.

செலக்ட் போட்டோஸ்..
- அடுத்த திரையில் 30 டைல்களை பார்ப்பீர்கள். இவற்றில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்து, பின்னர் Take Photo, Open Gallery, or Select File செலக்ட் செய்யவும்.
வாட்ஸ்அப் குரூப்பை அப்படியே புதிய பொலிவுடன் சிக்னல் ஆப்ஸிற்கு ஈஸியா மாற்றலாம்.. எப்படி தெரியுமா?

போட்டோ செலக்ட் செய்யும் முறைகளும் விளக்கமும்
முதல் விருப்பம் உங்களை கேமரா மூலம் படம் எடுக்க அனுமதிக்கிறது, இரண்டாவது விருப்பம் புகைப்படத்தை கேலரியில் இருந்து எடுத்துப் பயன்படுத்த அனுமதிக்கிறது, மூன்றாவது விருப்பம் உங்களை ஃபைல் மேனேஜர் மூலம் படங்களைத் தேர்ந்தெடுக்க உங்களை அனுமதிக்கிறது.

ஸ்டிக்கரை எப்படி சேவ் செய்வது?
அடுத்த கட்டம், நீங்கள் தேர்வு செய்த புகைப்படத்தை crop செய்ய அனுமதிக்கிறது. Freehand அல்லது Cut square அல்லது Cut circle ஆகிய கிராபிங் முறைகளிலிருந்து ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கிராபிங் செய்யுங்கள். கிராபிங் செய்து முடித்த பின்னர் Yes, Save Sticker என்பதை கிளிக் செய்யுங்கள்.
இன்ஸ்டன்ட் லோன் வாங்க போறீங்களா? அப்போ உஷாரா இருக்கனும், இல்லைனா சிக்கல் தான்.. எச்சரிக்கும் SBI..

ஸ்டிக்கர் பட்டியலில் உங்களுடைய ஸ்டிக்கர்கள்
- நீங்கள் மூன்று ஸ்டிக்கர்களைச் சேர்த்தவுடன், Add to WhatsApp சேர் என்பதைத் கிளிக் செய்யுங்கள். இப்போது வாட்ஸ்அப்பைத் திறந்து, கீழே உள்ள emoji icon > stickers icon கிளிக் செய்யவும். இப்போது உங்கள் புதிய ஸ்டிக்கர் பேக்கை ஸ்டிக்கர் பட்டியலில் கடைசியாக இருப்பதைப் பார்க்கலாம்.

எளிதாக ஷேர் செய்து மகிழுங்கள்
ஒரு ஸ்டிக்கர் பேக்கை டெலீட் செய்ய, ஸ்டிக்கர் பேக் மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகள் ஐகானை கிளிக் செய்து டெலீட் செய்யவும். இப்பொழுது உங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர் பேக்கை உருவாக்கிவிட்டீர்கள், இனி வழக்கம் போல் உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு சென்ட் செய்து மகிழுங்கள்.
பொங்கல் பண்டிகைக்கு வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர் உருவாக்குவது எப்படி? பொங்கல் டிப்ஸ்.. Source link
Tags: How to Tech