பைடன் அரசின் புதிய வரி விதிப்புத் திட்டம்.. இந்தியாவுக்குப் பாதிப்பு..!

பைடன் அரசின் புதிய வரி விதிப்புத் திட்டம்.. இந்தியாவுக்குப் பாதிப்பு..!

 28 சதவீத வரி

28 சதவீத வரி

உலக நாடுகளில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் தங்களது லாபத்தில் குறைந்தபட்சம் 28 சதவீத வரியை பிற நாடுகளில் செலுத்தாத பட்சத்தில், அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் அந்த அமெரிக்க நிறுவனம் அல்லது வெளிநாட்டு நிறுவனம் அல்லது பன்னாட்டு நிறுவனம் மீது கூடுதல் உள்நாட்டு வரி விதிக்க ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டம் தீட்டி வருகிறது.

 அமெரிக்காவின் முடிவு

அமெரிக்காவின் முடிவு

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இந்தியாவின் புதிய வரி விதிப்பு முறை பாதித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி துறையை மேம்படுத்த புதிய முதலீடுகளைப் பெறும் முயற்சியில் 2019ல் புதிய வரிக் கொள்கை அறிவித்தது. அமெரிக்க அரசின் இந்த பரிந்துரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 2019 வரிச் சலுகை திட்டம்

2019 வரிச் சலுகை திட்டம்

2019ல் மத்திய அரசு இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்கும் நிறுவனங்களுக்குச் சலுகை திட்டத்தின் வாயிலாக 15 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டது.

 இந்தியா வருகை

இந்தியா வருகை

இந்த அறிவிப்பால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் அமெரிக்க அரசு தற்போது செய்துள்ள கூடுதல் வரி பரிந்துரை புதிதாக வந்துள்ள நிறுவனங்களைப் பாதிக்கும்.

 வரித் துறை அதிகாரிகள்

வரித் துறை அதிகாரிகள்

இந்தியாவில் 15 சதவீதம் வரி இருக்கும் காரணத்தால் அமெரிக்காவின் பெரும் மற்றும் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவிலோ அல்லது பிற நாடுகளிலோ உற்பத்தி தொழிற்சாலை அமைத்திருக்கும், அல்லது அமைக்கத் திட்டமிட்டு இருக்கும், இதனாலேயே அமெரிக்க அரசு கூடுதல் வரி என்ற புதிய திட்டத்தை அமலாக்கம் செய்துள்ளது என வரித் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

 அமேசானின் சென்னை தொழிற்சாலை

அமேசானின் சென்னை தொழிற்சாலை

மேலும் அமெரிக்க அரசு இந்தக் கூடுதல் வரியை எப்படி விதிக்கும் என்று முழுமையாகத் தகவலை வெளியிடவில்லை. மேலும் ஜோ பைடன் அரசின் இந்த பரிந்துரை அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே நடை முறைக்கு வரும். சமீபத்தில் அமேசான் சென்னையில் புதிய உற்பத்தி தளத்தை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

 உற்பத்தி - ஏற்றுமதி கனவுகள்

உற்பத்தி – ஏற்றுமதி கனவுகள்

இப்புதிய வரியால் ஏற்கனவே இந்தியாவில் வரிச் சலுக்கை பெற்று வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், புதிதாக வரிச் சலுகை பெற்று உற்பத்தியை துவங்கும் நிறுவனங்களையும் பாதிக்கும். அமெரிக்காவின் இந்த முடிவு இந்தியாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கனவுகளைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

பைடன் அரசின் புதிய வரி விதிப்புத் திட்டம்.. இந்தியாவுக்குப் பாதிப்பு..! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password