பெண்ணுக்கு அறிவுரை – நாட்டுப்புற பாட்டு

704 0

ஆக்கவாணாம் அரிக்கவாணாம் -சுண்டெலிப்பெண்ணே
அறிவிருந்தால் போதுமடி -சுண்டெலிப்பெண்ணே 1
காத்திருந்தவன் பொண்டாட்டியைச் -சுண்டெலிப்பெண்ணே
நேத்துவந்தவன் கொண்டுபோனான் -சுண்டெலிப்பெண்ணே 2

அதனாலேதான் பயமாஇருக்கு -சுண்டெலிப்பெண்ணே
அக்கம்பக்கம் போகாதேடி ©சுண்டெலிப்பெண்ணே 3

கண்ணடிக்கிற பயலைக்கண்டால் -சுண்டெலிப்பெண்ணே
கண்ணெடுத்துப் பார்க்கேதேடி ©சுண்டெலிப்பெண்ணே 4

கடைக்குப்போற பயலைக்கண்டால் -சுண்டெலிப்பெண்ணே
கையலைப் பழைக்காதடி -சுண்டெலிப்பெண்ணே 5

காவாலிப் பயலைக்கண்டால் -சுண்டெலிப்பெண்ணே
காலாட்டிக்கிட்டு நிற்காதடி -சுண்டெலிப்பெண்ணே 6

நெற்றியிலே பொட்டுவைச்சு -சுண்டெலிப்பெண்ணே
நெருங்கிநிண்ணு பேசாதேடி ©சுண்டெலிப்பெண்ணே 7

புருவத்திலே மையைவச்சு -சுண்டெலிப்பெண்ணே
பொய்ஒண்ணுமே சொல்லாதேடி -சுண்டெலிப்பெண்ணே 8

ஜோட்டிலே மாட்டல்வச்சு -சுண்டெலிப்பெண்ணே
ஜோக்குநடை நடக்காதேடி -சுண்டெலிப்பெண்ணே 9

வெற்றிலைபாக்குப் போட்டுகிட்டுச்-சுண்டெலிப்பெண்ணே
வெறும்பயலைப் பார்க்கேதேடி -சுண்டெலிப்பெண்ணே 10

புகையிலையைப் போட்டுக்கிட்டுச் -சுண்டெலிப்பெண்ணே
பொடிப்பயலைப் பார்க்கதடி சுண்டெலிப்பெண்ணே 11

வாறவனையும் போறவனையும் -சுண்டெலிப்பெண்ணே
வழிமறிச்சுப் பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 12

சந்தைக்குப்போற சனங்களைநீ -சுண்டெலிப்பெண்ணே
ஜாடைப் பேச்சுப் பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 13

சலுக்காரு ரோட்டிலேநீ -சுண்டெலிப்பெண்ணே
சண்டைகிண்டை போடாதேடி -சுண்டெலிப்பெண்ணே 14

பக்கத்துவீட்டுப் பெண்களைச் -சுண்டெலிப்பெண்ணே
பரிகாசம்நீ பண்ணாதேடி -சுண்டெலிப்பெண்ணே 15

இடுப்புச் சிறுத்தவளே -சுண்டெலிப்பெண்ணே
இறுமாப்புநீ பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 16

மண்டை பெருத்தவளே -சுண்டெலிப்பெண்ணே
தண்டுமுண்டு பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 17
விரிச்சநெற்றிக் காரியே -சுண்டெலிப்பெண்ணே
வீறாப்புநீ பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 18

இரும்புநெஞ்சு படைத்த -சுண்டெலிப்பெண்ணே
குறும்புபொண்ணும்நீ செய்யாதேடி -சுண்டெலிப்பெண்ணே 19

மயிர்சுருண்டு நீண்டுவளர்ந்த -சுண்டெலிப்பெண்ணே
மரியாதைகெட்டுத் திரியாதேடி -சுண்டெலிப்பெண்ணே 20

உருட்டிஉருட்டி முழிக்கும் -சுண்டெலிப்பெண்ணே
திருட்டுத்தனம் பண்ணாதேடி -சுண்டெலிப்பெண்ணே 21

உதட்டழக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
ஒருத்தரையும் வையாதேடி -சுண்டெலிப்பெண்ணே 22

கிளiமூக்குக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
கிரித்துவரும் பண்ணாதேடி -சுண்டெலிப்பெண்ணே 23

பல்வரிசைக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
பழிஇழுத்துப் போடாதேடி -சுண்டெலிப்பெண்ணே 24

குறுங்கழுத்துக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
கோள்குண்டுணி சொல்லாதேடி -சுண்டெலிப்பெண்ணே 25

நாட்டுப்புற பாடல்கள் – தமிழ் DNA

பெண்ணுக்கு அறிவுரை

Related Post

சந்தனத் தேவன் பெருமை – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
எல்லாரு காடுதானும் -ஏலங்கிடி லேலோஏழைக்கேற்ற கரட்டுக்காடு- ஏலங்கிடி லேலோ 1 சந்தனம் காடுதானும்-ஏலங்கிடி லேலோசரியான பருத்திக்காடு – ஏலங்கிடி லேலோ 2 எல்லாரு வீடுதானும்-ஏலங்கிடி லேலோஏழைக்கேற்ற குச்சுவீடு…

விடிவெள்ளி நம்விளக்கு – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசாவிரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசாஅடிக்கும் அலையே நம்தோழன் – ஐலசாஅருமைமேகம் நமதுகுடை – ஐலசாபாயும் புயல் நம்ஊஞ்சல் – ஐலசாபனிமூட்டம் உடல்போர்வை –…

நிலா நிலா வாவா – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
நிலாநிலா வாவாநில்லாமே ஓடிவாமலைமேலே ஏறிவாமல்லிகைப்பூக் கொண்டுவா.நடுவீட்டில் வையேநல்ல துதி செய்யேவெள்ளிக் கிண்ணத்தில் பால்சோறுஅள்ளியெடுத்து அப்பன் வாயில்கொஞ்சிக் கொஞ்சி யூட்டுகுழந்தைக்குச் சிரிப்புக் காட்டு எட்டிஎட்டிப் பார்க்கும்வட்ட வட்ட நிலாவேதுள்ளித்துள்ளிச்…

கைவீசம்மா கைவீசு – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
கைவீ சம்மா கைவீசுகடைக்குப் போகலாம் கைவீசுமிட்டாய் வாங்கலாம் கைவீசுமெதுவாய்த் தின்னலாம் கைவீசு அப்பம் வாங்கலாம் கைவீசுஅமர்ந்து தின்னலாம் கைவீசுபூந்தி வாங்கலாம் கைவீசுபொருந்தி யுண்ணலாம் கைவீசுபழங்கள் வாங்கலாம் கைவீசுபரிந்து…

மழையை நம்பி ஏலேலோ – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசாமண்ணை நம்பி ஏலேலோ மரம்இருக்க ஐலசாமரத்தை நம்பி ஏலேலோ கிளைஇருக்க ஐலசாகிளையை நம்பி ஏலேலோ இலைஇருக்க ஐலசாஇலையைநம்பி ஏலேலோ பூவிருக்க…

உங்கள் கருத்தை இடுக...