பெண்களே! மாதவிடாய் வயிற்று வலியால் அவதிப்படுறீர்களா? இதனை குறைக்க இதோ சூப்பரான வழிமுறை

பெண்களே! மாதவிடாய் வயிற்று வலியால் அவதிப்படுறீர்களா? இதனை குறைக்க இதோ சூப்பரான வழிமுறை

​பொதுவாக மாதவிடாய் நாட்களில் வயிறு வலியை தடுக்கவே முடியாது. பெண்கள் இச்சமயங்களில் பெரிதும் அவஸ்தைப்படுவதுண்டு.

ஆனால் கட்டுக்குள் வைக்கலாம். அதே நேரம் வயிறு வலியை தடுக்க மாத்திரைகள் எடுத்துகொள்வது ஆபத்தானது ஆகும்.

இதனை குறைக்க ஒரு சில வீட்டில் இருக்கும் மருத்துவ பொருட்கள் உதவுகின்றன. அதில் சீரகம், வெந்தயம், பெருங்காயம் முக்கிய இடம் பெறுகின்றது.

எனவே இவற்றை எப்படி எடுத்து கொண்டால் ​வயிறு வலியை தடுக்க முடியும் என்பதை பார்ப்போம்.

​சீரக கஷாயம்

தேவையானவை

 • சீரகம்
 • பெருங்காயத்தூள்
 • இந்துப்பு

செய்முறை

மாதவிடாய் வலியை குறைக்க பத்து கிராம் சீரகத்துடன் 50 மில்லி அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இது பாதியாக வற்றி சுண்டியதும் இறக்கு அந்த நீரில் சிட்டிகை பெருங்காயத்தூள், இந்துப்பு சேர்த்து வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும்.

மாதவிடாய் நாளுக்கு முன்பு இரண்டு நாட்களிலிருந்து அல்லது மாதவிடாய் நாட்களில் காலையும் மாலையும் என உணவுக்கு முன்பு இதை குடிக்க வேண்டும்.

மாதவிடாய் நாட்களில் சிலருக்கு முதல் நாளில் வயிறு வலி இருக்கும். அவர்கள் மாதவிடாய் வருவதற்கான அறிகுறி இருக்கும் போதே இதை எடுத்துகொள்ளலாம்.

சிலருக்கு இரண்டாம் நாளில் வயிறு வலி இருக்கும். இவர்கள் முதல் நாளில் இந்த கஷாயம் குடித்தால் போதுமானது. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நாட்கள் வரும் போது இதை குடிக்கலாம்.

வெந்தய உருண்டை

தேவையானவை

 • வெந்தய பொடி
 • சுக்குத்தூள்
 • ஏலத்தூள்
 • நல்லெண்ணெய் அல்லது நெய்

செய்முறை

வெந்தயத்தை ஊறவைத்து காலையில் அந்த நீரை குடித்து வந்தாலும் வயிறு வலி உணர்வு குறையும்.

வயிறு வலியை குறைக்க கசப்பு மிக்க வெந்தயத்தை தவிர்ப்பவர்கள் வெந்தய உருண்டையை சேர்க்கலாம்.

வெந்தயத்தை பொடித்து பாட்டிலில் வைத்துகொள்ள வேண்டும். மாதவிடாய் நாட்களில் வெந்தய ப்பொடியுடன் சிறிதளவு பனைவெல்லம் பொடித்து இரண்டையும் நன்றாக கலந்து சுக்குத்தூள், ஏலத்தூள் சிட்டிகை சேர்த்து நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து இலேசாக அடுப்பில் வைத்தால் வெல்லம் உருகி பொடியாகும்.

இதை உருண்டையாக்கி ( நெல்லி அளவு) காலை ஒரு உருண்டை மாலை ஒரு உருண்டை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். உதிரபோக்கு கூட கட்டுப்படும். இழந்த இரத்தம் ஈடு செய்ய முடியும். இடுப்பு வலுப்பெறும்.

பெருங்காயம்

பெருங்காயம் நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டை இயல்பாக வைக்கும் அதனால் வலி உபாதை பெருமளவு குறையக்கூடும். உணவில் பெருங்காயம் நிறைவாக சேருங்கள்.

அல்லது சீரக நீரில் சற்று தூக்கலாக பெருங்காயம் சேருங்கள். வயிறு வலி உபாதை குறையக்கூடும்.

பெருங்காயம் நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டை இயல்பாக வைக்கும் அதனால் வலி உபாதை பெருமளவு குறையக்கூடும்.

பெண்களே! மாதவிடாய் வயிற்று வலியால் அவதிப்படுறீர்களா? இதனை குறைக்க இதோ சூப்பரான வழிமுறை Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password