- 1

பாம்பும் விவசாயியும்

110 0

சிறுவர் நீதி கதைகள்

பாம்பும் விவசாயியும்

பாம்பும் விவசாயியும் The Farmer and the Snake in Tamil 

 அது ஒரு அழகிய குளிர்காலம். ஒரு நாள் பாம்பு ஒன்று பனியில் விரைந்து உயிர் போய்விடுமோ என்ற நிலையில் சுருண்டு கிடந்தது.

அந்த நேரத்தில் அவ்வழியே வந்த விவசாயி ஒருவன் அந்த பாம்பினைப் பார்த்தான். இரக்க குணமுள்ள அந்த விவசாயி அப்பாம்புக்கு உதவிட நினைத்தான்.

பாம்பினை எடுத்து தன் மார்போடு அணைத்து அதனைச் சூடேற்றினான். விவசாயியின் உடல் சூடு பட்டதும், பாம்பு மெள்ள மெள்ள உணர்வு பெற்றது.

அதற்கு நன்றாக உணர்வு வந்ததும், அது தன்னைக் காப்பாற்றிய விவசாயியை பலமாகக் கடித்துவிட்டது. பாம்பின் நஞ்சு ஏறி உயிர் போகும் நிலையில் இருந்த அந்த விவசாயி தன் செய்கைக்காக வருந்தினான்.

பாம்பைப் பார்த்து “ஏ நன்றி கெட்ட நாகமே! உன்னைக் காப்பாற்றிய என்னையே கடித்துவிட்டாயே!! உன் குணம் தெரிந்தும் நான் உனக்கு உதவி செய்தேன் அல்லவா? அதற்கு இது சரியான தண்டனை தான்” என்று கூறிவிட்டு இறந்தான்.

நீதி: தீயவர்களுக்குச் செய்யும் உதவி தீமையாகவே முடியும்.

சிறுவர் நீதி கதைகள்

பாம்பும் விவசாயியும்

Related Post

நான் சொல்லவில்லை

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள் கி. ஆ. பெ. விசுவநாதம் கதைகள் 1929ல், அதாவது அறுபத்திஇரண்டு ஆண்டுகளுக்கு முன், நானும் பெரியாரும் திருநெல்வேலியில் ஒரு சொற் பொழிவுக்காகச் சென்றிருந்தோம். எங்களுக்காக…

57. நீதிபதியின் மகன்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள் 57. நீதிபதியின் மகன் சென்னை உயர்நீதி மன்றத்தில் பல ஆண்டு பண யாற்றிய நீதிபதி ஒருவர்க்கு, ஒரே மகன்தான் துணை. அவனை நல்லமுறையில் வளர்த்துப்…

அகப்பட்டவனை விட்டுவிட்ட அரக்கன் 5-13

Posted by - மே 21, 2020 0
பஞ்சதந்திரக் கதைகள் அகப்பட்டவனை விட்டுவிட்ட அரக்கன் – பகுதி – 5 13. அகப்பட்டவனை விட்டு விட்ட அரக்கன் நண்டகாரணீயம் என்ற காட்டில் ஓர் அரக்கன் வாழ்ந்து…

ஆசையால் தேர்ந்த அழிவு 2-5

Posted by - ஏப்ரல் 17, 2020 0
ஆசையால் தேர்ந்த அழிவு 5. ஆசையால் நேர்ந்த அழிவு ஒரு வேடன் காட்டுக்கு வேட்டைக்குப் போய்,ஒன்றும் கிடைக்காமல் பல நாள் அலைந்து திரிந்து கொண்டிருந்தான். ஒரு நாள்…

கொக்கைக் கொன்ற முயல் 1-7

Posted by - ஏப்ரல் 17, 2020 0
கொக்கைக் கொன்ற முயல் 7. கொக்கைக் கொன்ற நண்டு நாள் தோறும் மீன்களைக் கொத்தித்தின்று உடல் வளர்த்து வந்த ஒரு கொக்கு இருந்தது. அது வழக்கம் போல…

உங்கள் கருத்தை இடுக...