- 1

பாத வெடிப்பு குணமாக வீட்டு வைத்தியம்!

97 0

பாத வெடிப்பு குணமாக வீட்டு வைத்தியம்!

உடலின் அழகை பராமரிக்க நாம் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். ஆனால், அந்த அளவு பராமரிப்பு பாதவெடிப்பிற்கு வழங்குவதில்லை. ஏனெனில் கால்களில் இருப்பதால், அது வெளியில் தெரியாது என்று நினைக்கிறோம். உண்மையில் பாத வெடிப்பு மிகவும் ஆபத்தானது. அதை சரி செய்ய இயற்கை மருந்துகள் பற்றி பார்க்கலாம்.

மருதாணி இலை

மருதாணி இலையுடன் கிழங்கு மஞ்சள் பொடியாக்கி அம்மி அல்லது மிக்ஸியில் வைத்து அரைக்கவும். இரவு நேரங்களில் உறங்க செல்வதற்கு முன்பு பாதங்களை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து வெடிப்பு இருக்கும் இடங்களில் பற்று போடுங்கள். அவை காய்ந்ததும் சுத்தமாக கழுவி எடுங்கள். வராத்திற்கு இருமுறை மட்டும் செய்தாலே போதும்.

குறிப்பு

மருதாணி அதிக குளிர்ச்சியை உண்டாக்கும் என்பதால் இரவு முழுவதும் பாதத்தில் பற்று போட வேண்டியதில்லை. குறிப்பாக உடல் குளிர்ச்சி உடையவர்கள் அதிகம் பயன்படுத்தும் போது ஜன்னி ஏற்படவும் வாய்ப்புள்ளது.

எலிமிச்சைச்சாறு

அகலமான பாத்திரத்தில் பொறுக்கும் சூட்டில் வெந்நீருடன் எலுமிச்சைச் சாறை கலந்து 15 நிமிடங்கள் பாதங்களை வைத்திருந்து பீர்க்கன் நாரைக் கொண்டு தேய்க்கவும். பாதங்களில் உள்ள அழுக்குகள், வெடிப்புகள் நீங்கி பாதம் பொலிவாக அழகாக இருக்கும். தினமும் இப்படி செய்தால் பாதத்தில் இருக்கும் கெட்ட செல்கள் நீங்கி பாதம் பளிச்சென்று இருக்கும்.

குறிப்பு

உங்களால் குனிந்து பாதங்களைப் பிடித்து இலேசாக ஸ்கரப் செய்ய முடிந்தாலோ மெல்லிய ப்ரஷ் கொண்டு அழுக்கு போக தேய்க்க முடிந்தாலோ இன்னும் நல்லது. அல்லது யாரையேனும் செய்ய சொல்லுங்கள். இதனால் பாத நரம்புகள் தூண்டப்பட்டு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

மஞ்சள்தூள்

மஞ்சள் சிறந்த கிருமிநாசினி என்பதை அறிவோம். அதிகப்படியான வெடிப்புகளை நீக்க கிழங்கு மஞ்சளைப் பொடியாக்கி சுத்தமான விளக்கெண்ணெய் /நல்லெண்ணெயில் குழைத்து வெடிப்பு இருக்கும் இடங்களில் தடவி வந்தால் எரிச்சலும், வலியும் குறைவதோடு நாளடைவில் வெடிப்பும் மறைய தொடங்கும்.

குறிப்பு

விளக்கெண்ணெய் /நல்லெண்ணெய் இரண்டுமே அதிக குளிர்ச்சிதரும் என்று நினைப்பவர்கள் எண்ணெயை இலேசாக சூடு செய்து பிறகு தடவலாம். அல்லது வேப்ப எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

ஆயில் மசாஜ்

வறண்ட பாதத்தைக் கொண்டிருப்பவர்கள் ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் அழகான பாதத்தைப் பெறலாம். ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைக் கொண்டு பாதங்கள், கால் விரல்கள், குதிகால் போன்றவற்றில் மிருதுவாக மசாஜ் செய்யலாம். வறண்ட வெடிப்புகள் மிருதுவாகி மறையும்.

குறிப்பு

பாதங்களில் கட்டிகள், சரும வியாதிகள் கொண்டிருப்பவர்கள் எண்ணெய் மசாஜ் செய்யும் போது அதிகரித்து விட வாய்ப்பும் உண்டு.

அன்னாசி, பப்பாளி பழங்களையும் கூழாக்கி பாதங்களில் தடவி வந்தால் பாதம் பொலிவாக இருக்கும். அதே போன்று சாம்பார் வெங்காயத்தின் சாறை எடுத்து மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து வெடிப்பு உள்ள இடங்களில் பற்றுபோட்டாலும் பாத வெடிப்பு நீங்கிவிடும்.

குதிகால் உயர்காலணிகளைத் தவிர்த்து மிருதுவான காலணிகளைப் பழக்குங்கள். இதனால் வளரும் போது குதிகால் வலியைத் தவிர்க்கலாம்.

பாத வெடிப்பு குணமாக வீட்டு வைத்தியம்! Source link

Related Post

- 3

உடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி!

Posted by - நவம்பர் 24, 2020 0
உடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி! எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாமல், உடலில் ஏற்படும் சுளுக்கு மற்றும் காயங்களை போக்க இயற்கையில் உள்ள அற்புதமான வழி இதோ,…
- 7

குழந்தை பிறக்காமல் போவதற்கு இந்த அறிகுறிதான் காரணம்! எச்சரிக்கை

Posted by - நவம்பர் 1, 2020 0
குழந்தை பிறக்காமல் போவதற்கு இந்த அறிகுறிதான் காரணம்! எச்சரிக்கை இந்த காலக்கட்டத்தில் தம்பதிகளுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை குழந்தையின்மைதான். புதிதாக திருமணம் ஆனவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிபோடுகின்றனர்.…
- 9

வறட்டு இருமலில் இருந்து விடுபட இதோ சில ஆயுர்வேத வழிகள்!

Posted by - நவம்பர் 5, 2020 0
வறட்டு இருமலில் இருந்து விடுபட இதோ சில ஆயுர்வேத வழிகள்! தற்போது அனைவரும் சந்திக்கின்ற ஒரு பிரச்சனைதான் இந்த வறட்டு இருமல். இந்த வறட்டு இருமல் வந்துவிட்டால்…
- 11

முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்

Posted by - நவம்பர் 19, 2020 0
முள்ளங்கியின் மருத்துவ பயன்கள் முள்ளங்கி, ரத்தத்தில் புதிய ஆக்ஸிஜன் பரிமாற்றத்தை அதிகரித்து, அதன் வாயிலாக ரத்த சிவப்பணுக்களின் அழிவை குறைக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி இரத்தத்தை…
- 21

தினமும் காலையில் ஒரு துண்டு இஞ்சி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Posted by - நவம்பர் 11, 2020 0
தினமும் காலையில் ஒரு துண்டு இஞ்சி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? இஞ்சியில் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை…

உங்கள் கருத்தை இடுக...