பவானி ஆறு

 

பவானி ஆறு காவிரியுடன் கலக்கும் கூடுதுறை

பவானி ஆறு காவிரியுடன் கலக்கும் கூடுதுறை

பவானி ஆறு, காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். இது சங்கநூலில் வானி எனக் குறிப்பிடப்படுகிறது.  இது தமிழகத்தின் நீலகிரி மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தோன்றி மேற்கு நோக்கி கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் பாய்ந்து அங்குள்ள முக்கலி என்னுமிடத்தில் 120 பாகை திரும்பி கிழக்கு நோக்கி நீலகிரி மாவட்டத்தில் பாய்ந்து மீண்டும் தமிழகத்துக்குள் வருகிறது.

தமிழக கேரள எல்லையில் தமிழகத்திலிருந்து கேரளம் நோக்கி பாயும் ஆற்றை மேல் பவானி அணைக்கட்டு மூலம் தடுத்து பக்தவச்சலம் சாகர் நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆறு சமவெளியை அடைகிறது. பின் சிறுமுகை வழியாக கொத்தமங்கலம் அருகே கீழ் பவானி அணைக்கட்டை அடைகிறது அங்கு இது பவானி சாகர் நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. பவானி சாகர் நீர்த்தேக்கத்தில் மோயார் ஆறானது இணைந்து கொள்கிறது.

கீழ் பவானி திட்ட கால்வாய் பவானி சாகர் அணைக்கட்டிலிருந்து தொடங்கி ஈரோடு கரூர் மாவட்டங்களை வளப்படுத்துகிறது.

இது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ளது. பின் பவானி ஆறு கோபிச்செட்டிப்பாளையம் வழியாக பாய்ந்து பவானி நகரில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. காவிரி ஆற்றுடன் கலக்கும் முன் இதிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் தொடங்குகிறது.

அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் பாயும் பவானி ஆற்றில் அணை கட்டி பாரதப்புழா ஆற்றில் திருப்பிவிட கேரள அரசு திட்டமிட்டு வருகிறது.[6] தற்போதைய சூழலில் இந்த ஆறு சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மாசடைந்து உள்ளது.

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

      உங்கள் கருத்தை இடுக...

      வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

      Register New Account
      Reset Password