பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மருதம் பட்டை!! இந்த நோய்களை கூட குணமாக்குமாம்!

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மருதம் பட்டை!! இந்த நோய்களை கூட குணமாக்குமாம்!

மருத மரத்தில் இருந்து கிடைக்கும் மருதம் பட்டைக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. இந்த மருதம் பட்டை சிறிது துவர்ப்பு சுவை உடையது. வைட்டமின் சி மருதம்பட்டையில் மிகுதியாக அடங்கி உள்ளது.

மருதம் பட்டையை அரைத்துப் பொடியாகவும், மருதம் பட்டையை தண்ணீரில் ஊறவைத்து குடிநீராகவும் பயன்படுத்தலாம்.

இது உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.

அந்தவகையில் மருதம்பட்டை எந்தெந்த நோய்களை குணமாக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

 • மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி தீர மருதம் பட்டை, வேப்பம் பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிதளவு பெருங்காயம் சேர்த்து காலை மற்றும் மாலை மோருடன் கலந்து பருகி வர, மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி தீரும்.
 • வாய் புண், தொண்டை வலி போன்றவற்றால் பாதிக்கப்படுவோர் ஒரு ஸ்பூன் மருதம் பட்டை பொடியை கலந்து தண்ணீரில் 10 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு, அந்த நீரை வெதுவெதுப்பான சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி, வாய்ப்புண் குணமாகும்.
 • நன்கு உலர்ந்த மருதம்பட்டையை நன்கு பொடித்து அதை 5 கிராம் அளவு எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல், ஆஸ்துமா பிரச்சனைகள் குணமாகும்.
 • இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே மாரடைப்புக்கு காரணம். இரத்தக் குழாயில் கொழுப்பு சேராமல், அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் சக்தி மருதம்பட்டைப் பொடிக்கு உள்ளது.
 • இதயத்தை வலுவுடன் வைக்கும் ஆற்றல் வெண்தாமரைப் பூவின் பொடியில் உள்ளது. இரண்டு கிராம் அளவிற்கு இரண்டு பொடியையும் எடுத்து வெந்நீர் அல்லது பாலில் கலந்து காலை, இரவு உணவுக்குப் பின் அருந்தினால் இரத்தக் குழாய் அடைப்பு வராமால் தடுக்கலாம்.
 • மருதம் பட்டை, வில்வம், துளசி சம அளவில் எடுத்து சூரணம் செய்து, காலை மற்றும் மாலை நேரத்தில் சாப்பிட்டு வர இந்த பிரச்னைகள் விலகும்.
 • இதயம் சார்ந்த நோய்களுக்கு c, வெண் தாமரைப் பூ 100 கிராம், ஏலக்காய், இலவங்கம் மற்றும் திரிகடுகம் 10 கிராம் அளவில் கலந்து பொடியாக்கி காலை மற்றும் மாலை வேளைகளில் 5 கிராம் அளவு பொடியை கொதிக்க வைத்து கஷாயமாக அருந்தி வர, இதய நோய் விரைவில் குணமடையும்.
 • சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருதம் பட்டை, ஆவாரம் பட்டை சம அளவு எடுத்து அதில் 2 ஏலக்காய், சுக்கு சேர்த்து காலை மற்றும் மாலை வேளைகளில் காய்ச்சி காபி, டீ-க்கு பதில் குடித்து வர சர்க்கரை நோய் தீரும்.

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மருதம் பட்டை!! இந்த நோய்களை கூட குணமாக்குமாம்! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password
   lida viagra fiyat cialis sipariş escort bayan