பனியும், வெயிலும் சேர்ந்த காலத்தில் சருமத்தை எப்படி பராமரிப்பது?

பனியும், வெயிலும் சேர்ந்த காலத்தில் சருமத்தை எப்படி பராமரிப்பது?

பொதுவாக மாறி கொண்டே வரும் காலநிலையில் முதலில் பாதிக்கப்படுவது நமது சருமம் தான்.

இந்த நேரங்களில் சரியான பராமரிப்பு கொடுக்காவிட்டால் முகம் நாளாடைவில் பருக்கள், வறண்ட சருமம், கரும்புள்ளி போன்றவை ஏற்பட்டு முகத்தை பாழாக்கி விடுகின்றது.

அந்தவகையில் தற்போது பனியும், வெயிலும் சேர்ந்த காலத்தில் சருமத்தை எப்படி பராமரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

  • தக்காளியை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவலாம். அல்லது துண்டு துண்டாக நறுக்கி அப்படியே முகத்தில் ஒட்டிவைத்து கொள்ளலாம். ஐந்து நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம்.
  • 2 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 4 எலுமிச்சை பழங்களில் சாறு கலந்து சருமத்தின் மசாஜ் செய்யவும். சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இது சருமத்திலுள்ள அழுக்குகளை அகற்றும்.
  • தினமும் இரவு கொழுப்பு நீக்கப்பட்ட தயிரை சருமத்தின் தேய்த்து ஸ்கிரப் செய்யவும். இது சருமத்தை சுத்தமாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவும்.
  • நன்கு கனிந்த வாழைப்பழத்தை பிசைந்து சருமத்தில் தடவி மசாஜ் செய்யவும். இது சருமத்தில் ஏற்படும் வறட்சியை கட்டுப்படுத்துவதுடன் தேவையான ஊட்டச்சத்தையும் அளிக்கும்.
  • பப்பாளி மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தது. பப்பாளி பழத்தை நன்கு அரைத்து சருமத்தில் தடவவும். காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். பப்பாளியில் உள்ள நொதிகள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி செல்களுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
  • கடலை மாவை அனைத்து வகையான சருமத்தினரும் பயன்படுத்தலாம். கடலை மாவை தண்ணீரில் குழைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தாலம்.
  • வீட்டை விட்டு வெளியில் செல்லும் முன் தேங்காய் எண்ணெய்யை சருமத்தில் தேய்த்து கொள்வது நல்லது. இது சருமத்தை மிருதுவாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவும்.

பனியும், வெயிலும் சேர்ந்த காலத்தில் சருமத்தை எப்படி பராமரிப்பது? Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

      உங்கள் கருத்தை இடுக...

      வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

      error: Content is protected !!
      தமிழ் DNA
      Logo
      Register New Account
      Reset Password
      %d bloggers like this:
      Shopping cart