நெட் தேர்விற்கு இலவச பயிற்சி வழங்கும் சென்னைப் பல்கலை..!

நெட் தேர்விற்கு இலவச பயிற்சி வழங்கும் சென்னைப் பல்கலை..!

தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடைபெறும் நெட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பினை நடத்தவுள்ளதாகச் சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நெட் தேர்விற்கு இலவச பயிற்சி வழங்கும் சென்னைப் பல்கலை..!

நெட் தேர்வானது கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர் பணிக்கானத் தகுதித் தேர்வாகும். யுஜிசி-யின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் இந்தத் தேர்வை எழுதவேண்டும்.

சென்னைப் பல்கலைக் கழகம் சார்பில் வரும் ஜூன் மாதம் 7-ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரையில் நெட் தேர்விற்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவு மாணவர்களும் சிறுபான்மையின மாணவர்களும் பங்கேற்க முடியும். இதற்கான விண்ணப்பங்கள் பல்கலைக் கழகத்தில் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மே 30ம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்தான மேலும் விபரங்களை அறிய சென்னைப் பல்கலைக்கழக மாணவர் ஆலோசனை மைய இயக்குநரை நேரில் சந்தித்து தெரிந்துகொள்ளலாம். அல்லது 044- 25399518 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெட் தேர்விற்கு இலவச பயிற்சி வழங்கும் சென்னைப் பல்கலை..! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
    Shopping cart