- 1

நாயும் அதன் நிழலும்

65 0

சிறுவர் நீதி கதைகள்

நாயும் அதன் நிழலும்

நாயும் அதன் நிழலும் | The Dog and His Shadow Story in Tamil 

முட்டாள் நாய் ஒன்று ஒரு இறைச்சிக் கடையில் இருந்த எலும்புத்துண்டை திருடியது. அதனை வாயில் கவ்விக்கொண்டு தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டது.

செல்லும் வழியில் சில நாய்குட்டிகள் அந்த முட்டாள் நாயிடம், “எலும்புத்துண்டை தறுமாறு” கேட்டன. ஆனால் அந்த முட்டாள் நாயோ “இதை நான் யாருக்கும் தரமாட்டேன். இதை முழுவதுமாக நான் மட்டுமே சாப்பிட போகிறேன்”, என்று கூறி விட்டுச்சென்றது.

செல்லும் வழியில் ஒரு பாலத்தை வேண்டியிருந்தது. நாய் பாலத்தைக் கடக்கும் போது கீழே தண்ணீரைப் பார்த்தது. அந்தத் தண்ணீரில் அதன் உருவம் தெரிந்தது. தண்ணீரில் தெரிந்த அதன் உருவத்திலும் வாயில் எலும்புத்துண்டு இருந்தது.

அதைக் கண்ட நாய் “இந்த நாயிடமும் ஒரு எலும்புத்துண்டு உள்ளது. இதையும் அபகரித்துவிட வேண்டும்” என்று நினைத்தது. உடனே அது பலமாக ‘லொள்’,’லொள்’ எனக் குரைத்து கொண்டே தண்ணீரில் தெரிந்த நாயின் மீது பாய்ந்தது.

அதனால் அதன் வாயில் இருந்த எலும்புத்துண்டும் தண்ணீரில் விழுந்தது. தண்ணீரில் விழுந்தவுடன் தான் அந்த முட்டாள் நாய்க்கு புரிந்தது இது நிழல் பிம்பம் என்று.

அதனைத் தேடிச் சென்ற நாய் தண்ணீரில் தத்தளித்தது. மிகவும் துன்பத்துடன் உயிரக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என கரையேற வேண்டியதாயிற்று.

நீதி: பேராசை பெரு நஷ்டம்

சிறுவர் நீதி கதைகள்

நாயும் அதன் நிழலும்

Related Post

97. மனித குணம்

Posted by - ஏப்ரல் 19, 2020 0
அறிவு கதைகள் 97. மனித குணம் நபிகள் நாயகம் ஒருநாள் மாலைநேரத்தில் பள்ளி வாசலுக்குத் தொழப் போனார்கள். அங்குள்ள தண்ணிரி தொட்டியில் கைகால்களை சுத்தம் செய்யும் பொழுது…
பிட்டுக்கு மண் சுமந்த சிவன் கதை

பிட்டுக்கு மண் சுமந்த சிவன் கதை

Posted by - மார்ச் 18, 2021 0
பிட்டுக்கு மண் சுமந்த சிவன் கதை பிட்டுக்கு மண் சுமந்த சிவன் கதை (piddukku man sumantha kathai) : ஒரு சமயம்  பாண்டிய நாட்டில் பெருமழை பெய்தது.…

67. உள்ளுர் நிலைமை

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள் 67. உள்ளுர் நிலைமை தன்னை விந்து பார்க்கும்படி அந்த ஊர் பஞ்சாயத்து தலைவனுக்குக் கட்டளையிட்டிருந்தார் மாவட்ட ஆட்சியாளர். அவர் போய்ப் பார்க்கவில்லை. கடுமையான கோபத்துடன்…

55. பந்தலிலே பாகற்காய்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள் 55. பந்தலிலே பாகற்காய் பக்கத்து ஊரிலே ஒர் இழவு. இரண்டு பெண்கள் அந்தச் சாவுக்குப் போனார்கள். அங்கே ஒரு பந்தலின்கீழ் மேடையில் பிணத்தைச் சாத்தி…

ஏமாந்த வேதியன் 3-5

Posted by - ஏப்ரல் 17, 2020 0
ஏமாந்த வேதியன் 5. ஏமாந்த வேதியன் ஓர் ஊரிலே ஒரு வேதியன் இருந்தான். அவன் தெய்வங்களுக்கு ஒரு வேள்வி செய்வதாக வேண்டிக் கொண்டான். வேள்வியில் பலி கொடுப்பதற்கு…

உங்கள் கருத்தை இடுக...