நாசாவின் விண்கலனை வழிநடத்திய ஸ்வாதி மோகன்… குவியும் பாராட்டுகள்! #PerseveranceRover

‘பெர்சிவியரன்ஸ் ரோவர்’ விண்வெளிக்குப் பயணம் செய்யும் பாதையில் தொடங்கி, வெற்றிகரமாகச் செவ்வாய்க்கிரகத்தில் நிலைகொள்வதுவரை அனைத்தையும் கையாளும் பொறுப்பு இவருடையது.

சமீபகாலமாக அமெரிக்காவில் தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு துறைகளில் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகத் தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி மோகன் என்கிற இளம் பெண் விஞ்ஞானி, நாசா செவ்வாய்க்கு அனுப்பியிருக்கும் ‘பெர்சிவியரன்ஸ் ரோவர்’ விண்கலத்தின் விண்வெளிப் பயணத்தைத் துல்லியமாக வழிநடத்தி செவ்வாயில் வெற்றிகரமாகத் தரையிறங்க வைத்திருக்கிறார். ஸ்வாதியின் இந்தச் சாதனையை இந்திய தேசமே உச்சி முகர்ந்து கொண்டாடி வருகிறது.

இந்த வேலை, சாதாரணமானது அல்ல. செவ்வாய்க் கிரகத்தில் ஜெஸிரோ கிரேட்டர் (jezero crater) என்கிற ஒரு பள்ளம் காணப்படுகிறது. இந்தப் பள்ளம் இருக்கும் பகுதியில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய ஏரி இருந்ததாகவும் இதன்மூலம் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்பதை கண்டறிவதற்காகவும் இந்த ரோவர் விண்கலம் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டுள்ளது.

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart