“நம்புங்க உங்க பிரைவசிக்கு எந்த ஆபத்தும் இல்லை!”- விரிவாக விளக்கும் வாட்ஸ்அப்!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த விளக்கத்தை அளிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறது வாடஸ்அப்.

ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான மெசேஜிங் தளம் வாட்ஸ்அப். 2014-ல் 19 பில்லியன் டாலருக்கு வாட்ஸ்அப்பை வாங்கியது. டெக் உலகில் மட்டுமல்ல மொத்த பிசினஸ் உலகிலும் மிக டீலாக இது பார்க்கப்பட்டது. பெரிய வருமானம் எதுவும் ஈட்டாத வாட்ஸ்அப்பில் இத்தனை பெரிய தொகையை ஃபேஸ்புக் ஏன் முதலீடு செய்கிறது என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இன்று வரை வாட்ஸ்அப் இலவச சேவையாகத்தான் இருந்துவருகிறது. தொடர்ந்து பிரைவசி மற்றும் டேட்டா பாதுகாப்பு சிக்கல்களில் ஃபேஸ்புக் சிக்கிவந்தாலும் வாட்ஸ்அப்பை அது எந்த விதத்திலும் பாதிக்காமலிருந்து வந்தது. காரணம், ஃபேஸ்புக்கின் சேவையாக இருந்தாலும் வாட்ஸ்அப் ஓரளவு தனித்தே செயல்பட்டது. ஆனால், இப்போது அந்த சூழல் மாறப்போகிறது என்பது வாட்ஸ்அப் சுற்றிய இத்தனை பரபரப்புக்கும் முக்கிய காரணம்.

வாட்ஸ்அப் அதன் பிரைவசி கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாகச் சமீபத்தில் அறிவித்தது. இப்படி தனியுரிமை கொள்கைகள் மாற்றப்படுகிறது எனப் பயனர்களுக்கு பாப்-அப் மெசேஜ் ஒன்றை சில நாட்களுக்கு முன்பு காட்டியது வாட்ஸ்அப். அனைவருமே இந்த செய்தியைப் பெற்றிருப்பீர்கள். பலரும் ‘Agree’ கொடுக்கவும் செய்திருப்பீர்கள். அப்படிக் கொடுக்காமலிருந்தால் அடுத்த மாதம் முதல் வாட்ஸ்அப்பை உங்களால் பயன்படுத்த முடியாது. பிரைவசி கொள்கைகளில் செய்யப்பட்டிருக்கும் இந்த மாற்றங்களில் தகவல்களைத் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கின் மற்ற தயாரிப்புகளுடன் பகிர்ந்துகொள்வோம் எனச் சொல்ல மக்கள் பலரும் வாட்ஸ்அப்பின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிவருகின்றன. அகில இந்திய வணிகர் சங்கமான CAIT வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை தடைசெய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்குமளவு பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் புதிய பிரைவசி கொள்கைகள் குறித்து விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த விளக்கத்தை அளிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறது வாடஸ்அப்.

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart