நண்டு மிளகு சூப்

தேவையானவை:


பெரிய நண்டு -1

மிளகு – 2 டீஸ்பூன்(பொடியாக்கியது)

சீரகத்தூள் -அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் -அரை டீஸ்பூன்

லவங்கம் -1

கறிவேப்பிலை -சிறிதளவு

இஞ்சி -சிறுதுண்டு(விழுதாக்கிக் கொள்ளவும்)

எண்ணெய் -1 டீஸ்பூன்

பிரியாணி இலை -1

எலுமிச்சம்பழச்சாறு – 1 டீஸ்பூன்

உப்பு -தேவைக்கேற்ப

 

செய்முறை :


1.பொடியாக்கிய மிளகை சீரகத்தூளுடன் சேர்க்கவும் இதனுடன் இஞ்சி விழுதையும் சேர்க்கவும். இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சுத்தம் செய்த நண்டில் தடவி, அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், லவங்கம், பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். மசால் தடவிய நண்டை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இதன் பிறகு எலுமிச்சம்பழச் சாற்றை பிழிந்து தேவையான அளவு உப்பு சேர்த்து சூடாக பரிமாறவும்.

Source

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

      உங்கள் கருத்தை இடுக...

      வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

      error: Content is protected !!
      தமிழ் DNA
      Logo
      Register New Account
      Reset Password
      %d bloggers like this: