நங்காஞ்சி ஆறு / நல்காசி ஆறு

நல்காசி ஆற / நங்காஞ்சி ஆறு

 

நல்காசி ஆறு; நங்காஞ்சி ஆறு
ஆறு
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
நகரங்கள்ஒட்டன்சத்திரம் வடகாடு, விருப்பாச்சி, அரசப்பிள்ளைபட்டி, தங்கச்சியம்மாபட்டி,, சவ்வாதுபட்டி, கோவிந்தாபுரம்
உற்பத்தியாகும் இடம்
 – அமைவிடம்திண்டுக்கல், இந்தியா

 

நல்காசி ஆறு அல்லது நங்காஞ்சி ஆறு, அமராவதி ஆற்றின் துணையாறு ஆகும். தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு கிராம மலைப்பகுதியில் உருவாகும் சிற்றாறுகள் பரப்பலாறு அணையில் தேங்கி, தேங்கும் நீர் மற்றும் உபரி நீர் சிறு ஆறாக நங்காஞ்சி ஆறு எனும் பெயரில் விருப்பாட்சி கிராமத்திற்கு அருகில் தலையூத்து என்ற இடத்தில் சிற்றருவியாக விழுந்து வடகிழக்காக விருப்பாச்சி, அரசப்பபிள்ளைபட்டி, தங்கச்சியம்மாபட்டி, சவ்வாதுபட்டி, இடையகோட்டை, கோவிந்தாபுரம் ஆகிய ஊர்களின் வழியாக ஓடி குடகனாற்றில் கலந்து, பின் அமராவதி ஆற்றோடு கலக்கிறது.

சங்க கால பெயர்

இந்த ஆறுக்கு சங்க காலத்தில் ”நல்காசி” என்ற பெயர் வழங்கி வந்துள்ளது விருப்பாச்சி பாளையம் இந்த ஆற்றின் கரையில் அமைந்து இருந்தது.

 

`சாக்கடையான நங்காஞ்சி ஆறு!’ - சுத்தப்படுத்தக் கோரும் கரூர் மக்கள்

சாக்கடையான நங்காஞ்சி ஆறு! – சுத்தப்படுத்தக் கோரும் கரூர் மக்கள்

 

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே பாச்சலூர் மலையில் உள்ள வடகாடு கிராமம் உள்ளது. இங்குள்ள பரப்பணாறு அணையில் தேக்கப்படும் நீரிலிருந்து நங்காஞ்சி ஆறு உற்பத்தியாகி, அரவக்குறிச்சியை அடுத்த நாகம்பள்ளி அமராவதி ஆற்றில் சங்கமிக்கிறது.

இந்த ஆறு திண்டுக்கல் மாவட்டத்தில் பெருமாபுரம் அணை, சடைய குளம் அணை, ஜவ்வாது அணை, கரூர் மாவட்டத்தில் கோரையூத்து ஆகிய அணைகளை கடந்து, அமராவதியை அடைகிறது.

இந்நிலையில், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி பேரூராட்சியில் உருவாகும் சாக்கடை கழிவு நீர் முழுவதும் நங்காஞ்சி ஆற்றில் கலக்கிறது.
மேலும், சீமைக் கருவேல மரங்கள் முளைத்தும், புதர் மண்டியும் நங்காஞ்சி ஆறு கழிவுநீர் குட்டை போல் காட்சியளிக்கிறது.

எங்க பகுதிக்கு நீராதாரமாக இருந்த நங்காஞ்சி ஆறை ஆங்காங்கே ஆக்கிரமித்து சிதைத்துவிட்டார்கள். நல்ல அகலத்தில் இந்த ஆற்றில் கலந்த ஓடை ஒன்றை ஆக்கிரமித்து இப்போது ஓடையின் ஜாடைகூட இல்லாமல் சிறு வாய்க்கால் அளவுக்கு செய்துவிட்டார்கள். அதிலும் வீடுகளின் சாக்கடையைக் கலந்துவிடுகிறார்கள். ‘நங்காஞ்சி ஆற்றில் சாக்கடை கலப்பதைத் தடுத்து, அந்த ஆற்றை பாதுகாப்பேன்’னு மக்களவை துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரை, தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்தார். ஒண்ணும் நடக்கலை” என்று புலம்புகிறார்கள் மக்கள்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில், அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி என்று இரண்டு பேரூராட்சிகளும் நூற்றுக்கணக்கான கிராமங்களும் உள்ளன. ‘மழை பெய்தால்தான் விவசாயம் உண்டு’ என்று வானம் பார்த்த மானாவாரி பூமி இது. இந்தப் பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்குவது பள்ளப்பட்டி மற்றும் அரவக்குறிச்சி பேரூராட்சிகளை உரசியபடி செல்லும் நங்காஞ்சி ஆறுதான். ஆனால், ஒருகாலத்தில் நீர் ஆதாரமாக நங்காஞ்சி ஆறு இருந்திருக்கிறது. இப்போது?.

இதுபற்றி பேசிய பள்ளப்பட்டி பகுதி இளைஞர்கள் சிலர்,”அதெல்லாம் பத்து வருடங்களுக்கு முன்பு வரைதான். அப்போது, நங்காஞ்சி ஆறு எங்கள் பகுதிக்கு நீர் ஆதாரத்தைக் கொடுத்து வந்தது. நங்காஞ்சி ஆறு, ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடுங்கிற கிராமத்துல மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகுது. அங்கே இருந்து திண்டுக்கல் மாவட்டம் எடையக்கோட்டையில் கீழ் இறங்கி, கரூர் மாவட்டத்தில் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சின்னு ஓடி நாகம்பள்ளி அருகே அமராவதி ஆற்றில் கலக்குது.

இந்த ஆற்றை நம்பிதான் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி பேரூராட்சிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் நீர் ஆதாரம் இருந்தது. இந்த ரெண்டு பேரூராட்சிகளிலும் நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, இந்தப் பகுதி நிலத்தடி நீர்மட்டத்தை அதிரிக்கச் செய்தார்கள். ஆனால், திண்டுக்கல் மாவட்டத்திலேயே இந்த ஆற்றின் குறுக்கே எட்டு தடுப்பு அணைகள் கட்ட, ஆற்றில் தண்ணீர் வருவது குறைந்தது. அதேபோல், நங்காஞ்சி ஆற்றை ஆங்காங்கே கரூர் மாவட்டத்தில் பலர் ஆக்கிரமித்தார்கள். மனித கழிவுகள், குப்பைகளைப் போடும், சாக்கடைகளைக் கலக்கும் இடமாக மாற்றினார்கள். கடந்த எம்.பி தேர்தலில் இப்போதைய கரூர் எம்.பி தம்பிதுரை, ‘என்னை ஜெயிக்க வைத்தால், இந்த நங்காஞ்சி ஆற்றில் சாக்கடை கலப்பதைத் தடுத்து, ஆற்றைப் பாதுகாப்பேன்’னு சொன்னார். அடுத்த எம்.பி தேர்தலே வரப்போகிறது. அவர் சொன்னதைச் செய்யலை. எப்போதான் நங்காஞ்சி ஆறு வாக்குறுதியை நிறைவேற்றுவார்” என்று கேள்வி எழுப்புகிறார்கள்

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart