தீபாவளியின் போது தங்கம் வாங்க உள்ளீர்களா? ஏமாறாமல் இருப்பது எப்படி?

தீபாவளியின் போது தங்கம் வாங்க உள்ளீர்களா? ஏமாறாமல் இருப்பது எப்படி?

தங்கத்தின் சுத்தம்

தங்கத்தின் சுத்தம்

தங்கத்தின் சுத்தம் காரர் என்பதன் மூலம் அளவிடப்படுகிறது: பொதுவாக 24 காரட் தங்க என்றால் சுத்தமான தங்கம் என்றும், நாம் வாங்கும் ஆபரணத் தங்க 82 சதவீதம் சுத்தமான தங்க என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இல்லாமல் 18 காரட், 14 காரட் சுத்த அளவிலும் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் வெள்ளி, காப்பர், ஜிங்க் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டும் இருக்கும்.

24 காரட் தங்கத்தால் ஆபரணங்கள் செய்ய முடியாது. பொதுவாக நகை கடைகளில் 22 காரட் தங்க நகை ஆபரணங்கள் தான் விற்பனை செய்யப்படும். ஆன்லைனில் 14 மற்றும் 18 காரட் தங்கம் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் தங்கம் விலை கூடுதல் என்பது போல அடைமானம் வைக்கும் போது அல்லது விற்கும் போது அதிகம் பணம் கிடைக்கும். 14 அல்லது 18 காரட் என்றால் அவற்றின் தரத்திற்கு ஏற்றார் போல் விலை குறையும்.

 செய் கூலி

செய் கூலி

ஆபரணத் தங்கம் வாங்கும் போது பொதுவாகச் செய் கூலியும் அதன் விலையில் அடங்கும். அது பொதுவாக நிலையாக இருக்கும். சில நகை கடைக்காரர்கள் சலுகை என்ற பெயரில் அதனை உயர்த்தி நம்மை ஏமாற்றவும் வாய்ப்புள்ளது. எனவே தங்கம் வாங்கும் போது செய் கூலி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ஆபரணத் தங்கம் விலை கணக்கிடுதல்

ஆபரணத் தங்கம் விலை கணக்கிடுதல்

கிராம் தங்கத்தின் விலை * (தங்கத்தின் எடை + செய்கூலி)* தங்கத்தின் எடை + ஜிஎஸ்டி என்ற அடிப்படியில் தங்கம் விற்பனை செய்யப்படுவது வழக்கம் ஆகும்.

கைவேலை அல்லது இயந்திரம்

கைவேலை அல்லது இயந்திரம்

தங்கம் வாங்கும் போது அது கைவேலை மூலம் செய்யப்பட்டு என்றால் செய் கூலி அதிகமாக இருக்கும். இதுவே இயந்திரத்தின் வடிவமைப்பு என்றால் செய் கூலி விலை குறைவாக இருக்கும்.

எடை

எடை

ஆபரணத் தங்கம் எடை அளவினால் தான் விற்பனை செய்யப்படுகிறது. அதிக எடையில் வாங்கும் போது அதிகச் செலவாகும். சில நேரங்களில் வைரம், எம்ரல் போன்றவையும் தங்கத்தில் அலங்காரம் செய்யப்பட்டு விலையினை உயர்த்தும்.

 பை பேக்

பை பேக்

பழைய நகையை மாற்றிப் புதிய நகை வாங்கப் பல நகை கடைகள் அனுமதி அளிக்கின்றன. நகையின் வடிவம் மற்றும் டிரெண்ட் வேண்டுமானால் மாறலாம் ஆனால் அதன் மதிப்பு ஒன்று தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 நகை கடை

நகை கடை

இந்தியாவில் லட்சம் கணக்கான நகை கடைகள் உள்ளன.சிறு கடைகளில் நகை வாங்கும் போது அதில் கலப்படங்கள் அதிகமாகித் தங்கத்தின் அளவு குறைவாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே நம்பிக்கை வாய்ந்த, உள்ளூரில் நல்ல பெயர் பெற்ற கடைகளில் நகையினை வாங்குவது நல்லது.

 தர நிலைகள்

தர நிலைகள்

இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஹால்மார்க் உள்ள நகைகளை மட்டுமே வாங்க வேண்டும். இந்தப் பிஐஎஸ் ஹால்மார்க் திட்டம் சர்வதேச அளவில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளியின் போது தங்கம் வாங்க உள்ளீர்களா? ஏமாறாமல் இருப்பது எப்படி?

VIew Source Page

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart