திறந்தநிலை பல்கலைக் கழக மாணவர்களே! உங்களுக்கு என தனி வேலை வாய்ப்பு முகாம்!!

திறந்தநிலை பல்கலைக் கழக மாணவர்களே! உங்களுக்கு என தனி வேலை வாய்ப்பு முகாம்!!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக மாணவா்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திடும் வகையில் மார்ச் 15ம் தேதியன்று திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

திறந்தநிலை பல்கலைக் கழக மாணவர்களே! உங்களுக்கு என தனி வேலை வாய்ப்பு முகாம்!!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திடும் வகையில் அப்பல்கலைக் கழகத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டு வரும் மார்ச் 15ம் தேதியன்று திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் சார்பில் செவ்வாய்க் கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திறந்தநிலைப் பல்கலைக் கழகமும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் ஆலோசனை மையமும் இணைந்து திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்க உள்ளது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, மாணவா்களை வேலைவாய்ப்புக்குத் தோ்வு செய்ய உள்ளன.

பல்கலைக் கழகத்தில் இப்போது படித்து வரும் மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பத்தை www.tnou.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்த மேலும் விவரங்களுக்குத் திருச்சி மண்டல மைய ஒருங்கிணைப்பாளர் பி.ராஜேஸ்வரன் அவர்களை 9443674610, 9940527972 எனும் செல்லிடப்பேசிகளில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்தநிலை பல்கலைக் கழக மாணவர்களே! உங்களுக்கு என தனி வேலை வாய்ப்பு முகாம்!! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart