- 1

திருவாசகம் – குழைத்தப பத்து – ஆத்தும நிவேதனம்

356 0

குழைத்தப பத்து – ஆத்தும நிவேதனம்


திருவாசகம்/குழைத்த பத்து

குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய்
காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தா லுறுதியுண்டோ தான்
உமையாள் கணவா எனை ஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
பிறைசேர் சடையாய் முறையோவென்
றழைத்தால் அருளா தொழிவதே
அம்மானே உன்னடியேற்கே. 496

அடியேன் அல்லல் எல்லாம்முன அகலஆண்டாய் என்றிருந்தேன்
கொடியே ரிடையாள் கூறாஎங்கோவே ஆவா என்றருளிச்
செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக் கெங்கள் சிவலோகா
உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமே. 497

ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை
இன்றே இன்றிப் போய்த்தோதான் ஏழை பங்கா எங்கோவே
குன்றே அனைய குற்றங்கள் குணமா மென்றே நீகொண்டால்
என்றான் கெட்ட திரங்கிடாய் எண்தோள் முக்கண் எம்மானே. 498

மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்திவ்
வூனே புகஎன்தனைநூக்கி உழலப் பண்ணு வித்திட்டாய்
ஆனால் அடியேன் அறியாமை அறிந்துநீயே அருள்செய்து
கோனே கூவிக் கொள்ளுநாள் என்றென் றுன்னைக் கூறுவதே. 499

கூறும் நாவே முதலாக் கூறுங் கரணம் எல்லாம்நீ
தேறும் வகைநீ திகைப்புநீ தீமைநன்மை முழுதும்நீ
வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ. 500

வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்டமுழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே. 501

அன்றே என்றன் ஆவியும் உடலும் எல்லாமுங்
குன்றே அனையாய் என்னைஆட் கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே. 502

நாயிற் கடையாம் நாயேனை நயந்துநீயே ஆட்கொண்டாய்
மாயப் பிறவி உன்வசமே வைத்திட்டிருக்கும் அதுவன்றி
ஆயக்கடவேன் நானோதான் என்ன தோஇங் கதிகாரங்
காயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. 503

கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர
எண்ணா திரவும் பகலும்நான் அவைவே எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ அடிமைசால அழகுடைத்தே. 504

அழகே புரிந்திட் டடிநாயேன் அரற்று கின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதம்எனக்குப் புராண நீதத் தருளாயே
குழகா கோல் மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே. 505

திருச்சிற்றம்பலம்

குழைத்தப பத்து – ஆத்தும நிவேதனம்

(திருப்பெருந்துறையில் அருளியது – அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)

மாணிக்கவாசகர்:

மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.



Buy Book From amazon:

Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA

Related Post

- 3

திருவாசகம் – திருக்கழுக்குன்றப் பதிகம் – குரு தரிசனம்

Posted by - ஏப்ரல் 12, 2020 0
திருக்கழுக்குன்றப் பதிகம் – குரு தரிசனம் திருவாசகம்/திருக்கழுக் குன்றப் பதிகம் பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க் கிணக்கிலாததோர் இன்ப மேவருந் துன்ப மேதுடைத் தெம்பிரான் உணக்கிலாததோர்…
- 5

திருவாசகம் – அதிசயப் பத்து – முத்தி இலக்கணம்

Posted by - ஏப்ரல் 12, 2020 0
அதிசயப் பத்து – முத்தி இலக்கணம் திருவாசகம்/அதிசயப் பத்து வைப்பு மாடென்றும் மாணிக்கத் தொளியென்றும் மனத்திடை உருகாதே செப்பு நேர்முலை மடவரலியர்தங்கள் திரத்திடை நைவேனை ஒப்பிலாதன உவமணி…
- 7

திருவாசகம் -திருவண்டப் பகுதி

Posted by - ஏப்ரல் 11, 2020 0
திருவண்டப் பகுதி (தில்லையில் அருளயது – இணைக் குறள் ஆசிரியப்பா) அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி ஒன்றனுக்கு ஒன்று…
- 9

திருவாசகம் -திருச்சதகம்

Posted by - ஏப்ரல் 11, 2020 0
திருச்சதகம் (திருப்பெருந்துறையில் அருளியது) 1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை) மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் கைதான் தலை வைத்துக்…
- 11

திருவாசகம் -திருச்சாழல்

Posted by - ஏப்ரல் 12, 2020 0
திருச்சாழல் (தில்லையில் அருளியது /நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டடென்னை ஈசனவன்…

உங்கள் கருத்தை இடுக...