திருவள்ளுவர் பற்றிய அறிய தகவல்கள்

திருவள்ளுவர்

Thiruvalluvar in Tamil

              திருவள்ளுவர் (Thiruvalluvar in tamil), இவர் மதம் சாதி என்ற எந்தவித பாகுபாடும் இல்லமல் அனைத்து தமிழர்களாலும் போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழும் ஒறே தமிழன் ஆவார்.

திருவள்ளுவரின் பிறப்பு மற்றும் வரலாற்றை உறுதியாக கூற போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை அல்லது கிடைத்தும் மறைக்கப்படுகின்றது என தான் கூற முடியும்.

சங்க கால புலவர்களான அதியமான், ஔவையார் மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்து உள்ளது. இதன் மூலம் சங்க கால புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரை பற்றிய செய்தியை தருகிறார்.

திருவள்ளுவர் சிலை - லண்டன்

லண்டனில் உள்ள திருவள்ளுவர் சிலை

எனவே மாமூலனாருக்கு முன்பே ஔவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் (சங்க காலத்தில் ஔவையார் என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்பால் புலவர்கள் இருந்துள்ளனர்). மாமூலனார் கி.மு 4 ஆம் நூற்றாண்டு செய்தியை கூறுகின்றதால், திருவள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும் என அறிய முடிகின்றது.

திருவள்ளுவர் வரலாறு

(Thiruvalluvar History in Tamil)

கடைச் சங்க காலம் எனப்படும் கி.மு. 400 க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த மாமூலனார் எனும் புலவர் மற்றும் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட காலத்தில் வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஒலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் என எதுவும் உறுதியாகத் தெரியவில்ல,  எனினும் இவர் கி.மு. முதல் நூற்றாண்டில், இன்றைய  சென்னைக்கு அருகில் மயிலாப்பூர் எனும் ஊரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

திருவள்ளுவர் பிறந்த ஊர்

இவர் இயற்றிய திருக்குறளின் அடிப்படையில் இவர் தாயார் பெயர் ஆதி என்றும், தந்தையார் பெயர் பகவன் என்றும், மதுரை நகரில் வாழ்ந்ததாகவும்  கருத்து கூறுவோரும் உண்டு.

திருவள்ளுவர் சிலை - சிங்கப்பூர்

சிங்கப்பூரில் உள்ள பிரபல MDIS கல்வி நிலைய வளாகத்தில் திருவள்ளுவர் சிலை.

காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து  மார்கசெயன் என்பவர் வள்ளுவரின் கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் நம்பபடுகுறது .

திருவள்ளுவர் ஆண்டு

திருவள்ளுவர் ஆண்டு (திருவள்ளுவர் பிறந்த வருடம்கி.மு.31 ஆம் என்று ஆராய்ச்சியாளர்கள் அனுமானித்துள்ளனர். மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், இவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என நம்பப்பட்டு, தமிழ் மக்கள் வள்ளூவர் பிறந்த ஆண்டை அடிப்படையாக கொண்டு தி.மு., தி.பி. ( திருவள்ளுவருக்கு முன், பின் ) என்று காலத்தை பிரித்து பயன்படுத்துகிறார்கள்.

திருவள்ளுவர் ஆண்டு என்பது வழக்கமாக பயன்படுத்டும் ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்டப்பட வேண்டும்.

1971-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் நாட்குறிப்பிலும், மேலும், 1972-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும், திருவள்ளுவர் ஆண்டு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

திருக்குறள் பற்றி சில தகவல்கள்

இவர் குறளி இன்ற இனத்தை சார்ந்தவர் என்பதால், குறளி என்ற வார்த்தை மருவி குறளாகி விட்டது எனவும். ஒன்றரை வரிகளில் சுருக்கமாக எழுதப்பட்டதால் உரை எழுத இதை ஆய்ந்தவர்கள் திரு என்ற அடைமொழியை அதன் முன்னால் சேர்த்து திரு குறள் என அழைத்தார்கள்.

திருக்குறள் பற்றி சுவையான தகவல்கள்

மணக்குடவர் திருவள்ளுவர் காலத்தவராக இருந்திருக்க முடியாது என்றாலும் வள்ளுவரை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். இனவேதான் குறளுக்கு முதன் முதலில்  உரை எழுதியவர் இவரே ஆவார்.

மணக்குடவர் எப்போதோ எழுதிய திருக்குறளின் மூலத் தொகுப்பை கண்டு பிடித்து, சென்ற நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் 1812 ம் ஆண்டு ஓலை சுவடியில் இருந்து அச்சில் திருக்குறளை ஏற்றியவர் தஞ்சையை சேர்ந்த ஞானப்பிரகாசன் ஆவார்.

திருக்குறளிள் 133 அதிகாரங்களூம் 1330 பாக்கள் (குறள்) உள்ளது, மொத்தமாக உள்ள எழுத்துக்கள் 42,194.

திருக்குறள் பற்றி விரிவாக பார்க்க…. 

 

திருவள்ளுவர் சிறப்பு பெயர்கள்

thiruvalluvar in tamil

 

 • தெய்வப் புலவர்
 • செந்நாப் புலவர்
 • தெய்வத் திருவள்ளுவர்
 • செந்தாப் போதார்
 • திருத்தகு தெய்வத் திருவள்ளுவர்
 • தெய்வப் புலமைத் திருவள்ளுவர்
 • தேவர் திருவள்ளுவர்
 • பொய்யில் புலவர்
 • வள்ளுவ தேவன்(ர்)
 • வள்ளுவர்
 • தேவிற் சிறந்த திருவள்ளுவர்
 • நாயனார்
 • மாதாநுபங்கியார்
 • முதற் பாவலர்
 • தேவர்
 • புலவர்
 • பெருநாவலர்
 • பொய்ய மொழியார்

என்று பல சிறப்புப்பெயர்களாலும் இவரை அழைப்பர்.

திருவள்ளுவர் பற்றி பிற புலவர்களின் பாராட்டுகள்

பல புலவர்கள் இணைந்து தொகுத்த நூல் திருவள்ளுவமாலை இதன் மூலமாக வள்ளுவரின் சிறப்பினை அறியலாம்.

திருவள்ளுவமாலை பாடல் விளக்கம்

இவரை,

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

என பாரதியாரும்,

வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே

என பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.

1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கலாமா என்ற விவாதத்தில் ஆங்கிலேய தளபதி ஒருவர் “இந்தியாவின்மிகபெரியசொத்தானதிருக்குறளைநாம்எடுத்துவந்தாகிவிட்டது. இனிஇதுவெறும்மண்தான். இனவேஅதுநமக்குதேவைஇல்லை” என்று கூறினாராம்.

திருவள்ளுவரின் நினைவிடங்கள்

திருவள்ளுவர்

உலக மக்களின் முன், தமிழர்கள் பெருமையாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் தான் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்பினாலோ, அரசாண்டதாலோ இவர் இப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன்னுடைய அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார்.

ஆனால்,

இதனை உணர்ந்த தமிழர்கள் எத்தனை?
இன்று திருக்குறள் உள்ள வீடுகள் எத்தனை?
குறலை படிப்பவர்கள் எத்தனை?

திருவள்ளுவர் திருக்கோயில்

இது, திருவள்ளுவர் அவதரித்ததாக கருதப்படும் மயிலாப்பூர் இங்கு திருவள்ளுவருக்குத் தனிக்கோயில் உள்ளது. இவர் அவதரித்த இலுப்ப மரத்துக்கடியில், பெற்றோர் ஆதி மற்றும் பகவனுடன் கூடிய சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவரையும், திருக்கோயிலையும் இங்கே  சென்று நாம் கட்டாயம் பார்க்க வெண்டும்.

thiruvalluvar temple - திருவள்ளுவர் கோயில்

சென்னை மயிலாப்பூரில்உள்ள திருவள்ளுவர் திருக்கோயில்

மேலும், தாரசுரம் ஐராதிஸ்வரர் கோயிலில்  வள்ளுவரின் சிலையும் தெய்வசிலைகளுடன் உள்ளது.

வள்ளுவர் கோட்டம்

valluvar kottam

வள்ளுவர் கோட்டம்

இது திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு ம்ற்றும் வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ளது. இந் நினைவகம்,1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27ஆம் நாள் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1976 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

திருவள்ளுவர் சிலை

திருவள்ளுவருக்கு இந்தியவில் மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளில் சிலை வைக்கப்பட்டுள்ளது, இதில் குறிப்பாக இந்தியாவின் தென் கோடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை மிகவும் குறிப்பிடதக்கது.

குமரியில் வள்ளுவர் சிலை

வள்ளுவர் சிலை

கன்னியாகுமரியில் 133 அடி உயரமுள்ள வள்ளுவர் சிலை

இந்தியாவின் தென் கோடியில் முக்கடல் சங்கமிக்கும் இடமான குமரியில், இவரின் புகழைப் பறைசாற்றும் விதமாக வள்ளுவருக்கு ஒரு பிரம்மாண்டமான சிலை ஒன்று தமிழக அரசால் 2000 ஆண்டின் துவக்கத்தில் நிறுவப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இச்சிலை, 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ளது. இச்சிலையை அமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது என இதை வடிவமைத்த சிற்பி கணேசன் கூறுகிறார்.

மேலும், சிலையின் உட்புறச் சுவற்றில், ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் என 133 குறட்பாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ள்து.

லண்டனிலுள்ள ரஸ்ஸல் ஸ்கொயரில் இருக்கும் ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்’ என்னும் கல்வி நிறுவனத்தில், வள்ளுவரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

ஹரித்துவாரில் வள்ளுவரின் சிலை

தமிழ் புலவர் திருவள்ளுவரின் புகழை வட இந்திய மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை நதி கரையில் அவரது சிலையை நிறுவ பா.ஜனதா எம்.பி. தருண்விஜய் ஏற்பாடு செய்தார். இதற்காக தமிழகத்தில் இருந்து 12 அடி உயர வள்ளுவரின் திருவுருவ சிலை தயாரிக்கப்பட்டு, ஹரித்துவார் கொண்டு செல்லப்பட்டது.

thiruvalluvar statue at haridwar

ஹரித்துவாரில் வள்ளுவரின் சிலை

ஆனால் இந்த சிலை திறப்பில் நிறைய சர்ச்சைகளும் நடைப்பெற்றது என்பது வருத்தமான செய்தி.

திருக்குறள் அரங்கேற்றம்

மதுரையில் தமிழ் அரசர்கள், சங்கம் வைத்து  தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது.  கடைசியாக இருந்த சங்கம் கி.மு.300க்கும் கி.பி.250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது.

avvaiyaar

திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய ( கீழ் சாதி பிரிவை சேர்ந்தவர் என்பதால் ) மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது

மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். இந்த செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்த்தால், வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், இவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது.

வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் நிறைய உள்ளபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது இவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் திட்டமிட்டே அழிக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்திற்கு இடம் தருகின்றது  

இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது. இதை, காலம் காலமாய் வழங்கி வரும் கதைகளாளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்கள் மூலமும் தெறியமுடிகின்றது.

அக்கதைகளில் ஒன்று

மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றம் செய்ய வள்ளுவர் சென்றார். மற்ற புலவர்கள் இவருக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. இனவே இதை எதிர்த்து தன்னுடைய நூலை சங்கப் பலகையின் மேல் வைத்தாராம். அப்பலகை மற்ற புலவர்களை பொன்தாமரை குளத்தில் தள்ளிவிட்டது, பின் திருக்குறளை மட்டும் ஏற்றுக் கொண்டதாம்.

எது எப்படியோ வள்ளுவருக்கும் மற்ற புலவர்களுக்கும் இடையே ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. மதம் மற்றும் சாதி கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் வள்ளுவர். இதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உண்டு.

அதில் ஒரு பாடல்

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று

பாடலின் பொருள்

மதம் மற்றும் சாதி போன்ற சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறகூடாது என  ரிக், யசூர், சாம மற்றும் அதர்வண என்கிற நூல்களை, மற்றவர்கள் படிக்க கூடதபடி ஆரியர்கள் பல பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு, அந்த நூலின் உன்மை கருத்துகளை மறைத்து விட்டார்கள்.

ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார். இது தான் இப்பாடலின் பொருள்.

இக்கருத்துக்களையும்,  வள்ளுவரின் குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, இவர் ஒரு சமூக சீர்த்திருத்த அறிஞராக அழுத்தமாக மனதில் பதிந்து விடுவார் இன்பதே உன்மை.

அரசுப்பேருந்துகளில் திருக்குறள்

அரசுப்பேருந்துகளில் திருக்குறள்

1967-ல் அண்ணாவின் அமைச்சரவையில் திரு மு.கருனாநிதி பொதுப்பணி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப்பேருந்துகளிலும் திருவள்ளுவரின் படத்தையும், திருக்குறளையும் பொறிக்கச் செய்ய, அன்றைய அண்ணாவின் அரசு ஆணை பிறப்பித்தது.

இன்று வள்ளுவத்தின் நிலை

தி.மு.க, பிறகு அ.தி.மு.க மீண்டும் தி.மு.க என ஆட்சிக்ள் மாறிய போதெல்லாம், தமிழகத்தில் கை வைக்காத ஒரே ஒரு இடம் என்றால் அது அரசுப்பேருந்துகளில் உள்ள திருக்குறள்தான்.

அப்படிப்பட்ட திருக்குறள் தற்போது அரசுப்பேருந்துகளில் ஆங்காங்கே சிதைக்கப்பட்டுள்ளது, மேலும் திருவள்ளுவரின் உருவமும் அரசு பேருந்துகளில் சிதைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சில பேருந்துகளில் திருக்குறளையே காணவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் 2017-ல் எழுந்தது.

புதுப்பிக்கப்படாத திருக்குறள் பலகைகள்

அரசுப்பேருந்துகளில் ஆண்கள், பெண்கள் என்று இருக்கையை குறிப்பிடும் வாசகங்களும், பயணிகளிடம் டிக்கெட் இல்லை என்றால் அபராதம் என்பது குறித்த பலகைகளும் ஸ்டிக்கர்களும் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றது. ஆனல், திருக்குறல் மற்றும் ஐயன் திருவள்ளுவர் நிலை மட்டும் பரிதாபகரமாக உள்ளது.

பராமரிப்புப்கள் இல்லாத குமரி வள்ளுவர் சிலை

குமரி முனையில் உள்ள வள்ளுவரின் சிலை

குமரி முனையில் உள்ள வள்ளுவரின் சிலை

முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் உள்ள வள்ளுவரின் சிலைக்குக் கடல்காற்றினால் மெல்ல மெல்ல ஏற்படும் அரிப்பு மற்றும் சேதாரத்தை தடுத்திட ஆண்டுதோறும் ரசாயனக் கலவை பூசப்பட வேண்டும். ஆனால் இப்பராமரிப்புப் பணிகளின் நிலமை மிகவும் மோசமாகவே உள்ளது.

பள்ளி புத்தகங்களில் வள்ளுவர்

thiruvalluvar photo in school books

சமச்சீர் கல்விக்கான பள்ளிப்பாடப் புத்தகங்களில் அச்சிடப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்தையே மறைக்கின்ற காலதிற்கு தமிழகம் வந்துவிட்டது, இதன் விளைவு அடுத்த தலைமுறைக்கு நாம் வள்ளுவரின் பெயரை மட்டும் அல்ல அவர் உலகுக்கே வகுத்த கொடுத்த வாழ்வியலையும் அழித்துவிடுவோம்.

அதை மாற்ற விரும்பினால், தங்கள் குழந்தைகளுக்கு தமிழ வரலாறு மற்றும் கலாச்சரம் பற்றி கூற நாம் வள்ளுவரின் குறளை கற்று கொடுக்க மறவாதிற்கள்.

நன்றி.

amazon-kindle-deals

RELATED BOOKS

about thiruvalluvar in tamil

[content-egg module=Amazon template=custom/grid3]

தேடல் தொடர்பான குறிசொற்கள் :

thiruvalluvar in tamil, thiruvalluvar history in tamil, thiruvalluvar katturai in tamil, thiruvalluvar kurippu in tamil, thiruvalluvar pirantha oor, thiruvalluvar biography in tamil, திருவள்ளுவர் பிறந்த ஊர், திருவள்ளுவர் குறிப்பு in tamil

2 Comments
 1. THIRUVALLUVAR ORIGINAL NAME

 2. இவரின் உன்மையான பெயர், மதம், இவர் துணைவியின் பெயர், வாழ்ந்த இடம், காலம், அனைத்தும் இன்று வரை தெரியாது. அல்லது மறைக்கப்பட்டுள்ளது.

  உங்கள் கருத்தை இடுக...

  வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

  error: Content is protected !!
  தமிழ் DNA
  Logo
  Register New Account
  Reset Password
  %d bloggers like this:
  Shopping cart