திருகோணமலை மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருகோணமலை மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருகோணமலை மாவட்டத்தில் அன்டிஜன் பரிசோதனை மற்றும் இன்று 16ம் திகதி கிடைக்கப்பெற்ற பி.சி.ஆர் அறிக்கையின் படி 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் தொற்று விபரம் தொடர்பில் இன்றிரவு 8.30 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி,

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 11 ஆம், 12 ஆம் திகதிகளில் பெறப்பட்ட பி.சி.ஆர் அறிக்கையின் படி 5 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 10 ஆம் திகதி பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் படி மூன்று பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கிண்ணியாவில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 145 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் ஏழு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 48 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவர் கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மட்கோ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவருவதுடன், திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 78 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் 8 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் , மூதூர் பிரதேசத்தில் 49 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லையெனவும், குறிஞ்சாங்கேணி சுகாதார பிரிவில் 26 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் இன்று 16 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் மூலம் 09 பேரும், அன்டிஜன் பரிசோதனையில் 17 பேரும் மொத்தமாக 26 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

      உங்கள் கருத்தை இடுக...

      வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

      error: Content is protected !!
      தமிழ் DNA
      Logo
      Register New Account
      Reset Password
      %d bloggers like this: