தினமும் 8 வடிவ நடைப்பயிற்சி செய்து பாருங்க.. இந்த நோய் எல்லாம் பறந்தோடி விடுமாம்!

தினமும் 8 வடிவ நடைப்பயிற்சி செய்து பாருங்க.. இந்த நோய் எல்லாம் பறந்தோடி விடுமாம்!

உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பயிற்சி கொடுக்கும்படியான ஓர் சிறப்பான உடற்பயிற்சி தான் நடைப்பயிற்சி.

ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என கூறப்படுகின்றது.

அதிலும் 8 வடிவ நடைபயிற்சி உடலுக்கு பலவகையான நன்மைகளை தருகின்றது. பல நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றது.

அந்தவகையில் தற்போது இந்த 8 வடிவ நடைபயிற்சியை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

எவ்வாறு செய்ய வேண்டும்?
 • 8 வடிவ நடைப்பயிற்சி காலையில் அல்லது மாலையில் செய்வது நல்லது. இதனை திறந்த வெளியில் செய்வது நல்லது.
 • நடக்க ஆரம்பிக்கும் முன்பு முதலில் வடக்கில் இருந்து தெற்காகவும் பின்பு, தெற்கிலிருந்து வடக்காகவும் நடக்க வேண்டும்.
 • ஒவ்வொரு திசையிலும் 15 நிமிடம் என மொத்தமாக 30 நிமிடம் நடை பயிற்சியை மேற்கொள்வது நல்லது. 8 வடிவ நடைபயிற்சியின்போது காலில் செருப்பு போடக்கூடாது.
 • இதனை வெறும் காலில் தான் நடக்கவேண்டும். அவ்வாறு நடக்கும்போது நனது பாதத்தின் மையப்பகுதியில் அழுத்தம் நன்றாக ஏற்பட்டு உள்ளுறுப்புகள் நன்கு செயல்பட்டு குறிப்பிட்ட நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.
நன்மைகள் என்ன?
 • மூக்கடைப்பு உள்ளவர்கள் 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்வதன் மூலம் விரைவில் குணமடையும். இப்பயிற்சியை செய்யும் போது இருமல் ஏற்பட்டு சளி நன்றாக வெளியேற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
 • தினந்தோறும் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் இப்பயிற்சியை செய்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இந்த நடைபயிற்சியை காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களிலும் செய்வதனால் ஒரு வருடத்தில் சர்க்கரை நோயில் இருந்து விடுபடலாம்.
 • 8 வடிவ நடைபயிற்சி பார்வைத் திறனை மேம்படுத்தும். ஏனென்றால் 8 வடிவ நடைபயிற்சியின் போது நமது கண்கள் அந்த கோடுகளை கூர்ந்து கவனிப்பதன் மூலம் கண்களில் உள்ள கருவிழி அனைத்து பக்கமும் அசைந்து பார்ப்பதனால் கண்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து பார்வைத் திறனை அதிகரிக்கும்.
 • தோள்பட்டை வலி, கழுத்து வலி, முதுகு வலி, முழங்கால் வலி, கருப்பை பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, மன இருக்கம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தப் பிரச்சனை, தைராய்டு பிரச்சனை, சிறுநீரக கற்கள், பித்தக்கற்கள், ஆஸ்துமா, சைனஸ், தூக்கமின்மை, இதய நோய், நரம்புக்கோளாரு, சிறுநீரகப் பிரச்சனை ஆகியவை குணமடையும்.
யார் எல்லாம் செய்ய கூடாது?
 • அறுவைசிகிச்சை செய்தவர்கள் 6 மாதகாலம் வரை இந்த 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்ளக் கூடாது.
 • கர்பிணி பெண்கள் 8 வடிவ நடைபயிற்சியை கட்டாயமாக செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் உடலில் பலவகையான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
முக்கிய குறிப்பு
 • 8 வடிவ நடைபயிற்சியை 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மேற்கொள்ளலாம்.
 • சாப்பிட்ட உடனே 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்ளக் கூடாது. உணவு சாப்பிட்டு 2 மணிநேரம் கழித்து இந்த நடைபயிற்சியை மேற்கொள்ளலாம்.

தினமும் 8 வடிவ நடைப்பயிற்சி செய்து பாருங்க.. இந்த நோய் எல்லாம் பறந்தோடி விடுமாம்! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart