தானியங்கி கார் மோகம்.. சியோமி அடுத்து ஓப்போ.. அசத்தும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்..!

தானியங்கி கார் மோகம்.. சியோமி அடுத்து ஓப்போ.. அசத்தும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்..!

டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார் வெற்றிக்குப் பின்பு உலகின் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார் தயாரிப்புத் துறையில் இறங்கியுள்ளது.

உலகில் பல இடங்களில் இன்னும் எலக்ட்ரிக் கார் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வருவதற்குள் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதியதொரு தொழில்நுட்பத்தில் பணியாற்ற துவங்கியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆட்டோமொபைல் துறைக்குள் நுழைந்து வருகிறது.

 சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்

சர்வதேச ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் விற்பனையில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கம் செய்து வரும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தற்போது அடுத்தடுத்து தானியங்கி கார் தயாரிப்பில் இறங்கியுள்ளது. இப்பிரிவு பணிகளில் ஏற்கனவே சியோமி, ஹூவாய் ஆகிய நிறுவனங்கள் தீவிரமாகப் பணியாற்றி வரும் நிலையில் தற்போது ஓப்போ நிறுவனமும் இத்துறையில் இறங்கியுள்ளது.

 ஓப்போ அதிரடி

ஓப்போ அதிரடி

சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ சொந்தாக ஒரு தானியங்கி கார்-ஐ உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளதாகவும், இதற்காக ஓப்போ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓவான டோனி சென் ஆட்டோமொபைல் துறையில் முக்கியமான மற்றும் திறமையான அதிகாரிகளைத் தேடி வருகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 ஓப்போ சிஇஓ டோனி சென்

ஓப்போ சிஇஓ டோனி சென்

இதற்காக டோனி சென் கடந்த இரண்டு வாரத்தில் சீனா ஆட்டோமோட்டீவ் ரிசர்ச் இன்ஸ்டியூட் மற்றும் CATL ஆகிய அமைப்புகளிடம் ஆலோசனை செய்து நேரில் சென்று பல முக்கிய அதிகாரிகளைச் சந்தித்துள்ளார்.

 தானியங்கி எலக்ட்ரிக் கார்

தானியங்கி எலக்ட்ரிக் கார்

இப்புதிய கார் திட்டத்திற்காக ஓப்போ நிறுவனத்தின் துணை தலைவர் Wu Henggang உயர் பதவி ஆட்களைக் குறிப்பாக அட்டானமஸ் டிரைவிங் மற்றும் அல்காரிதம் பிரிவு ஊழியர்களை நேரடியாகச் சேர்வு செய்து வருகிறார். இதேபோல் Xiaopeng Motors நிறுவனத்தில் இருந்து கடந்த வரும் தலைமை விஞ்ஞானியான Guo Yandong ஓப்போ நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.

 ஓப்போ-வின் தொழில்நுட்ப சக்தி

ஓப்போ-வின் தொழில்நுட்ப சக்தி

மேலும் ஓப்போ நிறுவனத்திடம் ஏற்கனவே தொலைவை அளக்கும் கருவி, கேமரா போன்ற பல ஆட்டோமொபைல் துறைக்குப் பயன்படும் தொழில்நுட்பம் மற்றும் கருவிகளுக்குப் பேட்டன்ட் வைத்துள்ளதுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் காரின் வடிவமைப்பு மற்றும் பவர் டிரைன் உருவாக்கப்பட்டால் காரின் தயாரிப்பின் பணிகளைக் கிட்டத்தட்ட நிறைவடைந்து விடும்.

 சியோமி, ஹூவாய்

சியோமி, ஹூவாய்

சமீபத்தில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தயாரிக்கும் சியோமி எலக்ட்ரிக் கார் தயாரிப்பதற்கு 10 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோல் ஹூவாய் தனது முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி காரான SF5 மாதிரி வடிவத்தை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

தானியங்கி கார் மோகம்.. சியோமி அடுத்து ஓப்போ.. அசத்தும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்..! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password