தவிர்க்கவே கூடாத கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்..! பெண்களே கட்டாயம் தெரிஞ்சிகோங்க

தவிர்க்கவே கூடாத கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்..! பெண்களே கட்டாயம் தெரிஞ்சிகோங்க

கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியில், பிறப்புறுப்பு இணைகிற இடத்தில், கர்ப்பப்பை வாய் உள்ளது. ‘

ஹீயூமன் பாப்பிலோமா’ எனும் வைரஸ், இந்த இடத்தை தாக்கும் போது, கர்ப்பப்பை வாய் பாதிக்கப்பட்டு புற்று நோய் வருகிறது.

ஆரம்பநிலையில் அறிகுறிகள் அதிகம் தென்படாத புற்றுநோய்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகின்றது.

அதற்கு ஆரம்ப நிலையிலேயே அதன் அறிகுறிகளைக் கண்டறிய வேண்டும். அப்போது அதன் பரவலை தடுத்து குணப்படுத்திவிடலாம் என்கிறனர்.

தற்போது இதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

 • மாதவிடாய் அல்லாத நாட்கள் மற்றும் மாதவிடாய் நாட்களில் தொடர்ச்சியான வலி, அடிக்கடி மாதவிடாய் வருதல், சீரற்ற மாதவிடாய் இதுபோன்ற அறிகுறிகள் புற்றுநோய்க்கான அறிகுறி.
 • உடலுறவின் போது அந்தரங்க உறுப்பில் கடுமையான வலி, இரத்தக் கசிவு ஏற்படுகிறது எனில் அது கருப்பை வாய் புற்றுநோயாக இருக்கலாம். சில சமயங்களில் தொற்று, வெஜினா வறட்சி போன்றவற்றாலும் வரலாம்.
 • பொதுவாக 40 வயதைக் கடக்கும் பெண்களுக்கு மாதவிடாய் நிரந்தரமாக நின்றுவிடும். ஆனால் அப்படி நின்ற பிறகும் சில நேரங்களில் மாதவிடாய் போல் இரத்தக் கசிவு உண்டானால் அது கருப்பை அல்லது கர்பப்பை வாய் புற்றுநோயாக இருக்கலாம்.
 • திடீரென 40 வயதிற்குப் பின்பு மாதவிடாயின் போது கடுமையான வலி இருப்பின் அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். வெஜினாவில் வெள்ளைப்படுதல் அதிகமாக இருந்தாலும் அதை தவிர்க்காமல் மருத்துவரை அணுகுதல் நல்லது.
 • உங்கள் அடிவயிற்றி ஏதேனும் மாற்றம், கட்டி போன்று உருவாதல், திடீர் உடல் எடைக் குறைதல், பசியின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை சந்தித்தல் நல்லது.
தீர்வு என்ன ?
 • ஒவ்வொரு பெண்ணும் 21 அல்லது 25 வயதிற்குப் பின் அடிக்கடி கருப்பை பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இதனால் ஆரம்ப நிலையிலேயே எந்த நோயாக இருந்தாலும் சரி செய்ய முயற்சிக்கலாம். இந்த பரிசோதனை 65 வயது வரை செய்ய வேண்டும்.
 • குறிப்பாக குடும்பத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்கள் கட்டாயம் இந்த பரிசோதனைகளை செய்துகொள்வது நல்லது. இதனால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை ஆரம்ப நிலையிலேயே அழித்துவிடலாம்.

தவிர்க்கவே கூடாத கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்..! பெண்களே கட்டாயம் தெரிஞ்சிகோங்க Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart