- 1

தலைவலி குணமாக இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க

62 0

தலைவலி குணமாக இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க


இன்றைய காலக்கட்டத்தில் வேலைப்பளு, மனக்கஷ்டம் போன்ற சில பிரச்சனைகளின் காரணமாக தலைவலி ஏற்படுகிறது.


அத்தகைய தலைவலியை வீட்டில் உள்ள சில இயற்கை பொருள்களை பயன்படுத்தி எப்படி சரி செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம்.


கொத்தமல்லி


சமையலில் பயன்படுத்தப்படும் தேவையான அளவு கொத்தமல்லி இலையை அரைத்து அதை சிறிதளவு நீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் அடிக்கடி ஏற்படும் தலைவலி குறையும்.


- 3


கிராம்பு


கிராம்பை நன்கு அரைத்து பசை போல் மாற்றி அதை லேசாக சூடேற்றி பின் வலியுள்ள நெற்றியில் தடவினால் தலைவலி உடனே குணமாகும்.


கல் உப்பிற்கு நீரை உறிஞ்சிக்கொள்ளும் திறன் உள்ளது. மேலும் சிறிது கிராம்பு சிறிது கல் உப்பை பால் கலந்து அரைத்து சாப்பிட்டால் தலைவலி குணமாகும்.


சீரகப் பொடி


30 கிராம் சீரகப் பொடியை 1 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து பின் அதை வாரத்திற்கு இருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குணமாகும்.


- 5


குங்குமப்பூ மற்றும் வெற்றிலை


குங்குமப்பூவை சிறிது பால் சேர்த்து பசையாக்கி நெற்றியில் தடவினால் தலைவலி மறையும். வெற்றிலையை இதமாக சூடேற்றி நெற்றியில் சிறிது நேரம் வைத்தால் தலைவலி குணமாகும்


- 7


பட்டை


வீட்டில் உள்ள மாசாலா பொருட்களில் ஒன்றான பட்டை தலைவலிக்கு மிகவும் நல்ல மருந்து ஆகும்.பட்டையினை பொடியாக்கி நீர் சேர்த்து பசையாக்கி கொள்ள வேண்டும், பின்பு நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.


இஞ்சி


1-2 இஞ்சியை எடுத்து கொதிக்க வைத்து அந்த நீரில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட தலைவலியை வராமல் தடுக்கலாம்.


- 9


எலுமிச்சைச் சாறு


சிறிது எலுமிச்சை சாற்றை ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் கலந்து அருந்தினால் தலைவலி குணமாகும், இந்த சாறு வாயு உற்பத்தியை குறைத்து தலைவலியை சரி செய்கிறது.


யூகலிப்டஸ் தைலம்


யூகலிப்டஸ் தைலம் தலைவலிக்கு நல்ல மருந்து ஆகும், இதனைக் கொண்டு மாசாஜ் செய்தால் தலைவலிக்கு உடனே நல்ல தீர்வு கிடைக்கும்.


- 11


சூடான பால் குடித்தால்


தலைவலி இருக்கும் போது கொஞ்சம் சூடான பால் குடித்தால் தலைவலி விரைவாக குறையும். சாப்பாட்டில் கொஞ்சம் நெய் சேர்த்து உண்டாலும் தலைவலி குறையும்.


சந்தனம்


சந்தனத்தை சிறிது தண்ணீர் விட்டு மைபோல மென்மையாக அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி சரியாகும்.


- 13

தலைவலி குணமாக இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க Source link

Related Post

- 15

சிறுநீரக கற்களை கரைக்கும் மூலிகை!

Posted by - நவம்பர் 19, 2020 0
சிறுநீரக கற்களை கரைக்கும் மூலிகை! சிறுநீரக் கற்கள் கடுமையான வலியை ஏற்படுத்துவதுடன், சில நேரத்தில் அந்த கற்கள் சிறுநீரகப் பாதையில் அடைத்துக் கொண்டு, சிறுநீர் கழிக்க முடியாமல்…
- 21

நீரிழிவு நோயை இன்சுலின் அளவை எப்படி குறைக்கலாம்?

Posted by - அக்டோபர் 21, 2020 0
நீரிழிவு நோயை இன்சுலின் அளவை எப்படி குறைக்கலாம்? சத்தம் இல்லாமல் உடலுக்குள் யுத்தம் நடத்துகின்ற சர்க்கரை நோய் வயதானவர்களுக்கு தான் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய…
- 23

தீக்காய தழும்பு: உடனடி பலன் தரும் டிப்ஸ்

Posted by - நவம்பர் 22, 2020 0
தீக்காய தழும்பு: உடனடி பலன் தரும் டிப்ஸ் தீக்காயம் ஏற்பட்டால் அது தழும்பாகி நிரந்தமாக அசிங்கமான தோற்றத்தை உண்டாக்கிவிடும். அதற்கு உடனடி பலனைக் கொடுக்கும் தீர்வுகள் இதோ,…
- 25

வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள்

Posted by - நவம்பர் 25, 2020 0
வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள் வெங்காயம் ஒரு சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது. உடலுக்கு வெப்பத்தை அளிப்பதால் வெங்காயம் என்று அழைக்கப்பட்டது. வெங்காயத்தை எடுத்துக் கொள்வதால் சளி பிடிக்கும்…
- 29

உடலில் உள்ள பித்தத்தை குறைக்க வேண்டுமா? இதை செய்யுங்க

Posted by - நவம்பர் 16, 2020 0
உடலில் உள்ள பித்தத்தை குறைக்க வேண்டுமா? இதை செய்யுங்க நம் உடலின் முக்கிய உறுப்பான கல்லீரலில் 85% தண்ணீர், 10% பித்த உப்பு, 3% மியூக்கஸ் திரவம்,…

உங்கள் கருத்தை இடுக...