தமிழ் பழமொழிகள் | Tamil proverbs in Tamil | pazhamozhi | palamozhi

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 1

1 அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
2 காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
3 சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
4 உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
5 பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.

– Advertisement –

6 கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
7 காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.
8 மத்தளத்திற்கு இரு புறமும் இடி.
9 அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
10 கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!

Proverbs in Tamil
Proverbs in Tamil

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 2

11 முளையில் கிள்ளாதது முற்றினால், கோடாலிகொண்டு வெட்ட வேண்டும் .
12 கேட்டதெல்லாம் நம்பாதே? நம்பியதெல்லாம் சொல்லாதே?
13 சொல்வல்லவனை வெல்லல் அரிது.
14 எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
15 இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்!
16 நுணலும் தன் வாயால் கெடும்.
17 கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
18 கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
19 உழக்கு மிளகு கொடுப்பானேன் , ஒளிந்திருந்து மிளகு சாரு குடிப்பானேன் ?
20 கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.

Proverbs in Tamil
Proverbs in Tamil

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 3

21 அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
22 இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
23 கீறி ஆற்றினால் புண் ஆறும்.
24 எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
25 எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
26 நித்திய கண்டம் பூரண ஆயிசு.
27 மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
28 எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
29 சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
30 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.

- Advertisement -

Proverbs in Tamil
Proverbs in Tamil

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 4

31 மவுனம் கலக நாசம்.
32 பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
33 ஓடுகிற கழுதை வாலைப் பிடித்தால் , உடனே கொடுக்கும் பலன் (உதய்).
34 பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது .
35 இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
36 கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
37 பசியுள்ளவன் ருசி அறியான்.
38 ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
39 கீர்த்தியால் பசி தீருமா?
40 ஆரால் கேடு, வாயால் கேடு.

Proverbs in Tamil
Proverbs in Tamil

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 5

41 வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
42 சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.
43 தனி மரம் தோப்பாகாது.
44 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
45 கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
46 செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
47 வளவனாயினும் அளவறிந் தளித்துண்.
48 ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா?
49 எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
50 தங்கம் தரையிலே தவிடு பானையிலே.

Proverbs in Tamil
Proverbs in Tamil

- Advertisement -

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 6

51 குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
52 சாரத்தை உட்கொண்டு சக்கையை உமிழ்ந்துவிடுவதுபோல்.
53 வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
54 தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?
55 எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
56 அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
57 கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
58 வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.
59 அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
60 மாரடித்த கூலி மடி மேலே.

Proverbs in Tamil
Proverbs in Tamil

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 7

61 ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
62 இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
63 நாய் விற்ற காசு குரைக்குமா?
64 மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
65 நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.
66 பல துளி பெருவெள்ளம்.
67 பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
68 குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.
69 கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
70 சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.

Proverbs in Tamil
Proverbs in Tamil

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 8

71 கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
72 நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
73 சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
74 நூற்றுக்கு மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
75 நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்.
76 குரங்கின் கைப் பூமாலை.
77 நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
78 ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
79 பூனை கொன்ற பாவம் உன்னோடு , வெல்லம் தின்ற பாவம் என்னோடு.
80 கொல்லைக்குப் பல்லி , குடிக்குச் சகுனி

Proverbs in Tamil
Proverbs in Tamil

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 9

81 அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்கும்.
82 நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
83 எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
84 உடல் ஒருவனுக்கு பிறந்தது , நாக்கு பலருக்கு பிறந்தது .
85 கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
86 கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
87 அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
88 கொடுக்கிறது உழக்குப்பால், உதைக்கிறது பல்லுப்போக.
89 இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா ?
90 கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.

- Advertisement -

Proverbs in Tamil
Proverbs in Tamil

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 10

91 உண்பான் தின்பான் பைராகி, குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி.
92 கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
93 இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
94 தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
95 எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
96 கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
97 காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
98 ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
99 கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
100 களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.

Proverbs in Tamil
Proverbs in Tamil

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 11

101 தேன் ஒழுக பேசி , தெருவழியே விடுகிறது.
102 முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
103 சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும்.
104 தன் வினை தன்னைச் சுடும் , ஓட்டப்பம் வீட்டை  சுடும் .
105 நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்.
106 அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
107 சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி.
108 ஆடு கொழுக்கிறதெல்லாம், இடையனுக்கு லாபம் .
109 கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
110 நாவு அசைய , நாடு அசையும்.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 12

111 சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
112 இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்.
113 பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது.
114 எழுதுகிறது பெரிதல்ல , இன்னும் அறிந்து சேர்க்கிறது பெரிது
115 மனம் போல வாழ்வு.
116 கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்.
117 அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
118 ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
119 விளையும் பயிர் முளையிலே தெரியும்.
120 உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

- Advertisement -

Tamil Palamoligal
Tamil Palamoligal

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 13

121 ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
122 பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.
123 இனம் இனத்தோடே, வெள்ளாடு தன்னோடே.
124 ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
125 கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
126 காற்றில்லாமல் தூசி பறக்குமா?
127 ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
128 ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
129 இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள்.
130 அறிய அறியக் கெடுவார் உண்டா?

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 14

131 மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா?
132 தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
133 குலத்துக்கு ஈனம் கோடாலிக்காம்பு.
134 மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
135 மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
136 புண்ணியத்துக்கு உழுத குண்டையை பல்லைப் பிடித்துப் பதம் பார்த்ததுபோல.
137 நாலாறு கூடினால் பாலாறு.
138 தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
139 கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.
140 நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.

Tamil Palamoligal
Tamil Palamoligal

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 15

141 மீதூண் விரும்பேல்.
142 நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
143 நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமும் இல்லை.
144 தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
145 கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
146 தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
147 ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை.
148 கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
149 மன்னன் எப்படியோ, மன்னுயிர் அப்படி.
150 எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.

- Advertisement -

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 16

151 பக்கச் சொல் பதினாயிரம்.
152 ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
153 ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
154 சர்க்கரை என்றால் தித்திக்குமா?
155 நன்மை கடைப்பிடி.
156 எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
157 முருங்கை பருத்தால் தூணாகுமா?
158 கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
159 கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
160 அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?

Tamil Palamoligal
Tamil Palamoligal

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 17

161 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
162 கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
163 கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
164 பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
165 தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
166 சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
167 சுடினும் செம்பொன் தன்னொலி கெடாது.
168 நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
169 அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
170 மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 18

171 நாற்பது வயதுக்கு மேல் நாய்க் குணம்.
172 அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி .
173 கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
174 அறமுறுக்கினால் அற்றும் போகும்.
175 வெளவாலுக்கு யார் தாம்பூலம் வைத்தார்கள் ?
176 வீட்டுக்கு செல்வம் மாடு , தோட்டச் செல்வம் முருங்கை.
177 இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
178 கனிந்த பழம் தானே விழும்.
179 கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
180 தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.

Tamil Palamoligal
Tamil Palamoligal

- Advertisement -

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 19

181 நோய்க்கு இடம் கொடேல்.
182 உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
183 கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
184 கடல் திடலாகும், திடல் கடலாகும்.
185 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
186 உளை (அல்லது சேறு) வழியும், அடை மழையும், பொதி எருதும் தனியுமாய் அலைகிறதுபோல்.
187 அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்
188 எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
189 ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
190 இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 20

191 கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
192 வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
193 வானம் சுரக்க , தானம் சிறக்கும்.
194 குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
195 ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.
196 புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
197 கல்லாதவரே கண்ணில்லாதவர்.
198 கைய பிடித்து கள்ளை வார்த்து , மயிரை பிடித்து பணம் வாங்குறதா ?
199 காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
200 உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.

Tamil Palamoligal
Tamil Palamoligal

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 21

201 நாய் வாலை நிமிர்த்த முடியாது.
202 அரைக்கிறவன் ஒன்று நினைத்து அரைக்கிறான், குடிகிறவன் ஒன்று நினைதுக்க் குடிக்கிறான்.
203 மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.
204 ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.
205 கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
206 குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
207 சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
208 தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.
209 வெறும் வாய் மெல்லுகிற அம்மையாருக்கு அவல் அகப்பட்டது போல.
210 ஆனை படுத்தால் ஆள் மட்டம்.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 22

211 தொடையில் புண்ணை நடையில் காட்டுகிறதா ?
212 சோம்பித் திரியேல்.
213 புத்திமான் பலவான்.
214 இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; இராச திசையில் கெட்டவணுமில்லை.
215 காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
216 காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.
217 பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
218 பொங்கியும் பால் புறம் போகவில்லை.
219 சுக துக்கம் சுழல் சக்கரம்.
220 இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

Tamil Pazhamozhigal
Tamil Pazhamozhigal

- Advertisement -

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 23

221 எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
222 சைகை அறியாதவன் சற்றும் அறியான்.
223 இறைக்கிற ஊற்றே சுரக்கும்.
224 கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
225 பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதே.
226 மாடம் இடிந்தால் கூடம்.
227 செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
228 எடுப்பார் மழுவை, தடுப்பார் புலியை, கொடுப்பார் அருமை.
229 கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
230 இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 24

231 காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
232 வெளுத்ததெல்லாம் பாலல்ல.
233 வருந்தினால் வாராதது இல்லை.
234 காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
235 நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
236 பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
237 விதி எப்படியோ மதி அப்படி.
238 கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
239 சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
240 நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.

Tamil Pazhamozhigal
Tamil Pazhamozhigal

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 25

241 நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
242 அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
243 படையிருந்தால் அரணில்லை.
244 எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
245 உளவு இல்லாமல் களவு இல்லை.
246 ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
247 பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
248 கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா.
249 மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
250 தாழ்ந்து நின்றால் , வாழ்ந்து நிற்பாய்.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 26

251 ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
252 தவளை தன் வாயாற் கெடும்.
253 தேரோட போச்சு திருநாளு , தாயோட போச்சு பிறந்த அகம்
254 அற்ப அறிவு அல்லற் கிடம்.
255 மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
256 குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
257 வெள்ளம் வரும் முன் அணைகோல வேண்டும்.
258 நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
259 தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
260 தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.

- Advertisement -

Tamil Pazhamozhigal
Tamil Pazhamozhigal

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 27

261 அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
262 சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்?
263 வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
264 துட்டு வந்து போட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொடியிலே விழுந்ததோ?
265 சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
266 கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
267 கெண்டையைப் போட்டு வராலை இழு.
268 மலிந்த சரக்கு கடைத் தெருவுக்கு வரும்.
269 உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
270 படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 28

271 ஒரு நாளுமில்லாமல் திருநாளுக்குப் போனால் , திருநாளும் வேரு நாளாச்சுது.
272 செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
273 எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.
274 அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
275 ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.
276 இரும்பு அடிக்கிற இடத்தில நாய்க்கு என்ன வேலை ?
277 தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
278 காணி ஆசை கோடி கேடு.
279 கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
280 பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.

Tamil Pazhamozhigal
Tamil Pazhamozhigal

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 29

281 அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
282 உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
283 எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?
284 அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
285 தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
286 காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
287 உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
288 இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
289 புயலுக்குப் பின்னே அமைதி.
290 மாற்றானுக்கு இடங் கொடேல்.

- Advertisement -

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 30

291 கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
292 கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
293 ஆழமறியாமல் காலை இடாதே.
294 இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
295 எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
296 காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
297 மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே.
298 நிறை குடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்.
299 தானாடா விட்டாலும் சதையாடும்.
300 குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.

Tamil Pazhamozhigal
Tamil Pazhamozhigal

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 31

301 மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
302 ஏரி நிறைந்தால் கரை கசியும்.
303 கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
304 ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
305 கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
306 குணத்தை மாற்றக் குருவில்லை.
307 சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி.
308 எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா.
309 மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
310 கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 32

311 அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
312 மெளனம் மலையைச் சாதிக்கும்.
313 ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
314 கள்ள மனம் துள்ளும்.
315 கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்.
316 சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
317 தருமம் தலைகாக்கும்.
318 சேற்றிலே செந்தாமரை போல.
319 எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
320 காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 33

321 ஒட்டைக்கூதன் பாட்டைக் கேட்டு இரட்டை தாழ்பாள் போட்டது போல.
322 அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.
323 இரண்டு போன்சாதிக்காரனுக்குக் கொண்டை என்னத்திற்கு ?
324 கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
325 முன் கை நீண்டால் , முழங்கை நீளும்.
326 ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
327 படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
328 வீட்டில் எலி வெளியில் புலி.
329 மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாதேபோனால் பரதேசம் போவேன்.
330 முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.

- Advertisement -

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 34

331 பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
332 ஒற்றைக் காலில் நிற்கிறான்.
333 தலையை தடவி மூளையை உரிவான்
334 சாது மிரண்டால் காடு கொள்ளாது.
335 அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
336 குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
337 கெடுவான் கேடு நினைப்பான்.
338 நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு.
339 அகல் வட்டம் பகல் மழை.
340 கல்லாடம் படித்தவனோடு மல் ஆடாதே.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 35

341 தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
342 அரைக்காசை ஆயிரம் பொன்னக்குகிறவளும் பெண்சாதி , ஆயிரம் பொன்னை அறைக்காசு ஆக்கு கிறவளும் பெண்சாதி.
343 கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
344 கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
345 கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
346 காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
347 சாண் ஏற முழம் சறுக்கிறது.
348 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
349 குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
350 சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 36

351 எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
352 பகுத்தறியாமல் துணியாதே, படபடப்பாகச் செய்யாதே.
353 நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
354 வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
355 பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்
356 அடியாத மாடு படியாது.
357 பொறுமை கடலினும் பெரிது.
358 மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
359 குமரிக்கு ஒரு பிள்ளை , கோடிக்கு ஒரு வெள்ளை .
360 வெட்டு ஒன்று துண்டிரண்டு.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 37

361 இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
362 ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
363 மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
364 இறுகினால் களி , இளகினால் கூழ்.
365 சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
366 உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?
367 மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
368 பூவுடன் கூடின நாரும் மனம் பெற்றற்போல்.
369 கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
370 சதை உள்ள இடத்தில கத்தி நாடும்

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 38

371 இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை?
372 கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
373 உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
374 குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
375 படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
376 அறச் செட்டு முழு நட்டம்.
377 செய்வன திருந்தச் செய்.
378 மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.
379 அறிவு இல்லார்தமக்கு ஆண்மையுமில்லை.
380 மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.

- Advertisement -

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 39

381 மாவுக்குத் தக்க பணியாரம்.
382 பேச்சுப் பேச்சு என்னும் ; பெரும் பூனை வந்தால் கீச்சுக் கேச் சென்னும் கிளி .
383 நொறுங்கத் தின்றால் நூறு வயது.
384 உட்சுவர் இருக்க, புறச்சுவர் பூசலாமா ?
385 பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
386 ஏருழுகிறவன் இளப்பமானால், எருது மச்சான் முறை கொண்டாடும்.
387 பொறுத்தார் பூமி ஆள்வார்.
388 குப்பை உயரும் கோபுரம் தாழும்.
389 தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
390 கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 40

391 கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
392 நல்லவன் உறவை நாலு பணம் கொடுத்துச் சம்பாதிக்கவேண்டும் , கேட்டவன் உறவை பத்துப் பணம் கொடுத்து நீக்கவேண்டும்.
393 கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
394 சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.
395 நயத்திலாகிறது பயத்திலாகாது.
396 குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
397 சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
398 அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
399 ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
400 கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 41

401 சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
402 காய்ந்தும் கெடுத்தது, பெய்தும் கெடுத்தது.
403 பந்தியிலே வேண்டாம் வேண்டாம் என்றாலும் , இலை போத்தல் இலை போத்தல் என்கிறான்.
404 பூனைக்குக் கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
405 மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.
406 போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
407 கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்.
408 ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.
409 அகல உழுகிறதை விட ஆழ உழு.
410 உயிரோடு இருக்கும்போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை, ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய் விட்டது போல.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 42

411 சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
412 பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
413 நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
414 மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.
415 வடக்கே கருத்தால் மழை வரும்.
416 கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்.
417 கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
418 குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
419 செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
420 உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.

- Advertisement -

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 43

421 குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
422 காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது.
423 விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
424 ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச்சொன்னால்  நோன்டிக்குக் கோபம் .
425 கெட்டாலும் கெட்டி கெட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
426 கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
427 சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
428 பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
429 அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
430 அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 44

431 ஆனைக்கும் அடிசறுக்கும்.
432 கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
433 ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
434 பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
435 ஆற்றிலே போகுது தண்ணீரை , அப்பா குடி , ஆத்தாள் குடி.
436 உள்ளது போகாது இல்லது வாராது.
437 பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.
438 அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
439 கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
440 சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெண்பாவைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா?

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 45

441 அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
442 ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
443 எண்ணிச் செய்கிறவன் கெட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
444 பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு, பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
445 புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
446 சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.
447 வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
448 மண்னுயிரைத் தன்னுயிர்போல் நினை.
449 சித்திரமும் கைப்பழக்கம்.
450 எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 46

451 கடையச்சே வராத வெண்ணெய், குடையச்சே வரப்போகிறதோ?
452 நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.
453 கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
454 குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
455 கல்வி அழகே அழகு.
456 ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.
457 அடி நாக்கிலே நஞ்சும் , நுனி நாக்கிலே அமிர்தமா ?
458 ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
459 கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
460 கன்னி இருக்க காளை மணம் ஏறலாமா ?

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 47

461 தன் கையே தனக்குதவி.
462 பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
463 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
464 காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்.
465 ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
466 எரிகிற விட்டிலே பிடுங்கிறது லாபம்.
467 கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்.
468 கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
469 கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
470 ஈர நாவிற்கு எலும்பில்லை.

- Advertisement -

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 48

471 சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
472 ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.
473 பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்.
474 எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.சருகைக் கண்டு
475 ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க.
476 ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
477 உழுகிற நாளில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தது போல.
478 தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
479 எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
480 முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 49

481 கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
482 இளங்கன்று பயமறியாது.
483 முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா
484 பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
485 கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.
486 மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.
487 மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
488 எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
489 மனம் உண்டானால் வழி உண்டு.
490 பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 50

491 மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
492 சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.
493 வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவு என்ன ?
494 கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
495 கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
496 விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
497 சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
498 தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
499 ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
500 முதல் கோணல் முற்றுங் கோணல்

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 51

501 கல்விக்கு அழகு கசடர மொழிதல்.
502 வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்.
503 நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
504 மண்டையுள்ள வரை சளி போகாது.
505 அடக்கமே பெண்ணுக்கு அழகு.
506 காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
507 வாழு, வாழ விடு.
508 அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
509 பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுதானும் பேசாதே.
510 கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 52

511 யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
512 நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
513 தாயும் பிள்ளையுமானாலும், வாயும் வயிறும் வேறு.
514 எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
515 பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
516 நோய் கொண்டார் பேய் கொண்டார்.
517 கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
518 மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
519 பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
520 ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.

- Advertisement -

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 53

521 உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
522 பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
523 தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
524 எறும்புந் தன் கையால் எண் சாண்.
525 வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
526 துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
527 ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
528 மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்.
529 இளமையில் கல்.
530 வியாதிக்கு மருந்துண்டு, விதிக்கு மருந்துண்டா?

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 54

531 எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
532 முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
533 நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
534 உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
535 உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
536 வெறுங்கை முழம் போடுமா?
537 ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைபபூ சக்கரை.
538 பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
539 இஞ்சி இலாபம் மஞ்சளில்.
540 குதிரை நல்லதுதான், சுழி கெட்டது.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 55

541 தூக்குனங்குருவி குரங்குக்கு புத்தி சொன்னது போல
542 தாய் முகம் காணாத பிள்ளையும் , மழை முகம் காணாத பயிரும் உருபடாது.
543 கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
544 குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும்.
545 குறையச் சொல்லி , நிறைய அள.
546 செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
547 காய்த்த மரம் கல் அடிபடும்.
548 கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
549 நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
550 கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 56

551 பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.
552 பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
553 இருவர் நட்பு ஒருவர் பொறை.
554 நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
555 எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்.
556 தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
557 பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
558 முடி வைத்த தலைக்குச் சுழிக் குற்றம் பார்க்கிறதா?
559 முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
560 மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 57

561 பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
562 நெருப்பில்லாமல் புகையாது.
563 எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
564 குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
565 ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
566 மன்னவர்கள் ஆண்டது எல்லாம் மந்திரிகள் ஆண்மை
567 வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
568 மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
569 இளமையில் கல்வி சிலையில் எழுத்து.
570 குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.

- Advertisement -

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 58

571 நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.
572 நேற்று உள்ளார் இன்று இல்லை.
573 பெண்ணின் கோணல் , பொன்னிலே நிமிரும்
574 உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
575 ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
576 சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.
577 கெட்டும் பட்டணம் சேர்.
578 அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
579 இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
580 கோபம் சண்டாளம்.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 59

581 பணம் பத்தும் செய்யும்.
582 கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
583 கிட்டாதாயின் வெட்டென மற.
584 தந்தை தாய் பேண்.
585 செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
586 கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
587 கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
588 அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
589 குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
590 மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 60

591 கொண்டையைப் போட்டு விராலை இழுக்கிறது.
592 கொடுத்ததைக் கேட்டால் அடுத்ததாம் பகை.
593 கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
594 பாம்பின் கால் பாம்பு அறியும்.
595 கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது.
596 யானைக்கும் அடி சறுக்கும்.
597 பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
598 உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
599 பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
600 தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 61

601 விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
602 கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
603 முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
604 மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கர்பூரம்.
605 ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
606 கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
607 மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
608 இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
609 பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
610 கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 62

611 உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்.
612 அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
613 சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
614 சுட்ட சட்டி அறியுமா சுவை?
615 தலை இருக்க வால் ஆடலாமா ?
616 பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
617 மனமுரண்டிற்கு மருந்தில்லை.
618 நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்.
619 பேராசை பெருநட்டம்.
620 நூற்றைக் கெடுத்தது குறுணி.

- Advertisement -

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 63

621 சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே.
622 கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
623 பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
624 நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.
625 ஆடையில்லாதவன் அரை மனிதன்.
626 கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம்.
627 கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
628 உலகத்துக்கு ஞானம் பேய் , ஞானத்திற்கு உலகம் பேய்.
629 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
630 இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 64

631 பங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்றும் சிறுக்கிறுதுமில்லை.
632 கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
633 குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
634 கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா?
635 கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
636 ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
637 அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
638 பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்.
639 மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்.
640 நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 65

641 உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
642 கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
643 எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே.
644 பால் சட்டிக்கு பூனை காவல் வைக்கிறதுபோல்.
645 ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
646 பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
647 நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுவதா?
648 கையாளாத ஆயுதம் துருப்பிடிக்கும்.
649 சுண்டைக்காய் காற்பணம், சுமை கூலி முக்காற்பணம்.
650 அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்கவேண்டும்.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 66

651 மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
652 நைடதம் புலவர்க்கு ஒளடதம்.
653 கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர் குரு தக்ஷணையா?
654 தனக்கு மிஞ்சித் தான் தருமம்
655 பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.
656 கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
657 மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
658 புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
659 அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
660 நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 67

661 ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.
662 சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
663 நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை.
664 பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும்.
665 காடுப்பூனைகுச் சிவராத்ரி விரதமா ?
666 தொன்மை நாடி , நன்மை விடாதே.
667 இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
668 பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
669 விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
670 வரவு எட்டணா செலவு பத்தணா.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 68

671 கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
672 முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?
673 ஊரார் வீட்டு நெய்யே , என் பொண்சாதி கையே.
674 ஈர வெங்காயத்திற்கு இருபத்து நாலு புரை எடுக்கிறது.
675 தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
676 கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
677 பூ விற்ற காசு மணக்குமா?
678 சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
679 முன் ஏர் போன வழிப் பின் ஏர்.
680 கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?

- Advertisement -

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 69

681 ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
682 எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குகிறவர் யார்?
683 எறும்பு ஊர கல்லுந் தேயும்.
684 பட்டும் பாழ், நட்டும் சாவி.
685 எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்.
686 காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும், காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
687 ஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான்.
688 அள்ளாது குறையாது , சொல்லாது பிறவாது.
689 மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
690 நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 70

691 ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
692 நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
693 யானைகொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வரும்.
694 மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
695 இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
696 கோல் ஆட, குரங்கு ஆடும்.
697 கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
698 ஊசி கொள்ளப்போய்த் துலாக் கணக்கு பார்த்ததுபோல.
699 கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
700 கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 71

701 இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
702 மாரி யல்லது காரியம் இல்லை.
703 சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
704 எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
705 மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
706 மனம் கொண்டது மாளிகை.
707 வருமுன் காப்பதறிவு.
708 ஏதென்று கேட்பாருமில்லை, எடுத்துப் பிடிப்பாருமில்லை.
709 சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
710 கையிலே காசு வாயிலே தோசை.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 72

711 மாவு இருக்கிற மனதைப்போல், கூழில் இருக்கும் குணம்.
712 இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
713 அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
714 எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.
715 எதார்த்தவாதி வெகுசன விரோதி.
716 நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
717 மதில் மேல் பூனை போல.
718 ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
719 குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
720 நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா!

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 73

721 கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
722 பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
723 மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்.
724 அப்பாசுவாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு, கொட்டுமேளம் கோவிலிலே, வெற்றிலை பாக்கு கடையிலே, சுண்ணாம்பு சூளையிலே.
725 ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்.
726 பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார்.
727 ஆனையை (அல்லது மலையை) முழுங்கின அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி.
728 சர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா?
729 கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
730 எண்ணை முந்துதோ திரி முந்துதோ?

- Advertisement -

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 74

731 நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.
732 கடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்.
733 ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
734 ருநாள் கூத்துக்கு மீசை சிரைக்கவா?
735 ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்.
736 ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள் , தொண்ணூறு நாளும் போனால் துடைப்பக்கட்டை
737 கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
738 செல்லும் செல்லாததுக்கும் செட்டியார் இருக்கிறார்.
739 பல்லக்கு ஏய யோகம் உண்டு, உன்னி ஏறச் சீவன் இல்லை.
740 காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 75

741 ஆம்புடையான் செத்து அவதி படும் போது, அண்டை வீட்டுக்காரன் அக்குளிலே பாய்ச்சுகிறான் !
742 மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
743 குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
744 காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
745 பிள்ளை பெறப் பெறப் ஆசை , பணம் சேரச் சேர ஆசை.
746 அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
747 ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
748 பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
749 ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
750 வாழ்வும் தாழ்வும் சில காலம்.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 76

751 இன்பமும் துன்பமும் எடுத்த உடலுக்கு இயல்பு.
752 கரணம் தப்பினால் மரணம்.
753 நா அசைய நாடு அசையும்.
754 உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
755 காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
756 கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
757 மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
758 கட்டி வைத்த பணத்தைத் தட்டிப் பறித்தார்போல.
759 இறங்கு பொழுதில் மருந்து குடி.
760 குரைக்கிற நாய் கடிக்காது.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 77

761 பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
762 மொழி தப்பினவன் வழி தப்பினவன்.
763 சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
764 ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
765 முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
766 முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
767 பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி , மேட்டிலே இருந்தா அக்கா !
768 பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்.
769 காப்பு சொல்லும் கை மெலிவை.
770 கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.

- Advertisement -

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 78

771 ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.
772 பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
773 குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
774 ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்கவா?
775 தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.
776 வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
777 எங்கே திருடினாலும் கன்னக்கோல் வைக்க ஒரு இடம் வேண்டும்.
778 அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
779 குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
780 இரக்கப் போனாலும் சிறக்கப் போ.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 79

781 வணங்கின முள் பிழைக்கும்.
782 எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
783 உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே.
784 பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
785 மின்னுவது எல்லாம் பொன்னல்ல.
786 பணம் உண்டானால் மணம் உண்டு.
787 எருமை வாங்கும் முன் நெய் விலை கூறுகிறதா ?
788 உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்?
789 உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
790 எள்ளுதான் எண்ணைக்குக் காய்கிறது. எலிப் புழுக்கை என்னத்துக்கு காய்கிறது?

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 80

791 உலோபிக்கு இரட்டை செலவு.
792 துலுக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.
793 நித்தியங் கிடைக்குமா அமாவாசைச் சோறு?
794 அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
795 ஒன்று ஒன்றாய் நூறா? ஒருமிக்க நூறா?
796 எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
797 பதறாத காரியம் சிதறாது.
798 இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
799 கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.
800 சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 81

801 நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
802 அம்மணத்தேசத்தில் கோமணம் கட்டினவன் பைத்தியக்காரன்.
803 ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
804 ஒரு அடி அடித்தாலும் பட்டுக்கொள்ளலாம், ஒரு சொல் கேட்க முடியாது.
805 பெண் என்றால் பேயும் இரங்கும்.
806 உங்கள் உறவிலே வேகிறதைவிட, ஒருகட்டு விறகிலே வேகிறது மேல்.
807 முள்ளை முள்ளால் எடு.
808 பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
809 அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
810 வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா?

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 82

811 நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
812 சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது .
813 எலி அழுதால் பூனை விடுமா?
814 சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
815 கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
816 வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்.
817 குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
818 பருவத்தே பயிர் செய்.
819 உதட்டில் உறவு உள்ளத்தில் பகை.
820 ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

- Advertisement -

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 83

821 பொங்கின பால் போயப்பால்
822 வட்டி ஆசை முதலுக்கு கேடு.
823 வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
824 நீர் மேல் எழுத்து போல்.
825 அந்தி மழை அழுதாலும் விடாது.
826 குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
827 சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம் , அவள் இச்சம் பாயை கட்டிகொண்டு எதிரே வந்தாளாம்.
828 நெய் முந்தியோ திரி முந்தியோ.
829 ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.
830 நாள் செய்வது நல்லார் செய்யார்.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 84

831 பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
832 ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
833 ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
834 சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.
835 முகத்துக்கு முகம் கண்ணாடி
836 எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
837 அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
838 தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
839 கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
840 ஊண் அற்றபோது உடலற்றது.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 85

841 பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
842 நூல் கற்றவனே மேலவன்.
843 எதிரிக்குச் சகுனத்தடை என்று மூக்கை அறுத்துக் கொள்ளுகிறது போல.
844 பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
845 கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
846 கண்டால் காமாச்சி நாயகர் , காணவிட்டால் காமாட்டி நாயகர்.
847 கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
848 கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
849 சாதுரியப்பூனை மீன் இருக்க, புளியங்காயத் திங்கிறதாம்.
850 ஊர் எல்லாம் வாழ்கிறது என்று வீடு எல்லாம் அழுது புரண்டாலும் வருமா ?

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 86

851 மாதா ஊட்டாத சோறு, மாங்காய் ஊட்டும்.
852 ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளில் சிரித்தான் , திருநாளும் வேறு நாளாச்சுது .
853 பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
854 ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்
855 அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
856 பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.
857 தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
858 போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
859 எலி வளையானாலும் தனி வலை வேண்டும்.
860 சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 87

861 குதிரை குருடானாலும் , கொள்ளு தின்கிறதில் குறைய ?
862 குரு இலார்க்கு வித்தையுமில்லை, முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
863 ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
864 நெருப்பு என்றால் வாய் வெந்து போமா?
865 பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
866 முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
867 குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
868 எட்டினால் குடுமியைப் பிடிக்கிறது , எட்டாவிட்டால் காலைப் பிடிகிறது.
869 ஊருடன் ஒட்டி வாழ்.
870 முன்கை நீண்டால் முழங்கை நீளும்.

- Advertisement -

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 88

871 ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
872 நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
873 கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
874 தூர்ந்த கிணற்றைத் தூர்வார்காதே
875 கல மாவு இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா?
876 சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
877 கண் கண்டது கை செய்யும்.
878 உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
879 திருவாக்குக்கு எதிர்வாக்குக்கு உண்டா?
880 பேசப் பேச மாசு அறும்.

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் – part 89

881 அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
882 நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம்.
883 அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
884 உயிர் காப்பான் தோழன்.
885 உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
886 தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும்.
887 கொடிக்கு காய் கனமா?
888 செல்லம் செரூக்குகிறதா ? வாசல் படி வழுக்கிறதா ?
889 ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று.
890 மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.

891. கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?

பொருள்: கடுகு எத்தனைதான் சிறியதாக இருப்பினும் அதன் காரம் போகாது அதன் பலனைத்தரும். அதே போலவே பலரையும், சில பொருட்களையும் சிறியவை என எண்ணி ஒதுக்கிவிடாமல் இருந்தால் அதனால் பல நேரத்திற்கும் மிகுந்த பலன் கிடைக்கும்.

892. ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.

பொருள்: ஒரு செயலை செய்யுமுன் அதை நன்கு ஆராய்ந்த பின்பே தொடங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் துவங்கினால் அது மிகத்துயரத்தை கொடுத்துவிடும்.

893. ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.

பொருள்: பலமுடையவர்கள் தங்கள் பலத்தால் ஒரு ஏழைக்கு தீங்கு இழைக்கும் போது அவரால் எதிர்க்க முடியாமல் இயலாமையால் மனம் நோக அழ நேரிடும். அவ்வாறான மனம் நொந்து அழுத கண்ணீர் தீங்கிழைத்தவர் எப்படிப்பட்டவர் ஆயினும் அவரை அழித்து விடும்.

894. கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்

பொருள்: வைக்கோல் போன்றவற்றை ஒரு சேர கூட்டி வைத்திருப்பதை ‘வைக்கோல் போர்’ என்றும் போர் என்றும் அழைக்கப்படும். அதில் சிறு நெருப்பு பட்டுவிட்டாலும் காய்ந்து இருக்கும் போரானது எளிதில் தீ பற்றிவிடும். தீயை அணைப்பதாக இருந்தால் அதை கடுகளவும் (எள்ளளவும்) மிச்சம் வைக்காமல் அணைத்துவிட வேண்டும்.

- Advertisement -

895. ஏழைபேச்சு அம்பலம் ஏறாது

பொருள்: பண்டைய காலத்தில் படித்த அறிஞர்கள் கலந்து உரையாடி விவாதிக்கும் இடத்திற்கு அம்பலம் என்று பெயர். அங்கே இன்று எவ்வாறு பணம் உள்ளவர்களை மதிக்கிறார்களோ அதே போல முன்பும் பணம் உள்ளவர்களின் பேச்சு சிலரால் மதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வகை பழமொழி ஏற்பட்டது.

896. சருகைக் கண்டு தணலஞ்சுமா

பொருள்: உலர்ந்த இலையைச் சருகு என்பர். தணல் என்றால் தீ, உலர்ந்த இலைச் சருகை தீக்கணல் எளிதில் எரித்து விடும். எனவே அதைக்கண்டு அஞ்சுவதில்லை. இதையே எளியவரைக்கண்டு வீரன் அஞ்சி ஓடமாட்டான். இவ்வகை சூழ்நிலைகளை விளக்க இப்பழமொழி கையாளப்படுகிறது.

897. எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்

பொருள்: இப்பழமொழி மருத்துவம் சார்ந்த பழமொழி ஆகும். எரு கெட்டார் என்பது மலச்சிக்கல் கொண்டவர்களை குறிக்கிறது. கடுக்காய் மலச்சிக்கலுக்கு மிகவும் சிறந்த மலமிழக்கியாக பயன்படும். அதே போலவே பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும்.

898. பந்திக்கு முந்து, படைக்கு பிந்து

பொருள்: சாப்பிடுவதற்க்கு நம் கை (வலது கை) முந்தும். படைக்குச் செல்லும் சமயத்தில்(போர் புரியும் நேரம்) இடக்கையில் வில்லை ஏந்தி வலக்கையால் பின்நோக்கி இழுத்து அம்பை எய்வோம். எவ்வளவு தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அவ்வளவிற்கு அம்பு வேகமாகச் செல்லும். இதுவே பந்திக்கு முந்து,படைக்கு பிந்து என்று பழமொழியின் அர்த்தம்.

899. சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

பொருள்: பேறு பார்க்கும் மருத்துவ மகளிருக்கு (மருத்துவச்சி) கண்டிப்பாக கூலி கொடுக்க வேண்டும். பிள்ளை ஒருவேளை இறந்தே பிறந்தாலும் பேரு பார்த்ததற்கான கூலி கொடுத்தாக வேண்டும்.

900. கஞ்சி கண்ட இடம் கைலாசம் , சோறு கண்ட இடம் சொர்க்கம்.

பொருள்: உழைக்காமலே உண்பவர்களுக்கு தர்மமாக உணவு வழங்கப்படும் இடம் சொர்க்கமாக தெரியும்.

- Advertisement -

Proverbs in Tamil – Part 1

901. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்

பொருள்: அடி எனப்படும் இறைவனின் திருவடியில் சரண் புகுபவர்களுக்கு, அந்த இறைவன் உதவுவது போல அவனின் சொந்த அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்பதே இதன் உண்மையான பொருளாகும்.

902. அடாது செய்தவன் படாது படுவான்

பொருள்: பல அநியாய செயல்களை செய்பவன், ஒரு கட்டத்தில் தனது செயல்களுக்கான பலனை அனுபவிப்பான்.

903. அப்பன் அருமை செத்தால் தெரியும்

பொருள்: ஒரு குடும்பத்தில் தந்தை என்பவர் இறந்த பின்பு அக்குடும்பம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும். அதுபோல ஒரு விடயத்தை நாம் இழக்கும் வரை அதன் அருமையை நாம் அறிவதில்லை.

904. கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்

பொருள்: எவ்விடயத்திலும் சிறிய அளவிலான முயற்சி கூட செய்யாதவர் மிகப்பெரும் முயற்சியில் வெற்றியடைவேன் என்று கூறுவது சாத்தியப்படாத ஒன்று.

905. அடிநாக்கில் நஞ்சு நுனிநாக்கில் அமிர்தம்

பொருள்: குணத்தால் தீயவர்களாக இருப்பவர்கள் வெளிப்புறத்தில் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்வதை உணர்த்துகிறது.

906. அடுக்கிற அருமை உடைக்கிற நாய்க்கு தெரியுமா

பொருள்: ஒன்றை கடினப்பட்டு உருவாக்குகின்ற அருமை, அதை துச்சமாக நினைப்பவர்களுக்கு தெரியாது.

907. இலங்கையில் பிறந்தவனெல்லாம் ராவணனில்லை

பொருள்: ஒரு விடயத்தை பற்றி நன்கு அறியாமல் அது இப்படி தான் என்று முன்கூட்டியே ஒரு தீர்மானத்திற்கு வந்துவிடுவது தவறு.

908. குடிப்பதோ கூழ் கொப்பளிப்பதோ பன்னீர்

பொருள்: ஒரு சிலர் வறட்டு கௌரவத்திற்காக செய்யும் சில செய்கைகளை குறிக்கிறது.

909. அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் ஆயிரம் கதிர் அரிவாள்

பொருள்: ஒரு விடயத்தை பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் அதை தெரிந்தவர் போல் காட்டிக்கொள்பவர்களை குறிக்கிறது.

910. கெட்டவனுக்கு உற்றார் கிளையிலும் இல்லை

பொருள்: தீய குணம் மற்றும் நடத்தை கொண்டவனின் சொந்தம் என அவனது உறவுகள் கூட கூறிக்கொள்ள மாட்டார்கள்.

Proverbs in Tamil – Part 2
911. ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்

பொருள்: எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு

912. இருகினால் களி இளகினால் கூழ்

பொருள்: எந்த ஒரு விடயத்திலும் எவ்வகையிலாவது நமக்கு நன்மை உண்டு.

913. சங்கரா சங்கர என்றால் சாதம் வாயில் வந்து விழுமா?

பொருள்: ஒரு செயலுக்குரிய முயற்சியில்லாமல் வெறும் வாய்ப்பேச்சு பயன் தராது.

914. ஊசியின் கண்ணிலே ஆகாயத்தை பார்த்தது போல

பொருள்: வறட்டு பிடிவாதம் கொண்டவர்கள் தாங்கள் அறிந்ததே உண்மை தாங்கள் செய்வதே சரி என எண்ணுவர்.

915. உண்டவன் பாய் தேடுவான் உண்ணாதவன் இலை தேடுவான்

பொருள்: ஒருவனுக்கு தன் காரியம் வெற்றி பெற்று விட்டால் அதற்கு அடுத்தகட்ட காரியங்களை மேற்கொள்வான். அந்த காரியம் நடக்காத ஒருவன் அதற்காக தொடர்ந்து முயற்சிப்பான்.

916. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

பொருள்: ஒரு விடயம் நடப்பதற்கு முன்பே அதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே நமக்கு தெரியும்.

- Advertisement -

917. உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது

பொருள்: தன்னிடம் இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டும் முயற்சி வீண்.

918. ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க

பொருள்: நாம் என்ன தான் கடினமாக முயன்றாலும், நமக்கு எது கிடைக்க வேண்டும் என்று இருப்பதோ அதுவே கிடைக்கும்.

919. பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

பொருள்: பணத்தின் சக்தியின் முன் மனிதனின் உயர்வான குணங்களுக்கு மதிப்பிருக்காது.

920. தேரை இழுத்து தெருவில் விட்டது போல

பொருள்: மிக உயர்வானவற்றை தரம் தாழ்த்தி விட கூடாது.

Proverbs in Tamil – Part 3

921. இட்டு கெட்டாருமில்லை ஈயாமல் வாழ்ந்தாருமில்லை

பொருள்: பிறருக்கு தான தர்மங்களை வழங்கி அழிந்தவருமில்லை, அவற்றை வழங்காமல் வாழ்ந்தவருமில்லை.

922. கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான்

பொருள்: தனது திறமையின்மையை மறைக்க பிறவற்றை சிலர் குறை கூறுவர்.

923. உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது

பொருள்: உறவினர்கள் வீட்டிற்கு செல்லாமல் இருந்தால் உறவு நீடிக்காது. கொடுத்த கடனை கேட்காமல் விட்டுவிட்டால் அதை திரும்ப பெற முடியாது.

924. ஊதாரிக்கு பொன்னும் துரும்பு

பொருள்: சேமிக்காமல் செலவு செய்பவர்களுக்கு எந்த ஒன்றின் மதிப்பையும் அறிய மாட்டார்கள்.

925. ஏணி கழிக்கு கோணல் கொம்பு வெட்டலாமா

பொருள்: ஒரு விடயத்தை செய்வதற்கு தெளிவான திட்டமிடல் அவசியம்.

926. செக்கை வளைய வரும் எருதுகள் போல

பொருள்: எந்த ஒரு உத்வேகமும் இல்லாமல் ஒரே மாதிரியான செயல்களை செய்பவர்களை குறிக்கிறது.

927. சேர இருந்தால் செடியும் பகை

பொருள்: யாருடனும் அதிக நெருக்கத்துடன் இருந்தால் அங்கே பகை உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

928. தழைத்த மரத்திற்கு நிழல் உண்டு

பொருள்: பக்குவம் பெற்ற ஒருவரால் எல்லோருக்கும் நன்மை ஏற்படும்.

929. துணை போனாலும் பிணை போகாதே

பொருள்: ஒருவர் யாருக்கும், எதற்கும் பிணையாக இல்லாமலிருப்பது நன்று.

930. நெடும்பகலுக்கும் உண்டு அஸ்தமனம்

பொருள்: எல்லாவற்றிற்கும் ஒரு முடிவுண்டு என்பதை குறிக்கிறது.

Proverbs in Tamil – Part 4

931. கரும்பும் எள்ளும் கசக்கினால் தான் பலன்.

பொருள்: எந்த ஒன்றையையும் அதை பயன்படுத்துவதால் மட்டுமே நன்மை அளிக்கும்.

932. கர்மத்தினால் வந்தது தர்மத்தினால் தொலைய வேண்டும்.

பொருள்: நாம் செய்த தீவினையை ஒரு நற்செயல் புரிவதன் மூலம் ஈடு செய்ய வேண்டும்.

933. கழுதைக்கு வாக்கப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?

பொருள்: ஒரு விடயத்தால் பயனில்லை எனத் தெரிந்த பின்பும் அதில் ஈடுபட்ட பிறகு பின்விளைவுகளுக்கு
வருந்த கூடாது.

934. நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.

பொருள்: ஒருவர் ஏதாவது ஒரு வகையில் மேன்மை பெற்றால், மீண்டும் பழைய நிலைக்கு செல்ல விரும்ப மாட்டார்கள்.

935. மிதித்தாரை கடியாத பாம்புண்டோ

பொருள்: ஒரு செயலுக்கான எதிர்வினையை அனுபவிக்காதவர் என்று எவரும் இல்லை.

ஏராளமான தமிழ் பழமொழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ள தமிழ் பழமொழிகள் அனைத்திற்கும் பொருள் கொடுக்கப்பட்டுள்ளன. நிச்சயம் இந்த தமிழ் பழமொழிகள் அனைத்தும் பலருக்கும் உதவும் என நம்புகிறோம்.

936. சொல் அம்போ வில் அம்போ?

பொருள்: வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை விட மிக வேகமாக சொல்லும் வார்த்தை தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே வார்த்தைகளை மிக கவனமாக கையாள வேண்டும்.

தமிழ் விடுகதைகள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

English Overview:
Here we have Tamil proverbs or proverbs in Tamil. Proverbs for kids in Tamil, Proverbs for children in Tamil, Proverbs for students in Tamil, Proverbs for friendship in Tamil, Proverbs for success in Tamil, Proverbs for education in Tamil, Proverbs for school students in Tamil and many other different kinds of Proverbs are here with meaning.

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password
   lida viagra fiyat cialis sipariş escort bayan