தங்கம் வாங்க ஆள் இல்லை ஆனால் எப்படி விலை ஏறுது?

தங்கம் வாங்க ஆள் இல்லை ஆனால் எப்படி விலை ஏறுது?

கேள்வி

கேள்வி

இந்த கொரோனா காலத்தில் யார் தங்கத்தை வாங்குகிறார்கள்..? எப்படி விலை அதிகரிக்கிறது? விலை அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன..? என சில கேள்விகள், நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு இருக்கும். அதற்கான விடையைத் தான் இங்கு உதாரணத்துடன் பார்க்க இருக்கிறோம்.

காரணங்கள்

காரணங்கள்

தங்கம் விலை ஏற, பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான 2 காரணங்களைத் தான் இங்கு விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.

1. உலக பொருளாதார காரணிகள் + சர்வதேச தங்கம் விலை

2. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு.

உலக பொருளாதாரம் + சர்வதேச தங்கம் விலை 1

உலக பொருளாதாரம் + சர்வதேச தங்கம் விலை 1

உலக பொருளாதாரத்தில் எப்போது எல்லாம் ஒரு நிச்சயமற்ற நிலை வருகிறதோ, அப்போது எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு தங்கம் விலை ஏறத் தொடங்கிவிடும். அதற்கு கொரோனாவே மிகச் சிறந்த உதாரணம். ஜனவரி 01, 2020 அன்று ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை சுமாராக 1,517 டாலருக்கு வர்த்தகமானது. ஆனால் இன்று கொரோனா பயத்தால் சுமாராக 1,735 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

உலக பொருளாதாரம் + சர்வதேச தங்கம் விலை 2

உலக பொருளாதாரம் + சர்வதேச தங்கம் விலை 2

இப்படி தங்கம் விலை ஏறுவதற்கு இன்னொரு காரணம் அளவுக்கு அதிகமான முதலீடு. பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, முதலீட்டாளர்கள், தங்கள் பணத்தை தங்கத்தில் கொண்டு வந்து கொட்டுவார்கள். எந்த பொருளுக்கும் டிமாண்ட் அதிகரித்தால் விலை அதிகரிக்கத் தானே செய்யும்..? அது தான் சர்வதேச தங்கத்திலும் நடக்கிறது. விலை அதிகரிக்கிறது.

சர்வதேச தங்கம் விலை உதாரணம் 1

சர்வதேச தங்கம் விலை உதாரணம் 1

சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரிப்பதால் சென்னையில் ஆபரண தங்கம் விலை எப்படி அதிகரிக்கிறது..? இதோ விடை: 100 கிராம் தங்கத்தின் விலை 1000 டாலராக இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அப்போது ஒரு டாலர் = 70 ரூபாய் என வைத்துக் கொள்வோம். ஆக 70,000 ரூபாயில் நமக்கு 100 கிராம் தங்கம் கிடைத்துவிடும்.

சர்வதேச தங்கம் விலை உதாரணம் 2

சர்வதேச தங்கம் விலை உதாரணம் 2

இதுவே, 100 கிராம் தங்கத்தின் விலை 1200 டாலராக அதிகரித்துவிட்டது என வைத்துக் கொள்வோம். இப்போது அமெரிக்க டாலர் மதிப்பு அதே 70 ரூபாய் என வைத்துக் கொள்வோம். ஆக 84,000 ரூபாய் கொடுத்தால் தான் 100 கிராம் தங்கம் நமக்குக் கிடைக்கும். இப்படித் தான் சர்வதேச தங்கம் விலையால், சென்னையில் விற்கும் ஆபரண தங்கம் விலை அதிகரிக்கிறது.

அமெரிக்க டாலர் பிரச்சனை

அமெரிக்க டாலர் பிரச்சனை

மேலே சொன்ன உதாரணத்தில், சர்வதேச தங்கம் விலை எப்படி சென்னை தங்கம் விலையை பாதிக்கிறது எனப் பார்த்தோம். இப்போது அமெரிக்க டாலர் எப்படி நம் சென்னை தங்கம் விலையை பாதிக்கிறது எனப் பார்ப்போம்.

அமெரிக்க டாலர் விளக்கம்

அமெரிக்க டாலர் விளக்கம்

பொதுவாக, அமெரிக்க டாலரில் தான், இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. இப்படி தொடர்ந்து குறைந்தால், அதிக ரூபாய் கொடுத்து டாலர் வாங்க வேண்டி இருக்கும். கடந்த ஜனவரி 01, 2020 அன்று ஒரு டாலர் = 71.22 ரூபாயாக இருந்தது. இன்று ஒரு டாலர் = 75.66 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.

அமெரிக்க டாலர் - உதாரணம் 1

அமெரிக்க டாலர் – உதாரணம் 1

மேலே சொன்ன உதாரணத்தை மீண்டும் எடுத்துக் கொள்வோம். கடந்த ஜனவரி 01, 2020 அன்று, ஒரு டாலர் = 71.22 ரூபாய். 100 கிராம் தங்கம் விலை 1000 டாலர் கொடுத்து வாங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். ஆக 71,220 ரூபாய் (71.22*1000) கொடுத்து 100 கிராம் தங்கத்தை வாங்குவோம். ஒரு கிராம் தங்கத்தின் விலை 712.2 ரூபாய்க்கு வாங்கி இருப்போம்.

அமெரிக்க டாலர் உதாரணம் 2

அமெரிக்க டாலர் உதாரணம் 2

இன்று, 19-05-2020, ஒரு டாலர் = 75.66 ரூபாய். 100 கிராம் தங்கம் விலை, அதே 1000 டாலர் கொடுத்து வாங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். ஆக 75,660 ரூபாய் (75.66*1000) கொடுத்து 100 கிராம் தங்கத்தை வாங்குவோம். ஒரு கிராம் தங்கத்தின் விலை 756.6 ரூபாய்க்கு வாங்கி இருப்போம். ஆக இந்த டாலர் மதிப்பு உயர்வால் மட்டும், கிராமுக்கு 44.4 ரூபாய் விலை அதிகரித்து இருக்கிறது எனலாம்.

காம்போ பிரச்சனை

காம்போ பிரச்சனை

இந்த கொரோனா காலத்தில், மக்கள் தங்கத்தை வாங்காத போதும், ஒரு பக்கம் சர்வதே தங்கம் விலை அதிகரித்துக் கொண்டிருப்பது & அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவது ஆகிய முக்கிய காரணங்களால் தான், இந்தியாவில் தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

உதாரணம்

உதாரணம்

1. கொரோனாவுக்கு முன் ஒரு அவுன்ஸ்

(சுமாராக 28 கிராம்) தங்கத்தின் சர்வதேச விலை 1,517 டாலர். ஒரு டாலர் = 71.22 ரூபாய். ஆக 1,08,040 ரூபாய்க்கு ஒரு அவுன்ஸ்

(சுமாராக 28 கிராம்) தங்கம் கிடைத்தது.

2. கொரோனாவுக்குப் பின் ஒரு அவுன்ஸ்

(சுமாராக 28 கிராம்) தங்கத்தின் சர்வதேச விலை 1,735 டாலர். ஒரு டாலர் = 75.66 ரூபாய். ஆக 1,31,270 ரூபாய்க்கு ஒரு அவுன்ஸ்

(சுமாராக 28 கிராம்) தங்கம் கிடைக்கிறது. 23,230 ரூபாய் தங்கத்தின் விலை, சர்வதேச தங்கம் விலை அதிகரிப்பாலும், டாலர் மதிப்பு உயர்வாலும் அதிகரித்து இருக்கிறது.

தங்கம் வாங்க ஆள் இல்லை ஆனால் எப்படி விலை ஏறுது?

VIew Source Page

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart