டெஸ்லா-க்கு பிட்காயின்.. SpaceX-க்கு டோஜ்காயின்.. எலான் மஸ்க் அதிரடி முடிவு..!

டெஸ்லா-க்கு பிட்காயின்.. SpaceX-க்கு டோஜ்காயின்.. எலான் மஸ்க் அதிரடி முடிவு..!

எலான் மஸ்க் - கிரிப்டோகரன்சி

எலான் மஸ்க் – கிரிப்டோகரன்சி

எலான் மஸ்க் சமீப காலமாகக் கிரிப்டோகரன்சியில் அதிகளவில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு டெஸ்லா நிறுவனத்தின் வாயிலாகச் சுமார் 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்து பிட்காயின் வாங்கினார்.

Tesla பிட்காயின் பேமெண்ட்

Tesla பிட்காயின் பேமெண்ட்

இதன் பின்பு எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம் பிட்காயினைப் பேமெண்ட் ஆகப் பெற அனுமதி அளித்தது. இதன் மூலம் இனி யார் வேண்டுமானாலும் பிட்காயினைச் செலுத்தி டெஸ்லா காரை வாங்க முடியும்.

SpaceX டோஜ்காயின் பேமெண்ட்

SpaceX டோஜ்காயின் பேமெண்ட்

இந்நிலையில் தற்போது மீம் அடிப்படையாகக் கொண்டு இயக்கும் டோஜ்காயின் கிரிப்டோகரன்சிக்கு எலான் மஸ்க் அதிகளவிலான ஆதரவு அளித்து வரும் நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் டோஜ்காயினைப் பேமெண்ட் ஆக ஏற்க முடிவு செய்துள்ளது.

பிட்காயின் மற்றும் டோஜ்காயின்

பிட்காயின் மற்றும் டோஜ்காயின்

இதன் மூலம் பிட்காயின் மற்றும் டோஜ்காயின் அதிகாரப்பூர்வ நாணயமாக மாற அதிகளவிலான வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே நிதியியல் சந்தையில் இருந்து பிட்காயின்-ஐ தவிர்க்க முடியாத நாணயமாக மாற்றியுள்ள நிலையில் தற்போது டோஜ்காயினும் இதே நிலையை விரைவில் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DOGE 1 மிஷன்

DOGE 1 மிஷன்

எலான் மஸ்க் தலைமையிலான விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் DOGE 1 மிஷன் டூ தி மூன் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு ஜியோமெட்ரிக் எனர்ஜி கார்ப் என்னும் நிறுவனம் டோஜ்காயின் வாயிலாக முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

நாசா திட்டம்

நாசா திட்டம்

விண்வெளி பயணத்தில் புரட்சி செய்து வரும் எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசா-வின் நிலவுக்குப் பயணம் செய்யும் திட்டத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது கிரிப்டோகரன்சியான டோஜ்காயினை நிலவில் வைக்கத் திட்டமிட்டு உள்ளார்.

எலான் மஸ்க் டிவீட்

எலான் மஸ்க் டிவீட்

இதுகுறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள டிவீட்-ல் அடுத்த வருடம் நிலவுக்கு டோஜ்-1 அனுப்ப உள்ளோம்.

-இந்தத் திட்டத்திற்கு முழுவதும் டோஜ்காயின் மூலம் பேமெண்ட் செய்யப்படும்

– விண்வெளிக்குச் செல்லும் முதல் கிரிப்டோ

-விண்வெளிக்குச் செல்லும் முதல் மீம் என்று டிவீட் செய்துள்ளார்.

டெஸ்லா-க்கு பிட்காயின்.. SpaceX-க்கு டோஜ்காயின்.. எலான் மஸ்க் அதிரடி முடிவு..! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password