ஜியோ ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு மாறுவது எப்படி? ஈசி டிப்ஸ்.. உடனே இதை செய்யுங்கள்..

ஜியோ ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு மாறுவது எப்படி? ஈசி டிப்ஸ்.. உடனே இதை செய்யுங்கள்..

அதிக நன்மைகளை அள்ளி வழங்கும் ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்

ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் பயனர்களுக்கு 500 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் நன்மை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி சிறந்த பாதுகாப்புக்கான இணைப்பு, பிரீமியம் போஸ்ட்பெய்ட் அனுபவம், குடும்ப திட்ட நன்மைகளுடன் கூடுதல் ஜியோ சிம் கார்டுகள், டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா, நெட்ஃபிக்ஸ் சந்தா, அமேசான் பிரைம் வீடியோஸ் சந்தா என்று ஏராளமான நன்மைகளை வழங்கிவருகிறது. இத்துடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா போன்ற பல தனிப்பட்ட ஜியோ சேவையையும் நிறுவனம் தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது.

ஜியோ ப்ரீபெய்டில் இருந்து ஜியோ போஸ்ட்பெய்டுக்கு மாற ஆசை இருக்கிறதா?

ஜியோ ப்ரீபெய்டில் இருந்து ஜியோ போஸ்ட்பெய்டுக்கு மாற ஆசை இருக்கிறதா?

ஜியோ ப்ரீபெய்டில் இருந்து ஜியோ போஸ்ட்பெய்டுக்கு மாற ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாய் அமையும். நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஜியோ ப்ரீபெய்ட் எண்ணை எப்படி ஜியோ போஸ்ட்பெய்டு எண்ணிற்கு மாற்றலாம் என்பதை படிப்படியான வழிகாட்டுதல்களுடன் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். சரி, இப்போது எப்படி உங்களின் ப்ரீபெய்ட் எண்ணை போஸ்ட்பெய்டுக்கு மாற்றலாம் என்று பார்க்கலாம்.

ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையே இல்ல: இனி இந்த 18 சேவைகளும் ஆன்லைன் மூலம்தான்!ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையே இல்ல: இனி இந்த 18 சேவைகளும் ஆன்லைன் மூலம்தான்!

ஜியோ ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு மாறுவது எப்படி?

ஜியோ ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு மாறுவது எப்படி?

நீங்கள் போஸ்ட்பெய்டுக்கு மாறுவதற்கான செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து அவற்றின் போஸ்ட்பெய்ட் போர்ட்ஃபோலியோவில் கிடைக்கும் அனைத்து போஸ்ட்பெய்டு திட்டங்களையும் ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம். ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்கள் மாதத்திற்கு ரூ.199 முதல் துவக்கி ரூ. 1,499 வரை கிடைக்கிறது. ப்ரீபெய்ட் பயனர்கள் முன்பே ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும், ​​போஸ்ட்பெய்ட் பயனர்கள் ஒவ்வொரு மாதமும் முடிவடைந்த பிறகு பில் கட்டணத்தைச் செலுத்தினால் போதுமானது.

Jio PostPaid Plus க்கு மாற இதை மட்டும் செய்யுங்கள் போதும்

Jio PostPaid Plus க்கு மாற இதை மட்டும் செய்யுங்கள் போதும்

 • Jio PostPaid Plus வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.
 • உங்கள் பெயர் மற்றும் பதிவுசெய்யப்பட்ட ஜியோ ப்ரீபெய்ட் எண்ணை உள்ளிடவும்.
 • Generate OTP என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
 • உங்கள் தொலைப்பேசியில் உங்களுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
 • உங்கள் புதிய ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் சிம் விநியோக முகவரியை உள்ளிடவும்.

திருட வந்த பெண்களின் வீட்டில் ஆபாச படங்கள் டவுன்லோட்.. பெண்கள் பயன்படுத்திய 'அந்த' பொருள் அபேஸ்..திருட வந்த பெண்களின் வீட்டில் ஆபாச படங்கள் டவுன்லோட்.. பெண்கள் பயன்படுத்திய ‘அந்த’ பொருள் அபேஸ்..

3-4 நாட்களில் புது சிம் கார்டு

3-4 நாட்களில் புது சிம் கார்டு

 • Submit New Jio SIM Request ஐக் கிளிக் செய்யுங்கள்.
 • அடுத்தபடியாக, ஜியோ வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி 3-4 நாட்களில் உங்களை அணுகுவர்.
 • அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரி சான்று (POA) போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பதன் மூலம் உங்கள் வீட்டிலேயே உங்களுக்கான KYC விசாரணையை நடத்தி முடிப்பர்.

24 மணி நேரத்தில் சிம் ஆக்டிவேஷன்

24 மணி நேரத்தில் சிம் ஆக்டிவேஷன்

 • ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை அடங்கும் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
 • நிர்வாகி உங்கள் புதிய ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் சிம்மை உங்களிடம் வழங்குவர்.
 • இது செயல்படுத்தப்பட சுமார் 24 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.
 • ஜியோ பாதுகாப்பு வைப்புத்தொகையாக ரூ. 250 மற்றும் ஜியோ பிரேம் சந்தாவுக்காக ரூ. 99 உங்களிடம் வசூலிக்கப்படும்.

சீனாவில் இரவு நேரத்தில் நுழைந்த UFO போன்ற உருவங்கள்.. மழுப்பும் அரசாங்கம்.. யார் சொல்வதை நம்புவது?சீனாவில் இரவு நேரத்தில் நுழைந்த UFO போன்ற உருவங்கள்.. மழுப்பும் அரசாங்கம்.. யார் சொல்வதை நம்புவது?

இப்படியும் நீங்கள் போஸ்ட்பெய்டுக்கு மாறலாம்

இப்படியும் நீங்கள் போஸ்ட்பெய்டுக்கு மாறலாம்

பயனர்கள் இதற்கு மாற்றாக அருகிலுள்ள ஜியோ ஸ்டோர் சென்று இடம்பெயர்வு படிவத்தை நிரப்பி புதிய போஸ்ட்பெய்ட் சிம் கார்டை பெற்றுக்கொள்ளலாம். சிம் கார்டை பெற KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அருகிலுள்ள ஜியோ ஸ்டோர்க்கு உடனே செல்லுங்கள். இந்த முறைகளைப் பின்பற்றி நீங்கள் உங்கள் ப்ரீபெய்ட் எண்ணை போஸ்ட்பெய்டுக்கு எளிதாக மாற்றலாம்.

ஜியோ ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு மாறுவது எப்படி? ஈசி டிப்ஸ்.. உடனே இதை செய்யுங்கள்.. Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart