- 1

ஜியோ போனில் யூடியூப் வீடியோக்களை எப்படி டவுன்லோட் செய்வது? ஈசி டிப்ஸ்..

210 0

ஜியோ போனில் யூடியூப் வீடியோக்களை எப்படி டவுன்லோட் செய்வது? ஈசி டிப்ஸ்..

ஜியோ போனில் யூடியூப்

ஜியோ போனில் யூடியூப்

Android அல்லது iOS சாதனங்களைப் போலன்றி ஜியோ போன் பயனர்கள் தங்கள் போனில் உள்ள கர்சரை திரையில் கைமுறையாக நகர்த்த வேண்டும். ஜியோ போனில் யூடியூப் வீடியோக்களைப் டவுன்லோட் செய்வது எப்படி என்பது இன்னும் சிலருக்கு தெரியாத புதிராக இருக்கிறது. உண்மையில் சொல்ல போனால் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்வது என்பது நீங்கள் ஒருவருக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுபவித்துப் போன்று மிகவும் எளிமையான விஷயமாகும். சரி இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Jio போனில் YouTube ஆப்ஸை எப்படி இன்ஸ்டால் செய்வது?

Jio போனில் YouTube ஆப்ஸை எப்படி இன்ஸ்டால் செய்வது?

வீடியோக்களைப் பதிவிறக்குவதற்கு முன், பயனர்கள் தங்கள் ஜியோ போனில் YouTube பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். இதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். உங்களுடைய ஜியோ போனில் யூடியூப் இல்லை என்றால், ஜியோஸ்டோர் சென்று யூடியூப் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இதை செய்ய ஜியோஸ்டோரில் யூடியூப் ஆப்ஸை பட்டியலில் இருந்து தேர்வு செய்து, இன்ஸ்டால் விருப்பத்தை கிளிக் செய்து, உங்கள் ஜியோ போனில் யூடியூப் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.

அப்போலோ 20 ரகசியம் அம்பலம் : நிலவில் கண்டறியப்பட்ட ஏலியன் பெண்.!!அப்போலோ 20 ரகசியம் அம்பலம் : நிலவில் கண்டறியப்பட்ட ஏலியன் பெண்.!!

Jio போனில் YouTube வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?

Jio போனில் YouTube வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?

YouTube பயன்பாட்டைத் திறந்து, நீங்கள் பதிவிறக்க விரும்பும் வீடியோவைத் தேடுங்கள். வீடியோ திறந்ததும், தேடலில் கிளிக் செய்யும் இடது பொத்தானை அழுத்தவும். இடது பொத்தானை அழுத்தினால் வீடியோவின் URL தேர்ந்தெடுக்கப்படும். YouTube வீடியோவைப் பதிவிறக்குவதற்கு, உங்கள் ஜியோ போனில் இருந்து தேர்வு செய்யப்பட்ட வீடியோவின் URL இல் சிறிய மாற்றத்தை மட்டும் மாற்றி அமைக்க வேண்டும். YouTube வீடியோவின் URL க்கு முன் ‘ss’ என்ற வார்த்தைகளை டைப் செய்து சேர்த்துக்கொள்ளுங்கள்.

தரத்தை தேர்வு செய்து டவுன்லோட்

தரத்தை தேர்வு செய்து டவுன்லோட்

வீடியோவின் URL ஐ மாற்றியதும், நீங்கள் ஒரு புதிய வலைத்தளத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள், அது வீடியோவைப் பதிவிறக்குவதற்கான விருப்பத்தை உங்களுக்கு வழங்கும். புதிய இணையதள பக்கத்தில் ஸ்க்ரோல் செய்து, டவுன்லோட் பட்டனைத் தேடுங்கள். வீடியோவின் தரத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள உங்களுக்கு ஆப்ஷன்கள் வழங்கப்படும். தரத்தை தேர்வு செய்து டவுன்லோட் பட்டனைக் கிளிக் செய்யுங்கள். அடுத்த சில நொடிகளில் உங்களுடைய யூடியூப் வீடியோ டவுன்லோட் செய்ய துவங்கிவிடும்.

ATM பின் நம்பர் மறந்துவிட்டதா? டென்ஷன் ஆகாதீங்க, ஈசியா புது PIN நம்பர் உருவாக்கலாம்..எப்படி தெரியுமா?ATM பின் நம்பர் மறந்துவிட்டதா? டென்ஷன் ஆகாதீங்க, ஈசியா புது PIN நம்பர் உருவாக்கலாம்..எப்படி தெரியுமா?

இது மட்டும் பாதுகாப்பு இல்லை

இது மட்டும் பாதுகாப்பு இல்லை

ஜியோ போன் பயனர்கள் தங்கள் போனில் இருந்து யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கும் பல வலைத்தளங்கள் உள்ளது. உதாரணமாக, நீங்கள் விரும்பும் வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்ய YouTube வீடியோ டவுன்லோட்டரை முயற்சி செய்யலாம். ஆனால், ஜியோ போனில் யூடியூப் வீடியோக்களைப் பதிவிறக்குவதற்கான எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளம் அல்லது பயன்பாட்டை நாம் எப்போதும் பயன்படுத்தாமல் இருப்பது நமது பாதுகாப்பிற்கு நல்லது.

ஜியோ போனில் யூடியூப் வீடியோக்களை எப்படி டவுன்லோட் செய்வது? ஈசி டிப்ஸ்.. Source link

Related Post

- 10

உங்களின் பேஸ்புக் ப்ரொபைலை எப்படி யாருக்கும் தெரியாதபடி லாக் செய்வது? நறுக்கு டிப்ஸ்..

Posted by - பிப்ரவரி 7, 2021 0
உங்களின் பேஸ்புக் ப்ரொபைலை எப்படி யாருக்கும் தெரியாதபடி லாக் செய்வது? நறுக்கு டிப்ஸ்.. லாக் செய்யப்பட்ட ப்ரொபைல் லாக் செய்யப்பட்ட ப்ரொபைல் டைம்லைன், ப்ரொபைல் படம் மற்றும்…
- 18

ஜூம் மீட்டிங்கில் சேருவது எப்படி? பிரௌசர் மற்றும் ஆப்ஸ் மூலம் எப்படி ஜூம் மீட்டிங் உருவாக்குவது?

Posted by - பிப்ரவரி 26, 2021 0
ஜூம் மீட்டிங்கில் சேருவது எப்படி? பிரௌசர் மற்றும் ஆப்ஸ் மூலம் எப்படி ஜூம் மீட்டிங் உருவாக்குவது? ஜூம் பயன்பாட்டைப் பயன்படுத்த தெரியவில்லையா? இதுவரை நீங்கள் ஜூம் பயன்பாட்டைப்…
- 30

ஏர்டெல் VoWiFi சேவையை ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனத்தில் ஆக்டிவேட் செய்வது எப்படி?

Posted by - மார்ச் 13, 2021 0
ஏர்டெல் VoWiFi சேவையை ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனத்தில் ஆக்டிவேட் செய்வது எப்படி? வைஃபை காலிங் அழைப்பு என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது? புதிய வைஃபை…
- 38

Google Pay ஆப்ஸில் இருக்கும் UPI PIN ஐடியை எப்படி சில நொடியில் மாற்றுவது?

Posted by - ஜனவரி 19, 2021 0
Google Pay ஆப்ஸில் இருக்கும் UPI PIN ஐடியை எப்படி சில நொடியில் மாற்றுவது? Google Pay பயன்பாட்டை இந்தியாவில் பல்லாயிரக் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.…

கணினித் தொழில்நுட்பத்தின் வரலாற்று முகம் விலகியது: பில் கேட்ஸ் கடந்து வந்த பாதை

Posted by - ஏப்ரல் 14, 2020 0
  கணினித் தொழில்நுட்பத்தின் வரலாற்று முகம் விலகியது: பில் கேட்ஸ் கடந்து வந்த பாதை சான் பிரான்சிஸ்கோ கணினித் தொழில்நுட்பத்தை சர்வதேச அளவில் ஜனநாயகப்படுத்தியவர் என்று அறியப்படும்…

உங்கள் கருத்தை இடுக...