ஜியோவில் எப்படி புதிய காலர் டியூனை அமைப்பது? அல்லது எப்படி பழைய JioTunes-ஐ மாற்றுவது?

நீங்கள் எப்போதாவது ‘இதை’ யோசித்திருக்கிறீர்களா?
ஒவ்வொரு முறையும் நீங்கள் யாரையாவது அழைக்கும் போது அதே சலிப்பான அழைப்பு ஒலியைக் கேட்பது எவ்வளவு சலிப்பை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? குறிப்பாக யாராவது பதிலளிக்க அதிக நேரம் எடுக்கும் போது? அழைப்பு ட்யூன்களை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்ற, ஜியோ அதன் அதிகாரப்பூர்வ ஜியோ ட்யூன்ஸ் பயன்பாட்டிலிருந்து ஜியோ பயனர்களுக்கு ஹலோ ட்யூன் சேவைகளை வழங்குகிறது.

எந்தவொரு பாடலாக இருந்தாலும் காலர் டியூன் செட் செய்யலாம்
ஜியோ பயனர்கள், அவர்களுக்குப் பிடித்த எந்தவொரு பாடலாக இருந்தாலும், அதை உங்களின் ஜியோ எண்ணிற்கு நீங்கள் அமைத்துக்கொள்ளலாம். வெறும் சினிமா பாடல்கள் மட்டுமின்றி, இசைக் கருவிகளின் பாடல், மத சார்பற்ற பாடல்கள், சர்வதேச தடங்களில் கிடைக்கும் பாடல்கள் என்று பயனரின் மனநிலைக்கு ஏற்ப நீங்கள் உங்கள் காலர் டியூனை மாற்றி அமைக்கலாம். இதை எளிமையாகச் செய்து முடிக்க ஜியோ தந்து பயனர்களுக்கு நான்கு வெவ்வேறு வழிகளை வழங்குகிறது, இதன் மூலம் அவர்கள் அந்தந்த ஜியோ எண்களில் காலர் டியூனை தேர்ந்தெடுக்கலாம் அல்லது மாற்றலாம்.
தினசரி 2ஜிபி டேட்டா வேணுமா: ஜியோ, ஏர்டெல், விஐ பயனர்களுக்கான சிறந்த திட்டங்கள்!

ஆன்லைன் மூலம் JioTunes அமைக்கும் முறை
நீங்கள் வெறுமனே பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோருக்குச் சென்று மைஜியோ பயன்பாட்டை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின்னர் MyJio பயன்பாட்டைத் திறந்து, ‘useful links’ பிரிவில் JioTunes விருப்பத்திற்குச் செல்லவும். நீங்கள் தேர்வுசெய்ய விரும்பும் பாடலை சர்ச் செய்யுங்கள், ஒருமுறை அதற்கான முன்னோட்டத்தைக் கேட்டு, ‘Set as JioTune’ என்பதை கிளிக் செய்யுங்கள். செயல்படுத்தலை உறுதிப்படுத்த உறுதிப்படுத்தல் மெசேஜ் டிஸ்பிளேவில் காண்பிக்கப்படும் அல்லது எஸ்எம்எஸ் மூலம் தகவல் கிடைக்கும்.

JioSaavn மூலம் JioTunes அமைக்கும் முறை
அதேபோல், நீங்கள் உங்களின் JioSaavn பயன்பாட்டின் மூலமும் ஜியோ காலர் டியூனை ஆக்டிவேட் செய்யலாம். இதைச் செய்ய நீங்கள் JioSaavn ஆப்ஸ் ஓபன் செய்ய வேண்டும். சமீபத்திய வெளியீட்டைப் பார்க்கலாம் அல்லது உங்கள் காலர் டியூனாக அமைக்க விரும்பும் பாடலை சர்ச் செய்யலாம். சரியான பாடலைக் கண்டறிந்ததும் அதைத் தேர்ந்தெடுக்கவும். முன்னோட்டத்தைக் கேட்டு, ‘Set as JioTune’ என்பதைக் கிளிக் செய்து உங்களின் காலர் டியூனாக செட் செய்துகொள்ளலாம். இதற்கான உறுதிப்படுத்தல் உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.
BSNL இலவசம்: ரூ.1499 மதிப்புள்ள டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் கிடைக்கும் திட்டங்கள் இது தான்..

ஆஃப்லைன் மூலம் JioTunes அமைக்கும் முறை
JioTunes ஆஃப்லைனில் அமைக்க, மெசேஜ்ஐஸ் பயன்பாட்டிற்குச் சென்று 56789 என்ற எண்ணிற்கு JT என்று டைப் செய்து அனுப்பவும். உடனே உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வகைகளுடன் ஒரு புதிய மெசேஜ்ஜை நீங்கள் பெறுவீர்கள். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வகை மற்றும் பாடலைத் தேர்ந்தெடுக்கவும். பாடலை உறுதிப்படுத்த மற்றொரு எஸ்எம்எஸ் பெறுவீர்கள். உங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்த 30 நிமிடங்களுக்குள் ‘Y’ என்று டைப் செய்து ரிப்ளை அனுப்பி, உங்கள் சம்மதத்தைக் கொடுங்கள். உடனடியாக, உங்களுக்கு ஒரு ஆக்டிவேஷன் SMS கிடைக்கும்.

மற்றவரின் JioTunes -ஐ எப்படி உங்கள் JioTunes ஆக்குவது?
நீங்கள் ஏற்கனவே வேறு சில ஜியோ பயனரின் காலர் டியூனை உங்கள் ஜியோ டியூனாக செட் செய்ய விரும்பினால், கீழே குறிப்பிட்டுள்ள முறையைப் பின்பற்றி அவர்களின் காலர் டியூனை சில நொடியில் உங்களின் காலர் டியூனாக மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் டயல் செய்த நபரின் அழைப்பு பதிலளிப்பதற்கு முன்பு * என்ற குறியீட்டை உங்கள் போனில் அழுத்தவும். உங்கள் சம்மதத்தைக் கேட்டு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். அதற்கு 30 நிமிடங்களுக்குள் ‘Y’ என்று டைப் செய்து எஸ்எம்எஸ் மூலம் பதிலளிக்கவும், உங்கள் ஜியோ ட்யூன்ஸ் அந்த நேரத்தில் செயல்படுத்தப்படும்.
ஜியோவில் எப்படி புதிய காலர் டியூனை அமைப்பது? அல்லது எப்படி பழைய JioTunes-ஐ மாற்றுவது? Source link