செய்யாறு ஆறு

செய்யாறு ஆறு

செய்யாறு ஆறு (Cheyyar) தமிழ் நாட்டின்‌‌‌‌‌‌‌ திருவண்ணாமலை மாவட்டத்தில் பாயும் ஒரு பருவ கால ஆறு ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலையில் உருவாகும் இந்த ஆறு பாலாற்றின் துணை ஆறு ஆகும்.

ஜவ்வாது மலைத்தொடரின் நசமலையில் தோன்றி மேற்குத் தெற்காகப் பாய்ந்து பின்பு செங்கம் அருகில் வடகிழக்காகத் திரும்பி திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் பாய்கிறது. ஜவ்வாது மலையிலிருந்து கிழக்காகப் பாயும் பீம ஆறு (பீமன் அருவியிலிருந்து உருவாவது), மிருகண்ட நதி (மிருகண்ட அணையிலிருந்து வருவது) ஆகிய துணை ஆறுகள் போளூருக்கு அருகிலுள்ள சோழவரம் எனும் ஊரில் செய்யாறு உடன் இணைகின்றன. ஜவ்வாது மலையின் அடிவாரத்திலுள்ள செண்பகத்தோப்பு அணையிலிருந்து உருவாகும் நாக நதி எனும் துணை ஆறும் அமிர்தி அருகில் வரும் ஆறும் ஆரணி அருகே இணைந்து கமண்டல நாக நதியாகி வாழைப்பந்தல் அருகில் இணைகிறது. இங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் அகலத்தில் செய்யாறு ஆறாக வடக்குக் கிழக்காக ஓடி காஞ்சிபுரத்தை அடுத்த பழையசீவராம் எனும் ஊரில் பாலாறுடன் இணைந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் ஓடும் செய்யாறு ஆறு மாவட்டத்தின் வேளாண் பாசனத்திற்கும் குடிநீர்த் தேவைக்கும் முக்கிய ஆதாரமாகும். செய்யாறு மற்றும் அதன் துணை ஆறுகளின் கரைகளில் திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய நகரங்களான போளூர், ஆரணி மற்றும் செய்யாறு அமைந்துள்ளன. செய்யாறு நகரின் ஊடே பாய்வதால் இந்த ஆறு இப்பெயர் பெற்றதா அல்லது இந்த ஆறு பாய்வதால் இந்த நகரம் இப்பெயர் பெற்றதா என்பது கேள்வியே. செய்யாறு நகரில் இந்த ஆற்றின் கரையில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சேயாறு (சேய்+ஆறு) என்பது காலப்போக்கில் திரிந்தும் செய்யாறு என பெயர்ப்பெற்றதாகவும் தகவல்கள் உள்ளன.

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart