”செய்திகளுக்குப் பணம் கொடுக்க முடியாது!” – ஆஸ்திரேலிய அரசை மிரட்டுகிறதா ஃபேஸ்புக்?!
சமூக வலைதளங்களுக்கென ஆஸ்திரேலிய அரசு புதிய சட்டம் ஒன்றை வகுத்திருக்கிறது. இதற்கு கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவிக்க, ஆஸ்திரேலிய அரசுக்கும், அந்நிறுவனங்களுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துவருகிறது.
ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டப்படி, ஃபேஸ்புக் மற்றும் கூகுள் தளங்களில் காண்பிக்கப்படும் செய்திகளுக்கான தொகையை டெக் நிறுவனங்கள் நேரடியாக ஆஸ்திரேலியாவின் செய்தி நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டும். அதற்கான தொகை எவ்வளவு என்பதனை செய்தி நிறுவனங்களும், டெக் நிறுவனங்களும் அடுத்த மூன்று மாதத்திற்குள் முடிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், அரசு அமைக்கும் செயற்குழு, அதனை ஒழுங்கு செய்யும் என்பதுதான். இந்த வாரம், ஆஸ்திரேலியாவின் செனட் சபையில் இது குறித்த தீர்மானம் நிறைவேற உள்ளது. அது வெற்றியடையும் பட்சத்தில் இந்த வார இறுதிக்குள் சட்டம் அமலாவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.
கூகுள் மற்றும் ஃபேஸ்புக்கின் நிலைப்பாடு என்ன?