சீனாவின் சைபர் தாக்குதல்கள்… சைபர் போருக்கான அறிகுறியா?

சீனா தங்கள் நாட்டு இணையத்தைச் சுற்றி Great Firewall of China-வை உருவாக்கியிருக்கிறது. ஆனால், இந்தியாவிடமோ எந்த தற்காப்புத் திட்டமோ அல்லது தாக்குதல் திட்டமோ இல்லை. இந்தியா விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.

இரண்டாம் உலகப் போரை அடுத்து, உலகில் பெரும் சேதத்தை விளைவிக்கும் வகையில் எந்தப் போரும் நிகழவில்லை. போர் என்று வந்துவிட்டால் அது அதைத் தொடர்புடைய அனைத்து நாடுகளையும் பாதிக்கும். இரண்டாம் உலகப் போர் மாதிரியான இன்னொரு போர் உலகில் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு குறைவுதான். ஏனெனில் அதனால் ஏற்படக்கூடிய சேதங்களையும், பாதிப்புகளையும் அனைத்து நாடுகளும் அறிந்திருக்கின்றன. மேலும், அணு ஆயுதங்கள் பெருகி இருக்கும் இந்த நூற்றாண்டில், ஒரு போர் என்பது மனித இனத்திற்கே ஆபத்தாகக் கூட முடியலாம். ஆனால், அதற்கு மாற்றான ஒன்று எப்போதோ உருவாகிவிட்டது. அது தான் ‘சைபர் போர்’ (Cyber War).

கடந்த சில வாரங்களாகவே, இந்தியாவின் மீதான சைபர் தாக்குதல்களுக்கான தலைப்புச் செய்திகளில் சீனா அதிகமாக இடம்பெற்று வருகிறது. இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான தகவல்களைத் திருடுவதில் இருந்து மும்பை மின்தடை வரை பல சம்பவங்களுக்கும் சீனாவே காரணம் எனப் பல பக்கங்களிலும் இருந்தும் குற்றச்சாட்டுகள் பறக்கின்றன. ஆனால், இவை அனைத்தையும் மறுத்து வருகிறது சீனா. மேலும் நடக்குமா, நடக்காதா எனத் தெரியாத சைபர் போருக்கு ஏன் இந்தியா கவலை கொள்ள வேண்டும்?

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart