- 1

சிங்கமும் சிறு எலியும்

191 0

சிறுவர் நீதி கதைகள்

சிங்கமும் சிறு எலியும்

சிங்கமும் சிறு எலியும் | The Lion and The Mouse Story in Tamil 

 ஒரு நாள் மதிய வேளையில் சிங்கம் ஒன்று காட்டில் தூங்கிக் கொண்டு இருந்தது.

அங்கு வந்த எலி சிங்கத்தின் மீது குதித்து விளையாடியது.

இதனால் சிங்கம் விழித்தெழுந்தது கோபம் கொண்ட சிங்கம் எலியைப் பிடித்து, “நீ எனக்கு இன்று நல்ல மதிய உணவாக போகிறாய்” என்று கர்ஜித்தது.

ஆனால் எலியோ! சிங்கத்திடம், “என்னை மன்னித்து விடுங்கள் நான் தெரியாமல் உங்கள் மீது ஏறிவிட்டேன். என்னை சாப்பிடாதீர்கள்”. எனக் கெஞ்சிக் கேட்டது.

சிங்கத்திடம் “இன்று நீங்கள் என்னைக் கொல்லாமல் விட்டால் என்றாவது ஒரு நாள் உங்களுக்கு என் நன்றியைத் திருப்பிச் செலுத்துவேன்” என்றது. சிங்கமோ, “இவ்வளவு சிறிய உடம்பை வைத்துகொண்டு எனக்கு நீ உதவ போகிறாயா?” என்று எலியை ஏளனம் செய்தது. இருந்தாலும் எலியைக் கொல்லாமல் போக விட்டது.

சில நாட்களின் பின் சிறிய இறைச்சி துண்டிற்கு ஆசைப்பட்ட அந்தச் சிங்கம் வேடர்கள் வைத்திருந்த வலையில் சிக்கிகொண்டது.

வலையில் அகப்பட்ட சிங்கம் பலமாகக் கர்ஜித்து அழுதது.

அந்தச் சிறிய எலி சிங்கத்தின் சத்தத்தைக் கேட்டு அந்த இடத்திற்கு வந்து வலையைத் தன் பல்லினால் வெட்டி சிங்கத்தைத் தப்பிப் போக உதவியது.

சிங்கம் இந்தச் சின்ன எலி என்னைக் காப்பாற்றி விட்டதே என்று வெட்கப்பட்டு எலிக்கு தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றி சொல்லிச் சென்றது.

நீதி: உருவத்தை யாரையும் பார்த்து ஏளனம் செய்யக் கூடாது.

உடலில் பெரியவராக இருப்பதால் தான் மேலானவர் என்று ஆணவம் கொள்ளக் கூடாது. சிறிய பலமற்ற ஒருவர், தன்னிலும் பெரிய பலமான ஒருவருக்கு உதவும் சந்தர்ப்பங்களும் வரும்.

சிறுவர் நீதி கதைகள்

சிங்கமும் சிறு எலியும்

Related Post

- 3

எறும்பும் வெட்டுக்கிளியும்

Posted by - அக்டோபர் 30, 2020 0
சிறுவர் நீதி கதைகள் எறும்பும் வெட்டுக்கிளியும் எறும்பும் வெட்டுக்கிளியும் The Ant and the Grasshopper  மதிய வெயில் நேரத்தில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து…

88. கடையும் உடையும்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள் 88. கடையும் உடையும் தமிழ்நாட்டிலுள்ள ஒரு சிற்றுாரிலிருந்து ஒரு குடியானவன் பம்பாய் பார்க்கப் போயிருந்தான். ஊர் முழுவதும் சுற்றிப்பார்த்தான். மாலையில் கடற்கரையைப் பார்க்கப் போனான்.…

52. அறத்தால் வருவதே இன்பம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
அறிவு கதைகள் 52. அறத்தால் வருவதே இன்பம் “அறத்தால் வருவதே இன்பம்” என்பது ஒரு குறட்பாவில் பாதி அடி. கடமையைச் செய்து மகிழ்வது தான் உண்மையான ம்கிழ்ச்சி…

66. பல்லக்கும் கன்றுக்குட்டியும்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள் 66. பல்லக்கும் கன்றுக்குட்டியும் ஒரு மடத்திற்குச் சொந்தமான கன்றுக்குட்டியைக் காணாமல் தவித்த அந்த மடாதிபதி, தம் பல்லக்குத் தூக்கும் ஆட்கள் நால்வரையும் அழைத்து, கன்றுக்…

ஒட்டகத்தைக் கொன்ற காகம் 1-9

Posted by - ஏப்ரல் 17, 2020 0
ஒட்டகத்தைக் கொன்ற காகம் 9. ஒட்டகத்தைச் கொன்ற காகம் ஒரு காட்டில் சிங்கம் ஒன்று அரசு செய்துகொண்டிருந்தது. அதற்கு அமைச்சர்களாக ஒரு நரியும் ஒரு புலியும், ஒரு…

உங்கள் கருத்தை இடுக...