- 1

சிங்கமும் கரடியும் குள்ளநரியும்

52 0

சிறுவர் நீதி கதைகள்

சிங்கமும் கரடியும் குள்ளநரியும்

சிங்கமும் கரடியும் குள்ளநரியும் | The Lion, the Bear & the Fox Story in Tamil 

 அது ஒரு கோடை காலம். அந்த காட்டில் வாழ்ந்த விலங்குகள் அனைத்தும் அந்த காட்டை விட்டு வேறு ஒரு காட்டுக்கு சென்று விட்டன. இதனால் காட்டில் உள்ள மற்ற விலங்குகளுக்கு உணவு பஞ்சம் ஏற்பட்டது.

அந்த காட்டில் வாழ்ந்த சிங்கமும் கரடியும் ஒரு ஒப்பந்தம் செய்தன. சிங்கம் கரடியிடம், “நாம் இருவரும் ஒன்றாக வேட்டையாடி இரையை சமமாக பிரித்துக் கொள்வோமா?” என்றது. கரடியும் சம்மதம் தெரிவித்தது.

ஒருநாள் சிங்கமும் கரடியும் வேட்டைக்குச் செல்லும்போது, வழி தவறிய கால் உடைந்த மான் குட்டி ஒன்று வழியில் அமர்ந்திருபதைப் பார்த்தன. சிங்கத்திற்கும் கரடிக்கும் அளவற்ற மகிழ்ச்சி. ஏனெனில் சிங்கமும் கரடியும் உணவு சாப்பிட்டு 2 நாட்கள் ஆகிவிட்டது.

சிங்கமோ அந்த மானின் வயிற்றுப்பகுதி எனக்கு தான் என்றது. கரடியோ “இல்லை இல்லை அதன் வயிற்றுப்பகுதி எனக்கு தான்” என்றது. மானைப் பங்கு போடுவதில் சிங்கமும் கரடியும் பயங்கரமாகச் சண்டை செய்தன. வெகுநேரம் சண்டை செய்ததால் இரண்டும் களைப்படைந்து விட்டன.

அதனால் இரண்டும் தரையில் சாய்ந்தன. அந்த சமயம் வெகுதூரத்திலிருந்தே இவர்களின் சண்டையைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு குள்ள நரி ஓடி வந்தது. அங்கிருந்த மானைத் தூக்கிகொண்டு ஒடிவிட்டது. சிங்கமும் கரடியும் ஒன்றும் செய்ய முடியாமல் அதனைப் பார்த்தபடி கீழே தரையில் கிடந்தன.

இவை இரண்டும் வேட்டையில் கிடைத்ததை நல்ல முறையில் பங்கு போட்டுக் கொள்ளாமல் வீணாகச் சண்டை போட்டு இரையை இழந்தோமே என்று வருத்தப்பட்டன.

நீதி: வீண் சண்டை என்றும் இரு தரப்பினருக்கும் தீமையாகும்.

சிறுவர் நீதி கதைகள்

சிங்கமும் கரடியும் குள்ளநரியும்

Related Post

தங்களால் தாங்களே கெட்டோர் 1-4

Posted by - ஏப்ரல் 17, 2020 0
தங்களால் தாங்களே கெட்டோர் 4. தங்களால் தாங்களே கெட்டோர் முன் காலத்தில் ஒரு சாமியார் இருந்தான். அவன் பெயர் தேவசன்மா என்பது. அவன் பிச்சை யெடுத்துப் பிழைத்து…

52. அறத்தால் வருவதே இன்பம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
அறிவு கதைகள் 52. அறத்தால் வருவதே இன்பம் “அறத்தால் வருவதே இன்பம்” என்பது ஒரு குறட்பாவில் பாதி அடி. கடமையைச் செய்து மகிழ்வது தான் உண்மையான ம்கிழ்ச்சி…

குழந்தை வளர்ப்பு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
குழந்தை வளர்ப்பு   26. குழந்தை வளர்ப்புஎன் கடையில் பலபேர் வேலை செய்துகொண்டிருந்த காலத்தில், ஒருநாள் அப்துல் கரீம் என்பவர் வேலைக்கு வரவில்லை. அவரைத் தேடி அவர்…

70. கரூர் திருச்சிப் புலவர்கள்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள் கி. ஆ. பெ. விசுவநாதம் கதைகள் 70. கரூர் திருச்சிப் புலவர்கள் இருவரும் மாமன் மைத்துன உறவினர். கரூர்ப் புலவர், மாமன்; திருச்சிப் புலவர்,…

81. வரத நஞ்சையபிள்ளை

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள் 81. வரத நஞ்சையபிள்ளை 50 ஆண்டுகட்கு முன்பு. தஞ்சையை அடுத்த கரந்தையில் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுவிழா. த.வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் முன்நின்று நடத்திக் கொண்டிருந்தார்கள்.…

உங்கள் கருத்தை இடுக...