- 1

சிங்கத் தோல் போர்த்திய கழுதை

70 0

சிறுவர் நீதி கதைகள்

சிங்கத் தோல் போர்த்திய கழுதை

சிங்கத் தோல் போர்த்திய கழுதை The Donkey in The Lion’s Skin 

அது ஒரு அடர்ந்த காடு. பக்கத்துக் கிராமத்திலிருந்து கழுதை ஒன்று அந்தக் காட்டிற்கு வழி மாறி வந்தது. வரும் வழியில் பல மிருகங்கள் பயத்துடன் ஓடி வந்தன, அதில் ஒரு மானும் இருந்தது.

அந்த கழுதை மானிடம், “ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி செல்கின்றன?” என்று கேட்டது. அதற்கு மானோ, “இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது. அதைக்கண்டு தான் நாங்கள் அனைவரும் இப்படி ஓடுகின்றோம்.” என்று கூறிவிட்டுச் சென்றது. கழுதையும் சிங்கத்தின் வீரத்தை நினைத்துகொண்டே காட்டிற்குள்ளே சென்றது. சிறிது துரம் கடந்து சென்றது களைபடைந்த கழுதை ஒரு ஓடையைப் பார்த்தது.

கழுத்தையும் தண்ணீர் குடிக்க அந்த ஓடைக்கு அருகில் சென்றதும் அங்கே சில வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடிய மான், புலி, சிங்கம் போன்ற மிருகங்களின் தோலை அங்கிருந்தப் பாறைகள் மேல் உலர வைத்திருந்தனர்.

அதைப் பார்த்ததும் கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்துத் தன் உடம்பின் மேல் போர்த்திக்கொண்டது. அந்த கழுத்தையும் பார்பதற்க்கு சிங்கம் போலவே இருந்ததனால், மற்ற மிருகங்களும் கழுதைப் பார்த்துப் பயந்து ஒதுங்கிப் சென்றன.

மிருகங்கள் எல்லாம் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழிக் கொடுத்து ஒதுங்கிப் போனதைப் பார்த்து கழுதைக்கு, கர்வம் தலைக்கேறியது.

சிறிது தூரம் அந்த கழுதை அந்த காட்டில் உலாவி கொண்டிருந்தது. செல்லும் வழியில் நரி ஒன்றினை அந்த கழுதை பார்த்தது.

சரி இந்த நரியையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து, நரியின் அருகில் சென்றது. நரியும் பயத்தில் நடுங்கிக்கொண்டே “சிங்க ராஜ, நான் தெரியாமல் இந்த பக்கம் வந்துவிட்டேன் இனி நான் இந்த காட்டிற்கே வர மாட்டேன்”, என்று கழுதையிடம் கூறியது.

கழுதையும் சிங்கம் போல கர்ஜிக்கணும்னு நினைச்சு “ங்கெ ங்கெ”ன்னு கத்தியது. அதோட குரல் அது கழுதைன்னு நரிக்கு காட்டிக் கொடுத்தது. அதன் பிறகு அந்த கழுதைய நரி மதிக்கவேயில்லை.

“எனக்கு கோவம் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு”, என்றது கழுதை.

அதற்கு நரியோ, கழுதையைப் பார்த்து “முடியாது” என்று பதில் கூறியது. மேலும் நரி கழுதையிடம், “நீ சிங்கம் போன்று வேஷம் போட்டாலும் உன்னுடைய உண்மையான குணத்தை உன்னால் மாற்ற முடியாது.” என்று கூறியது.

கழுத்தையும் வெட்கித் தலைகுனிந்தது.

நீதி: நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேடம் போட்டாலோ அல்லது அவரைப் போல நடந்து கொள்வதாலோ அவமானம்தான் மிஞ்சும்.

சிறுவர் நீதி கதைகள்

சிங்கத் தோல் போர்த்திய கழுதை

Related Post

- 3

சேவலும் இரத்தினக் கல்லும்

Posted by - அக்டோபர் 30, 2020 0
சிறுவர் நீதி கதைகள் சேவலும் இரத்தினக் கல்லும் சேவலும் இரத்தினக் கல்லும் The Cock & the Jewel Story in Tamil  அது ஒரு அடர்ந்த…

பாம்பு வாகனமேறிய தவளை 3-13

Posted by - ஏப்ரல் 18, 2020 0
பாம்பு வாகனமேறிய தவளை 13. பாம்பு வாகனமேறிய தவளை தவளைகள் நிறைந்திருந்த ஓர் ஓடைக் கரையில் ஒரு பாம்பு இருந்தது. அது தவளைகளையெல்லாம் விழுங்கித் தன் பசியை…

கொக்கைக் கொன்ற முயல் 1-7

Posted by - ஏப்ரல் 17, 2020 0
கொக்கைக் கொன்ற முயல் 7. கொக்கைக் கொன்ற நண்டு நாள் தோறும் மீன்களைக் கொத்தித்தின்று உடல் வளர்த்து வந்த ஒரு கொக்கு இருந்தது. அது வழக்கம் போல…

அன்பரான அரக்கனும் கள்ளனும் 3-7

Posted by - ஏப்ரல் 17, 2020 0
அன்பரான அரக்கனும் கள்ளனும் 7. அன்பரான அரக்கனும் கள்ளனும் ஓர் அந்தணன் வீட்டில் ஒரு பசு இருந்தது. அதைக் களவு செய்வதற்காக ஒரு திருடன் இருளில் வந்தான்.…

80. சாட்சிக்காரனின் சொத்து மதிப்பு

Posted by - ஏப்ரல் 18, 2020 0
அறிவு கதைகள் 80. சாட்சிக்காரனின் சொத்து மதிப்பு அடிக்கடி நீதி மன்றத்திற்கு வந்து பொய்ச்சாட்சி சொல்லிக்கொண்டே காலங் கழித்து வந்த ஒருவரை வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.…

உங்கள் கருத்தை இடுக...