சருமத்தை இயற்கை முறையில் பாதுகாக்க வேண்டுமா? இந்த பேஸ் பேக்குகள் பயன்படுத்தி பாருங்க

சருமத்தை இயற்கை முறையில் பாதுகாக்க வேண்டுமா? இந்த பேஸ் பேக்குகள் பயன்படுத்தி பாருங்க

வெயில்காலத்தில் சருமப்பிரச்சினைகள் தலைதூக்கி கொண்டு காணப்படும். இதனால் வறட்சியான சருமம், கரும்புள்ளிகள் போன்றவை ஏற்பட்டு முகத்தை பாழாக்கி விடும்.

இதற்காக கண்ட கண்ட கிறீம்களை தான் வாங்கிப்போட வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை கூட பயன்படுத்தி இயற்கை முறையில் சருமத்தை பாதுகாக்க முடியும்.

அந்தவகையில் வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய சருமத்தைப் பாதுகாக்கும் ஃபேஸ்பேக்குகளை பார்க்கலாம்.

  • பாதி எலுமிச்சைப் பழத்தின் சாறு, அரை வெள்ளரிக்காய் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மாவு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம்.
  • ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் கற்றாழை (Aloe vera) ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
  • இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால், ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மற்றும் ஒரு பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். பிறகு இந்தக் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.
  • ஒரு கப் பழுத்த பப்பாளி, ஒரு கப் பழுத்த வாழைப்பழம், ஒரு டேபிள்ஸ்பூன் பால் பவுடர் ஆகியவற்றைத் தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரால் முகத்தைக் கழுவலாம்.

சருமத்தை இயற்கை முறையில் பாதுகாக்க வேண்டுமா? இந்த பேஸ் பேக்குகள் பயன்படுத்தி பாருங்க Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

      உங்கள் கருத்தை இடுக...

      வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

      error: Content is protected !!
      தமிழ் DNA
      Logo
      Register New Account
      Reset Password
      %d bloggers like this:
      Shopping cart