கொள்ளிடம் ஆறு

கொள்ளிடம் ஆறு - 1

கொள்ளிடம் ஆறு

கொள்ளிடம் ஆறு (பிரித்தானிய ஆட்சிக்கால ஆங்கிலம்: Coleroon) தமிழ்நாட்டில் ஓடும் காவிரி ஆற்றின் கிளை ஆறு ஆகும். காவிரியின் வெள்ளப் பெருக்கைக் கொள்ளும் இடம் கொள்ளிடம் எனப் பெயர் பெற்றது.[1]

ஆற்றின் போக்கு

திருச்சி அருகே திருவரங்கம் தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் திருச்சி, அரியலூர், தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களுக்கு இடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி, முட்டம் வழியே பரங்கிப் பேட்டைக்கு 5 கி.மீ. தெற்கில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

கரையில் உள்ள நகரங்கள்

கொள்ளிடம், காவிரியின் வெள்ள வடிகாலாக பயன்படுகிறது.[2]சிதம்பரம் நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.அரியலூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற திருமழபாடி மற்றும் திருமானூர் ஆற்றின் வட கரையில் உள்ளது .

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password