கொரோனாவினால் நடந்த நல்ல விஷயம்.. இன்சூரன்ஸ் வாங்க நினைக்கும் மக்கள்.. சர்வே முடிவுகள் அதிரடி..!

கொரோனாவினால் நடந்த நல்ல விஷயம்.. இன்சூரன்ஸ் வாங்க நினைக்கும் மக்கள்.. சர்வே முடிவுகள் அதிரடி..!

கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் கொடிய அரக்கன் மக்களை ஒரு புறம் வாட்டி வதைத்து வரும் நிலையில், மறுபுறம் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் பயமும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது.

ஆக இப்படி கொரோனாவை சுற்றிலும் பல மோசமான விஷயங்கள் தான் அரங்கேறி வருகின்றன. ஒரு புறம் மக்கள் பாதிப்பு, மறுபுறம் பொருளாதார சீர்குலைவு, இதனால் தொழில் துறை முடக்கம், இதற்கிடையில் வேலையிழப்பு, மக்கள் கையில் பணப்புழக்கமின்மை. ஆக இதற்கு மத்தியில் மக்களின் தோன்றியுள்ள ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவெனில். மக்கள் இன்சூரன்ஸினை பற்றி தெரிந்து கொண்டுள்ளது தான்.

கொரோனாவினால் நடந்த நல்ல விஷயம்.. இன்சூரன்ஸ் வாங்க நினைக்கும் மக்கள்.. சர்வே முடிவுகள் அதிரடி..!

அது ஆயுள் காப்பீடாக இருந்தாலும் சரி, ஹெல்த் இன்சூரன்ஸாக இருந்தாலும் சரி, அதன் முக்கியத்துவத்தினை பற்றி தெரிந்து கொண்டுள்ளனர் எனலாம்.

இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக சமீபத்தில் பாலிசிபஜார் நடத்திய ஆய்வொன்றில், பதிலளித்தவர்களில் 51 சதவீதம் பேர் இன்சூரன்ஸ் வைத்திருப்பது அவசியம் என்று கூறியுள்ளனர். இதில் குறிப்பாக 80 சதவீதம் பேர் கொரோனா தொற்று நோயினால் இதன் அவசியத்தினை உணர்ந்துள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் மக்கள் தங்களது நிதி பிரச்சனைகளை பற்றி கட்டுப்படுத்துவதில் கை தேர்ந்திருந்தாலும், அவர்கள், அவர்களது குடும்பத்தினரின் ஆரோக்கியத்தினை பற்றி மிக கவலைப்படுகிறார்கள். இதன் காரணமாக முன்பை விட இன்சூரன்ஸ் பற்றி விழிப்புணர்கள் மிக அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

அதிலும் என் குடும்பம் மற்றும் எனது ஆரோக்கியம் என்பதை பற்றி இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 37 சதவீதம் பேர் கவலை தெரிவிக்கின்றனர். இதே 28% பேர் நீண்டகால நோக்கில் தனது குடும்பத்திற்கு நிதி பாதுக்காப்பாளராக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். இதே வேலை பாதுகாப்பு என்று 19% பேரும், போதிய பணம் கையில் உள்ளதாகவும், போதிய நிதி வசதிகள் உள்ளதாகவும் 15% தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

ஆக மொத்தத்தில் இந்த ஆன்லைன் ஆய்வானது மக்களின் மனதினை புரிந்து கொள்ள செய்யப்பட்ட ஆய்வாக கருதப்படுகிறது. பாலிசிபஜாரின் இந்த ஆய்வில், 14,624 பேர் பங்கேற்றுள்ளனர்.

இன்சூரன்ஸ் போர்டலை அணுகுவோர் பாதிக்கும் மேற்பட்டோர் இன்சூரன்ஸ் பற்றிய அவசியத்தினை உணர்ந்துள்ளதாகவும், இவர்களில் 11 சதவீதம் பேர் அதன் முக்கியத்துவத்தினை பற்றி அறிந்திருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தான் கடந்த மார்ச் முதல் மே வரையிலான காலத்தில், முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது ஹெல்த் இன்சூரன்ஸ் இருமடங்கு அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

கொரோனாவினால் நடந்த நல்ல விஷயம்.. இன்சூரன்ஸ் வாங்க நினைக்கும் மக்கள்.. சர்வே முடிவுகள் அதிரடி..!

View Source Page

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
    Shopping cart