கெடிலம் ஆறு

கெடிலம் ஆறு

தமிழகத்தில் விழுப்புரம் கடலூர் மாவட்டங்களுக்கிடையே பாயும் ஒரு ஆறுதான் கெடிலம் ஆறு. கெடிலம் பெயர்க்காரணம்: பெரிய நதிக்கும் சிறிய நதிக்கும் இடைப்பட்ட நதி தான் கெடிலம் எனப்படும். கெடிலம் ஆழமான ஓடை.

உருவாகும் இடம்

கள்ளக்குறிச்சி வட்டம், சங்கராபுரம் அருகே தோற்றமெடுக்கும் கெடிலம் அவ்வட்டத்தின் கிழக்கு நோக்கி 8 கி.மீ தொலைவு ஓடி திருக்கோவிலூர் வட்டத்தில் புகுந்து அரியூர் வரை கிழக்கு நோக்கி பாய்ந்து பின்னர் வடகிழக்கு வளைந்து செல்கிறது. 10 கி.மீ. வடகிழக்காய் பாய்ந்த பின் பரிக்கலுக்கும் பாதூர் என்ற ஊர்களுக்கும் இடையில் மாரனோடையில் மீண்டும் கிழக்கு நோக்கி பாய்கிறது. சேந்தநாடு எனும் ஊருக்கருகே 3 கி.மீ. தொலைவில் கடலூர் வட்டத்தில் புகுகிறது. பின்னர் சிறிது தொலைவு தென்கிழக்காகவும் மாறி மாறி வளைந்து வங்ககடலில் கலக்கிறது இதன் பயணத் தொலைவின் மொத்த நீளம் 112 கி.மீ. இது மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் ஒரு ஆறாகும்.

கெடிலக்கரை நாகரீகம்

தொண்டை மண்டல நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் இடைப்பட்ட இந்நிலப்பகுதியை சங்க மறுவிய காலத்திலும் பக்தி இலக்கிய காலங்களிலும் நடுநாடு என்றழைக்கப்பட்டது. இது தற்போது விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாகும்.

நாகரீக செயலமைக்கு காரணமாய் அமைந்த இந்நதியை பற்றி பேராசிரியர் சுந்தர சண்முகனார் கெடிலக்கரை நாகரீகம் மற்றும் கெடில வளம் என்ற நூல்களை எழுதியுள்ளார்.

வரலாற்றில் கெடிலம் நதி

பேரரசன் மூன்றாம் இராசராசனை சிறை வைத்து சோழப் பேரரசனை வியக்க வைத்த கோப்பெருஞ்சிங்கன் சேந்தமங்கலம் கோட்டைக்கட்டி ஆண்டது இந்நதிக்கரையில்தான். தமிழ், மண்ணில் கால்பதித்த ஆங்கிலேயர்கள் முதன் முதலில் கோட்டை கட்டியது இந்த நதியின் முகத்துவாரத்தில்தான், சைவப் புகழ் பாடும் திருவந்திபுரமும் இந்நதிக்கரையில் அமைந்துள்ளன.

பக்தி இலக்கியங்களில் கெடிலம் நதி

தேவாரம் பாடிய ஆசிரியர்களான நம்பிரான் தோழன்’ என சிறப்பித்து கூறப்படும் சைவ சமய நாயன்மாரான ஸ்ரீ ஆலால சுந்தரமூர்த்தி நாயனாரும் மருள்நீக்கியார் எனப்படும் அப்பர்திருநாவுகரசரரும் பிறந்தது இக்கெடில நதிக்கரையின் திருநாவலூர் மற்றும் திருவாமூர் கிராமங்களில்தான்.

கெடிலம் நதி
கெடிலம் நதி

பழனஞ்சேர் கழனித் தெஞ்சின் மாலைநீர் கிழிய கோடி அதனிடை மணிகள் சிந்தும் கெடிலம்” : *திருநாவுக்கரசர் (அப்பர்)

கொன்டை பிறழ் தெண்ணீர் கெடிலம்” : *திருஞானசம்பந்தர்

வாய்ந்த தொல் கெடிலத்தின் வடகரை ஏய்ந்த சீரக்கரை யேற்றும் பதி

*போதகாசிரியர்

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart