கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து PUBG நீக்கம்!

இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து பப்ஜி நீக்கப்பட்டுள்ளது. 

தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக 117 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதில் பிரபல விளையாட்டு ஆப்பான பப்ஜியும் அடங்கும். இளைஞர்களின் மத்தியில் பிரபலான இந்த பப்ஜி ஆப்பானது, ஊரடங்கு காலத்தில் மட்டும் 17.5 கோடிக்கும் மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஒப்பிடுகையில், இந்தியாவில் தான் பப்ஜியை அதிகம் விரும்பி விளையாடுகின்றனர்.

இந்தநிலையில், தற்போது பப்ஜிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏற்கனவே பப்ஜியை பதிவிறக்கம் செய்தவர்கள், தொடர்ந்து விளையாடலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், அதனை அப்டேட் செய்ய முடியாது. 

இதற்கு முன்பு டிக்டாக் தடை செய்யப்பட்ட போது, இந்தியாவில் அதன் சர்வரும் நிறுத்தப்பட்டது. இதனால் டிக்டாக் தடைக்குப் பிறகு, அதை ஏற்கனவே இன்ஸ்டால் செய்தவர்களும் பயன்படுத்த முடியாமல் போனது. அதே போல், பப்ஜியின் சர்வர் நிறுத்தப்படும் வரையில், அதை இன்ஸ்டால் செய்திருப்பவர்கள் தொடர்ந்து விளையாட முடியும்.

Read Full News @ Gadgets-360

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart