- 1

குழந்தையின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பான மியூச்சுவல் ஃபண்டு முதலீடு பற்றித் தெரியுமா?

91 0

குழந்தையின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பான மியூச்சுவல் ஃபண்டு முதலீடு பற்றித் தெரியுமா?

பட்டப்படிப்பு

பட்டப்படிப்பு

உதாரணமாக, ஒரு தொழில்முறை பட்டப்படிப்புப் பட்டம் படிக்கச் சுமார் ரூ 10 லட்சம் செலவாகும், இது 15 ஆண்டுகளில் 42 லட்சம் ரூபாயாக அதிகரிக்கும் (10% பணவீக்கத்தை அனுமானித்து). எனவே, பாரம்பரிய விருப்பங்களில் முதலீடு செய்வது தவிர, பணவீக்கம் சரிசெய்யப்பட்ட வருவாயை வழங்கும் பிற முதலீட்டு வாய்ப்புகளையும் பெற்றோர்கள் பார்க்க வேண்டும்.

பரஸ்பர நிதி மூலம் முதலீடு செய்யுங்கள்

பரஸ்பர நிதி மூலம் முதலீடு செய்யுங்கள்

பல்வேறு துறைகளில் முதலீடு செய்யப் பரஸ்பர நிதிகள் ஒரு சிறந்த வழியாகும். மேலும் தொழில்முறை நிர்வாகம், வரி நன்மை மற்றும் பன்முகத்தன்மை போன்ற பலவிதமான நன்மைகளை வழங்குகின்றன. முதலீட்டாளர்கள் தங்கள் ஆபத்து விவரங்கள், வருவாய் எதிர்பார்ப்புகள் மற்றும் முதலீடு பொருந்தும் பரஸ்பர நிதி வகைகளைத் தேர்வு செய்யலாம் (அட்டவணை 1 ஐ காண்க: இங்கே கிளிக் செய்யவும்).

நீண்ட கால் முதலீடு

நீண்ட கால் முதலீடு

பெற்றோர்கள் நீண்டகால முதலீட்டு எண்ணத்தை மனதில் கொண்டிருந்தால் பரஸ்பர நிதி பிரிவுகளில், தூய சமபங்கு பரஸ்பர நிதி பிரிவுகள் சிறந்த தேர்வாகும். இந்த நிதிகள் குறுகிய கால ஏற்ற இறக்கங்களின் அபாயங்கள் இருந்த போதிலும், நீண்டகாலமாக அதிக வருமானத்தை அதிகரிக்கும்.

ரிஸ்க் வேண்டாமா?

ரிஸ்க் வேண்டாமா?

ஆபத்தான முதலீட்டைத் தவிர்க்க என்னும் முதலீட்டாளர்கள் கலப்பின் நிதிகளான (சமபங்கு மற்றும் கடன்) போன்றவற்றில் தங்கள் பார்வையைச் செலுத்தலாம். குறுகிய கால முதலீட்டாளர்கள் நேரப் பரப்பளவை அடிப்படையாகக் கொண்ட கடன் பரஸ்பர நிதி வகைகளில் கவனம் செலுத்தலாம்.

முதலீட்டாளர்கள் தங்கள் இலக்குகளை அடையப் பரஸ்பர நிதியங்களின் முறையான அம்சத்தைப் பயன்படுத்தலாம்:

எஸ்ஐபி

எஸ்ஐபி

பரஸ்பர நிதிகளால் வழங்கப்படும் முறையான முதலீட்டுத் திட்டங்கள் (SIPs) நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய உதவுகின்றன; நீங்கள் சமபங்கு சந்தைகளின் உயர்ந்த வருவாயைப் பெறுவதோடு சொத்து வகையுடன் தொடர்புடைய அபாயங்களைத் தவிர்ப்பீர்கள். நீங்கள் வழக்கமான இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்கிறீர்கள்.

பல சந்தைச் சுழற்சிகள் மூலம் முதலீடு செல்லும் போதிலும், முறையான முதலீட்டுத் திட்டமானது (SIP), ‘சராசரி ரூபாய் விலை மூலம்’ நன்மைகளை அறுவடை செய்ய உதவுகின்றன. அதாவது, நிகரச் சொத்து மதிப்பு (என்.ஏ.வி) குறைவாக இருக்கும் போது, அதிகப் பரஸ்பர நிதி அலகுகளை வாங்குவது, என்ஏவி உயர்ந்தால் குறைவான அலகுகளை வாங்குவது. மேலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் தேவையின்படி SIP தொகையை நீங்கள் அமைக்க முடியும். இந்த அம்சம் முதலீட்டாளர்களுக்கு மிக நீண்ட காலமாகத் தங்கள் குழந்தைக்குத் திட்டமிடுவதோடு, பங்குகளிடமிருந்து சிறந்த நன்மைகளைப் பெறலாம்.

எஸ்டிபி

எஸ்டிபி

முதலீட்டாளர்கள் வழக்கமான இடைவெளிகளில் ஒரு தீர்மானிக்கப்பட்ட தொகையை முறையாக ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு முறைப்படுத்தப்பட்ட பணப்பரிமாற்ற திட்டத்தின் (எஸ்டிபி) வழியே பரிமாற்றம் செய்து கொள்ளலாம். உதாரணமாக, முன்கூட்டி வரையறுக்கப்பட்ட ஒரு தொகையை ஒரு குறிப்பிட்டத் தேதியில் கடன் முதலீட்டுத் திட்டத்திலிருந்து சமபங்கு முதலீட்டுத் திட்டத்திற்கு நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

இது கடன் முதலீட்டின் மீது வருவாயை உருவாக்குவதோடு மட்டுமில்லாமல் ஒரு முறை செய்யப்படும் சமபங்கு முதலீட்டில் உள்ள அபாயத்தைக் குறைக்கும். மறுபுறம் முதலீட்டாளர்கள், இதைக் குறுகிய காலக் கடன் நிதிகளுக்கு மாற்றுவதன் மூலம் சமபங்கு நிதிகளிலிருந்து கிடைக்கும் லாபங்களைப் பூட்டலாம். இதில் வருவாயின் நிலையற்றத்தன்மை மிகவும் குறைவு. இது இலக்கு தொகையை முன்கூட்டி அடையும் போது அல்லது இலக்கு மிக அருகாமையில் இருக்கும் போது பொதுவாகச் செய்யப்படும். இது சமபங்குச் சந்தையில் முதலீட்டாளரின் நிதிகளில் குறுகிய கால நிலையற்றத்தன்மையின் தாக்கங்களைக் குறைக்கிறது.

எஸ்டபுள்யூபி

எஸ்டபுள்யூபி

மேலும், குழந்தைகள் தொடர்பான கல்விக் கட்டணம் போன்ற வழக்கமான செலவுகளை எதிர்கொள்ள முதலீட்டாளர்கள் முறைப்படுத்தப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறும் திட்டங்களைத் (எஸ்டபுள்யூபி) தேடலாம். இது நிதி இல்லங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதன் மூலம் ஒரு குறிப்பிட்டத் தொகையை ஒரு முன்கூட்டித் தீர்மானிக்கப்பட்ட தேதியில் மீட்க அனுமதிக்கிறது.

தொகுப்புரை

தொகுப்புரை

குழந்தைகளின் வருங்காலத்தைப் பாதுகாக்கவும் மேலும் அவர்களை நிச்சயமற்ற சூழல்களுக்கு எதிராகப் பாதுகாக்கவும் செல்வத்தைச் சேர்ப்பதற்குப் பெற்றோர்கள் வழக்கமாகச் சேமிப்பதோடு மட்டுமல்லாமல் மேலும் ஆரம்பத்திலேயே முதலீடு செய்வதையும் தொடங்க வேண்டும்.

பாரம்பரிய நிதி முதலீடுகளைத் தாண்டி பரஸ்பர நிதியங்கள் மற்றும் அவர்களால் வழங்கப்பட்ட திட்டமிடப்பட்ட அம்சங்கள் போன்ற வழிகாட்டல்களுக்கு நாம் பழகவேண்டும். இருப்பினும், பரஸ்பர நிதிகள் ஆபத்துகளுக்கு உட்பட்டுள்ளன என்பதைக் கவனியுங்கள். எனவே முதலீட்டாளர்கள் முறையான விடாமுயற்சியையும், முதலீட்டிற்கு முன்னதாகவே தங்கள் சொந்த அபாய எல்லையை மதிப்பீடு செய்து, வருவாய் எதிர்பார்ப்புகள் மற்றும் முதலீட்டுப் பரப்பளவையும் மதிப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குழந்தையின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பான மியூச்சுவல் ஃபண்டு முதலீடு பற்றித் தெரியுமா?

VIew Source Page

Related Post

- 11

உங்கள் அலுவலகத்தில், நீங்கள் எந்த வகை..?

Posted by - நவம்பர் 14, 2016 0
உங்கள் அலுவலகத்தில், நீங்கள் எந்த வகை..? 1. அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலையே கதியாக இருப்பவர்கள் அலுவலகத்தை இரண்டாவது வீடாகக் கருதும் (அல்லது ஒருவேளை முதல் வீடாகக் கூட!)…
- 22

சம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா..? புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்!

Posted by - ஆகஸ்ட் 8, 2018 0
சம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா..? புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்! மாதாந்திர பட்ஜெட்டை உருவாக்கி கொள்ளுதல் பெரிய நிறுவனங்கள் எளிமையான பட்ஜெட்களை வகுத்துக்கொண்டு சிறப்பாகச்…
- 30

பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் வரியாக செலுத்த வேண்டிய கட்டணங்கள் என்னென்ன?

Posted by - ஜூலை 9, 2016 0
பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் வரியாக செலுத்த வேண்டிய கட்டணங்கள் என்னென்ன? பங்குச் சந்தை முதலீடு கட்டணங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள், இப்படி நாம் கட்டணமாக…
- 37

மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி உங்களுக்கு தெரியாது சில ரகசியங்கள்..!

Posted by - நவம்பர் 17, 2016 0
மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி உங்களுக்கு தெரியாது சில ரகசியங்கள்..! மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய எவ்வளவு பணம் வேண்டும்..? மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது பெறும்…
- 44

சிவிவி எண் என்றால் என்ன..?

Posted by - ஏப்ரல் 2, 2016 0
சிவிவி எண் என்றால் என்ன..? சென்னை: இணையம் நம்முடைய வாழ்வை மிகவும் எளிதாக்கி விட்டது. வங்கி பரிவர்த்தனையை நீண்ட வரிசையில் நின்று முடித்த காலம் மலையேறிவிட்ட நிலையில்…

உங்கள் கருத்தை இடுக...