- 1

குழந்தைகளின் தசைகளைத் தாக்கும் புற்றுநோய் பற்றி கேள்விபட்டதுண்டா? அதன் அறிகுறிகள் என்ன?

102 0

ராபடோமியோசர்கோமா புற்றுநோய் என்றால் என்ன?

ராபடோமியோசர்கோமா புற்றுநோய் என்றால் என்ன?

இது ஒரு வீரியமிக்க புற்றுநோய் ஆகும். இந்த புற்றுநோயால் நமது தசை செல்களில் கட்டிகள் உருவாகின்றன. அல்லது தசை செல்களை படிப்படியாக வீங்கச் செய்கின்றன. குறிப்பாக 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே இந்த புற்றுநோய் தாக்குகிறது. ரப்டோமியோசர்கோமா தசை திசுக்களில் உள்ள உயிரணுக்களில் உருவாகிறது. இது ஒரு வகை சர்கோமா ஆகும், இது தசைகளில் தொடங்கி எலும்புகளுடன் தொடர்புடையது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் 3 வது புற்றுநோயாக இருக்கின்றன. இவை நம் உடலின் பாகங்களை நகர்த்த உதவும் தசைகளை பாதிக்கின்றன.

ராபடோமியோசர்கோமா புற்றுநோய் கட்டிகள் உருவாகக் கூடிய இடங்கள்:

ராபடோமியோசர்கோமா புற்றுநோய் கட்டிகள் உருவாகக் கூடிய இடங்கள்:

* தலை மற்றும் கழுத்து (குறிப்பாக தொண்டைக்குள் அல்லது கழுத்தின் முதுகெலும்புக்கு அருகில்)

* சிறுநீர் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் (சிறுநீர்ப் பை மற்றும் இனப்பெருக்க உறுப்புகள்)

* கை மற்றும் கால்கள்

* மார்பு மற்றும் அடிவயிற்றில் இப்படி எந்த பகுதியில் வேண்டுமானாலும் இந்த புற்றுநோய் கட்டிகள் உண்டாகலாம்.

ராபடோமியோசர்கோமா புற்றுநோயின் காரணங்கள்:

ராபடோமியோசர்கோமா புற்றுநோயின் காரணங்கள்:

இந்த புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். உயிரணுக்களின் டி. என். ஏ வில் ஏற்படும் சில மாற்றங்களால் இந்த புற்றுநோய் கட்டிகள் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.

ராபடோமியோசர்கோமா புற்றுநோயின் அறிகுறிகள்:

ராபடோமியோசர்கோமா புற்றுநோயின் அறிகுறிகள்:

இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்படும். அவையாவன

* தலைவலி

* கண்களில் கொப்புளங்கள் மற்றும் வீக்கம் உண்டாதல் ஏற்படும்

* மூக்கு, தொண்டை மற்றும் காதுகளில் இருந்து இரத்த போக்கு ஏற்படுதல்

* சிறுநீர் மற்றும் மலத்தில் இரத்த போக்கு ஏற்படும்

* பெண்ணுறுப்பு பகுதியில் அல்லது மலவாய் பகுதியிலும் இரத்த போக்கு உண்டாகும்.

புற்றுநோயின் வகைகள்:

புற்றுநோயின் வகைகள்:

இந்த ராபடோமியோசர்கோமா மூன்று வகைப்படுகிறது. அவையாவன:

புருன்- ராபடோமியோசர்கோமா

இந்த புற்றுநோய் பிறந்த 4 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடமே இது காணப்படுகிறது. தலை, கழுத்து, பிறப்புறுப்புகள் அல்லது மலக்குடல் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.

அல்வியோலர்

இந்த வகை பொதுவாக கைகள், கால்கள், மார்பு, அடிவயிறு அல்லது பிறப்புறுப்புகளில் காணப்படுகிறது. இது 19 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் காணப்படுகிறது. இது இளம் வயது குழந்தைகளிடம் காணக்கூடியதாக உள்ளது.

அனாபிளாஸ்டிக்

இது ஒரு அரிய வடிவமான புற்றுநோய். இந்த புற்றுநோய் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளிடம் காணப்படுகிறது.

சிகிச்சை முறைகள்:

சிகிச்சை முறைகள்:

அறுவை சிகிச்சை

ராபடோமியோசர்கோமாவை குணப்படுத்த அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் நீண்ட நாளான கட்டிகளை கட்டுப்படுத்த முடியும். கட்டியின் அளவு மற்றும் இருப்பிடத்தை பொறுத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

கதிர்வீச்சு சிகிச்சைகள்

புற்றுநோய் கட்டிகளின் வீரியத்தை குறைத்து சுருக்க கதிர்வீச்சு சிகச்சைகள் செய்யப்படுகின்றன. இதன் மூலம் கட்டியின் அளவை எளிதாக குறைத்து பின்னர் லேசாக அறுவை சிகிச்சை செய்து விடுகின்றனர்.

ஹீமோதெரபி சிகிச்சைகள்

இந்த தசை செல் புற்றுநோயை போக்க ஹீமோதெரபி சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் கட்டிகளை 80 சதவீதம் வரை குறைக்க முடியும். இதைத் தவிர நோயெதிப்பு மருந்துகளும் நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது. மேற்கண்ட சிகிச்சை முறைகள் ராபடோமியோசர்கோமா புற்றுநோயை விரட்ட உதவியாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.Source link

Related Post

- 9

உங்களுக்கு உயர் அழுத்தம் இருக்கா? இதனை முழுசா கட்டுப்படுத்த இந்த 10 மூலிகைகள் போதும்!

Posted by - மார்ச் 24, 2021 0
உங்களுக்கு உயர் அழுத்தம் இருக்கா? இதனை முழுசா கட்டுப்படுத்த இந்த 10 மூலிகைகள் போதும்! உயர் இரத்த அழுத்தம் முதியவர்கள் மத்தியில் பொதுவாக காணப்படும் ஒரு பிரச்சினை…
- 11

சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் ஏற்படும் விளைவுகள்!

Posted by - அக்டோபர் 30, 2020 0
சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் ஏற்படும் விளைவுகள்! சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும். சாப்பிடும் போது ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதற்கான…
- 13

அல்சரை ஈஸியா குணப்படுத்தலாம்! அற்புதமான நாட்டு வைத்தியம்

Posted by - நவம்பர் 24, 2020 0
அல்சரை ஈஸியா குணப்படுத்தலாம்! அற்புதமான நாட்டு வைத்தியம் காரம், மசாலா நிறைந்த உணவுகள் சாப்பிடுதல், மதுபானம் அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டி, மருத்துவக் கதிரியக்கத்திற்கு…
- 15

பயனுள்ள 10 அடிப்படை மருத்துவ குறிப்பு இதோ!

Posted by - நவம்பர் 9, 2020 0
பயனுள்ள 10 அடிப்படை மருத்துவ குறிப்பு இதோ! நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம். தேங்காய் எண்ணையில் கற்பூரம்…
- 17

வெறும் 7 நாட்களில் தொப்பையை குறைக்க உதவும் முருங்கைகீரை ஜீஸ்!

Posted by - நவம்பர் 14, 2020 0
வெறும் 7 நாட்களில் தொப்பையை குறைக்க உதவும் முருங்கைகீரை ஜீஸ்! முருங்கைக்கீரையில் பல்வேறு மருத்துவ நன்மைகள் உள்ளன என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். …

உங்கள் கருத்தை இடுக...